என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவன்"
- சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமல்ல, அவர்களின் நல்ல செயல்கள் குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று விடும்.
- மேம்பாலத்தின் மேல செல்ல சிறுவன் அவர்களை தள்ளுவது போலவும், அதை தனது பொறுப்பாக கருதி அந்த சிறுவன் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன.
சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமல்ல, அவர்களின் நல்ல செயல்கள் குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று விடும். அந்த வகையில் அவனிஷ் ஷரன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், மேம்பாலத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதையும், அப்போது ஒரு குடும்பத்தினர் சைக்கிளில் செல்வது போன்றும் காட்சிகள் உள்ளது. அதில் மேம்பாலத்தில் சைக்கிளில் செல்வதற்கு பெற்றோருக்கு சிறுவன் உதவுகிறான். அதாவது பெற்றோரை சைக்கிளில் வைத்துக் கொண்டு மேம்பாலத்தின் மேல செல்ல சிறுவன் அவர்களை தள்ளுவது போலவும், அதை தனது பொறுப்பாக கருதி அந்த சிறுவன் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன.
வாழ்நாள் முழுவதும் இதுபோன்று பெற்றோருக்கு ஆதரவாக இருங்கள் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால் சிலர் குழந்தையை இதுபோன்று கஷ்டப்படுத்தலாமா? என்று விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
- நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.
- எதிர்பாராதவிதமாக கண்ணன் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் கண்ணன் என்ற சரவணன் (வயது 10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்கு அருகே உள்ள மாறனேரி குளத்தில் குளிப்பதற்காக கண்ணன் சென்றுள்ளான்.
அங்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது கண்ணன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான். அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளான். இதனை கண்ட அவனது நண்பர்கள் , ஊருக்குள் சென்று பெரியோர்களை அழைத்து வருவதற்குள் கண்ணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு ஆண்டுக்கு பிறகு 14 வயது சிறுவன் கைது
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில் :
கேரள மாநிலம் விழிஞ்சம் கல்வெட்டான்குழி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நசீம். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மகன் ஆதில் முகம்மது (வயது 12).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டு விளை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 6-ந்தேதி ஆதில் முகம்மது திடீரென மாயமானார்.
இந்த நிலையில் 8-ந்தேதி அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகம்மது பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலங்க வில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஆதில் முகம்மதுவின் தாயார் சுஜிதா கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆதில்முகம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை தொடங்கினார்கள். டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
சம்பவத்தன்று ஆதில் முகம்மதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதில் முகம்மது குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட போது டி-ஷர்ட் எதுவும் அணியவில்லை. ஆனால் அவர் வீட்டில் இருந்து சென்றபோது டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
கடந்த 6 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 304(2) ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லுதல், 201 தடயத்தை மறைத்தல், 202 செல்வதை சொல்லாமல் மறைத்தல் ஆகிய பிரிவு களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் சிறுவன் கூறினான்.
தஞ்சாவூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 33).
இவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். பின்னர் அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
அதுமட்டுமின்றி அந்த சிறுவனுக்கு ரூ.10 கொடுத்து விட்டு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இது குறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.
பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து சதாம் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
- 17 வயது பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார்
- சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடலூர்:
கடலூரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி உடல்நிலை சரியில்லை என உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).
இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மது குடிக்கும் பழக்கம் உள்ள தீனா, இன்று காலை இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்த தகவல் அறிந்த கிச்சிப்பா ளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீனா வின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் காளிகவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தீனா (வயது 17). இவர் மேள கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள தீனா, இன்று காலை இவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கிச்சிப்பா ளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீனா வின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை சித்திரை திருவிழாவின்போது இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிதி வழங்க கோரி கலெக்டரிடம் திருமாறன் மனு அளித்தார்.
- சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
மதுரை
மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின் போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார்-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் பிரேம்குமார் (வயது 10) ஆற்றில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தான். அவனது குடும்பத்தினர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களுடன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனும் உடன் வந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் 5 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதால் கடந்த 3-ந் தேதி வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்ேதன்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதை அலட்சியப் பப்படுத்தியதன் காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மேலும் பிரேம்குமாரின் தந்தை, தாயை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தினேஷ், பிரேம் குமார் ஆகிய 2 மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் பிரேம்குமாரின் இறப்பு அந்த குடும்பத்துக்கு பெரிய இழப்பாக உள்ளது.
எனவே தமிழக அரசு இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுவன்- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வீரவேல். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி புவனேசுவரி மகன் லிவின்ஷாவுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று அங்கு வந்த வீரவேல் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வீரவேல் அரிவாளால் மனைவியை வெட்ட வந்தார். அப்போது அங்கிருந்து மகன் லிவின்ஷா, புவனேசுவரியின் சகோதரர் ஆகியோர் தடுத்தனர். இதில் 2 பேருக்கும் வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது. இது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை தேடி வருகின்றனர்.
- வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
- புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் சாய். தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றுமாலை தேவேந்திரனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
அப்போது சாய் தனது வீட்டின் பால்கனியில் உள்ள கேட்டை திறந்து வெளியில் இருந்த சிறிய தூணில் நின்று ஒளிந்து கொள்ள இறங்கினார்.
இதில் கால் தவறி அவன், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.
சென்னை:
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.
மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.
திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேலும் 2 பேர் தலைமறைவு
- 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32).
இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளாலும் வெட்டியது.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அரவிந்தை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர் பாக இந்த தாக்குதல் சம்ப வம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த எபனேசர் (19) கன்னியா குமரியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (35) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. 3 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தினர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.