search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164241"

    இந்திய படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் துரோகம் மட்டுமே செய்வதாக எல்லைப் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
    ஜம்மு:

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 29–ந் தேதி இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைக்கான பொது இயக்குனர்கள் சந்தித்து பேசினர்.

    அப்போது 2003–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தீவிரமாக கடைப்பிடிப்பது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் எல்லையில் பாகிஸ்தான் அடாவடியால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பிய மக்கள் தங்கள் வீடு திரும்பினர். ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த உறுதிமொழி ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை. தொடர்ந்து அடாவடியை தொடங்கியது.

    எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி உள்பட 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் இந்திய பாதுகாப்பு படைகள் போர் நிறுத்த ஒப்பந்ததின் புனிதத்திற்கு மதிப்பளிக்கிறது, ஆனால் பாகிஸ்தான் துரோகம் மட்டுமே செய்கிறது என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி கேஎன் சவுபாய் பேசுகையில், “நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம், போர் நிறுத்தமோ, நிறுத்தம் கிடையாதோ, எல்லையில் எப்போதும் பாதுகாப்பு தீவிரமாகவே இருக்கும், கண்காணிப்பும் தீவிரமாக இருக்கும், என்றார்.

    பாகிஸ்தான் மீதான நம்பிக்கை தொடர்பாக பேசுகையில், இருநாட்டு அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தியப்படைகள் எப்போதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அப்படி கிடையாது, அதனை மீறுகிறது. ஒப்பந்தத்தை இந்தியா எப்போதும் மதிக்கிறது, ஆனால் பாகிஸ்தான் மதிப்பது கிடையாது. பாகிஸ்தான் அதனுடைய பணியை செய்கிறது, அதற்கு சரியான பதிலடியை இந்தியா கொடுக்கும்,” என எச்சரிக்கை விடுத்தார்.  #India #Pakistan #BSF
    பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் 3 பயங்கரவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் காஷ்மீர் தளபதி தெரிவித்துள்ளான்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது, லக்சர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 அமைப்புகளும் இந்தியாவில் நுழைந்து அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

    இவை தனித்தனியாக செயல்பட்டு இந்தியாவில் தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தப் போவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் காஷ்மீர் தளபதிகளில் ஒருவராக செயல்பட்டு வந்த ஆசிக் பாபா என்பவனை ராணுவத்தினர் கைது செய்தனர். அவனிடம் தற்போது தேசிய புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவன் பல்வேறு தகவல்களை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறான். 2017-ம் ஆண்டு புல்வாமா போலீஸ் குடியிருப்புக்குள் 3 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தான் நடத்தினார்கள் என்ற தகவலை ஆசிக் பாபா தெரிவித்தான்.

    மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தானும் இருந்ததாக கூறினான். அந்த தாக்குதலை முப்திவாகாஸ் என்ற பயங்கரவாதி முன்னின்று நடத்தியதாகவும் கூறினான்.


    கடந்த மார்ச் மாதம் ராணுவத்துடன் நடந்த சண்டையில் முப்திவாகாஸ் கொல்லப்பட்டான். அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் சஞ்சுவானா ராணுவ முகாமில் நடந்த தாக்குதலுக்கும் முப்தி வாகாஸ்தான் காரணமாக இருந்தான் என்றும் ஆசிக் பாபா தெரிவித்தான்.

    ஆசிக் பாபா 2015-ல் இருந்து 2017 வரை பல தடவை பாகிஸ்தானுக்கு சென்றதாகவும், அங்கு ஜெய்ஷ் இ முகமது தலைவராக உள்ள மசூத் அசாரின் தலைமை தளபதிகளை அடிக்கடி சந்தித்ததாகவும் தெரிவித்தான்.

    பாகிஸ்தானில் ஹைபர் பக்துன் ஹவாவில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாமில் தங்கி இருந்து பல்வேறு பயிற்சிகளை பெற்றதாகவும் அவன் கூறினான்.

    தற்போது லஸ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது ஆகிய 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்தியாவில் பல கட்ட தாக்குதலை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தான்.

    இந்த 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ..எஸ்.ஐ. ஆகியவை தேவையான ஏற்பாடுகளை செய்து திட்டம் வகுத்து கொடுத்து இருப்பதாகவும் அவன் கூறினான்.


    காஷ்மீர் எல்லையில் இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏராளமான தற்கொலை படை பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக தெரிவித்த அவன், அவர்களை அப்துல்லா என்ற பயங்கரவாதி தலைமை ஏற்று வழி நடத்தி வருவதாகவும் கூறினான்.

    பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ராணுவமே தேவையான பயிற்சிகளை வழங்குவதாகவும், இந்தியாவில் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் அவன் கூறினான்.

    மேலும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான பண உதவி தங்களுக்கு கிடைப்பதாகவும் ஆசிக் பாபா தெரிவித்தான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளின் பல்வேறு சதித்திட்டங்கள் பற்றியும் அவன் தெரிவித்து வருகிறான்.
    இந்தியா இந்த வருடத்திற்குள் தொழுநோய் இல்லாத நாடாகி விடும் என மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
    பல்லியா:

    உத்தர பிரதேசத்தில் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியாவில் இருந்து இவ்வருடத்திற்குள் தொழுநோய் ஒழிக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டிற்குள் கலா ஆசார் (கருப்பு காய்ச்சல்) இல்லாத நாடாகி விடும் என கூறினார்.

    அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும்பொழுது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு வரும் டெட்டனஸ் மற்றும் வேறு சில நோய்களும் கட்டுக்குள் உள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
    முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போல சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம் இருந்ததை அடுத்து அந்த புத்தகங்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தடை விதித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்புக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ்மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.

    இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்த மாலத்தீவு எம்.பி.யை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது தொடர்பாக இந்தியாவிடம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
    சென்னை:

    மாலத்தீவில் அப்துல்லா யாமீன் தலைமையில் அதிபர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி. அகமது நிகன். இவர் மருத்துவ காரணங்களுக்காக கடந்த திங்கட்கிழமை இரவு சென்னை வந்தார்.

    இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு வழியாக இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். ஆனால் அவரை அனுமதிக்க குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவரது டிப்ளோ மேட்டிக் பாஸ்போர்ட் குறித்து விசாரணை செய்த பிறகு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த விமானத்தில் இந்தியாவை விட்டு செல்லுமாறும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு பிறகு அகமது நிகன் எம்.பி. இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மாலேவுக்கு சென்றார்.

    அகமது எம்.பி. அதிபர் அப்துல்லா யாமினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். பாராளுமன்ற குழுக்களுக்கு பி.பி.எம். கட்சியின் தலைவராக உள்ளார்.

    மாலத்தீவு எம்.பி.யை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரி அகிலேஷ் மிஸ்ராவிடம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறியதாவது:-

    இது துரதிருஷ்டவசமானது. அகமது நிகன் எம்.பி. மருத்துவ பரிசோதனைக்காக சென்னைக்கு அடிக்கடி சென்று வருவார். அவரை அனுமதிக்க மறுத்தது எதிர்பாராத ஒன்றாகும். அதிபர் யாமினின் சகோதரி, மைத்துனர் ஆகியோருடன்தான் அவர் சென்றார். அவர்களை மட்டும் செல்ல அனுமதித்து உள்ளனர். நிகனுக்கு அனுமதி மறுத்ததற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக அகமது நிகன் எம்.பி. கூறும் போது அனுமதி மறுத்தது மிகவும் கொடுமையானது. அண்டை நாடான இந்தியா இது மாதிரியான கொள்கையை நடைமுறைபடுத்துவதால் எந்த பயனும் இல்லை என்றார்.

    இந்தியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக எம்.பி.யின் ஆதரவாளர்கள் மாலேயில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சிறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்தியாவில் மதிப்பெண் அடிப்பையில் மாணவர்களை மதிப்பீடு செய்வது கல்வி முறையின் தரத்தை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். #Indiaeducationsystem
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மனப்பாடம் செய்து தேர்வு எழுதிகின்றனர். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கவில்லை.

    இதுகுறித்து பேசிய இந்திய விண்வெளி கழகத்தின் முன்னாள் தலைவர், ஜி.மாதவன் நாயர், மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மிகவும் பழைய நடைமுறை. இது ஆரோக்கியமானது அல்ல. அறிவை வளர்த்து கொள்ள உதவுவது கிடையாது.


    மணிப்பால் குளோபல் கல்வி சர்வீஸ் தலைவர் கூறுகையில், இப்போது உள்ள கல்வி முறை மதிப்பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. மாணவர்களை உற்றாகப்படுத்த படிப்பை தவிர மற்ற துறைகள் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். செயல்முறை கல்வி மிகவும் முக்கியம்.

    ஒவ்வொரு மாணவர்களுக்கு தனித்தனி திறமைகள் உள்ளன. அவர்கள் அனைவரையும் ஒரே கல்வி முறையில் திணிப்பது சரியன்று. அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி அளிக்க வேண்டும். இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தரமற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

    அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதை விட குறைந்த எண்ணிக்கையில் தரமான கல்லூரிகள் இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். #Indiaeducationsystem

    இந்தோனேசியாவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா-இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார். #ModiinIndonesia #PMModi
    ஜகர்த்தா:

    சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி 5 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார். பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இரவு இந்தோனேசியா சென்றடைந்தார். அவருக்கு அதிபர் சார்பில் உற்றாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று போரில் உயிர்நீத்த ராணுவவீரர்களுக்கு மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவை வலிப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். பின் இந்தியா-இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உட்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:-


    பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்தியா எப்போதும் இந்தோனேசியாவிற்கு உறுதுணையாக நிற்கும். சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் கவலை அளிக்கிறது.

    இந்தோ-பசுபிக் பகுதியில் மட்டுமல்லாமல் அதனை தாண்டியும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஆற்றல் இந்தியா-ஏசியன் கூட்டுறவிற்கு உள்ளது.

    இந்தியா மற்றும் இந்தோனேசியா ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்தோ-பசுபிக் பகுதியினை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.

    என மோடி கூறினார். #ModiinIndonesia #PMModi
    போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு வேண்டாம் என இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது.

    இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது கூடுதலாக உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் ரஜோரி, சம்பா, உரி ஆகிய பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. ஹாட்லைன் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 

    2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது. 
    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்ற தலைப்பில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #shanghai2018 #SCO2018
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்ற தலைப்பில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #shanghai2018 #SCO2018

    சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 23 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு வருவதாகவும், அவர்களை பாகிஸ்தானுக்கு வரவேற்பதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #shanghai2018 #SCO2018 #Pakistan #India
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் ஹாக்கி அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. #AsiaHockey #AsianWCT
    டோங்கா சிட்டி:

    தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜப்பான் மற்றும் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற மலேசியாவிற்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.



    இந்திய வீராங்கனைகள் குர்ஜித் கர்(17 வது நிமிடம்), வந்தனா கத்ரியா (33) மற்றும் லால்ரீம்சியாமி(40) தலா ஒரு கோல் அடித்தனர். கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குர்ஜித் இந்தியாவிற்கு முதல் கோலை பெற்று தந்தார். சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மலேசியாவின் பெனால்டி பாலை லாவகரமாக தடுத்தனர். இதனால் இந்தியா எளிதான தங்கள் வெற்றியை பெற்றது.

    இது இந்தியாவிற்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றியாகும். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும், 19-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி தென்கொரியா அணியுடன் மோதுகிறது. இறுதி போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. #AsiaHockey #AsianWCTc
    மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் திடீர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான சந்திப்பு நடந்துள்ளது. #India #NorthKorea
    பியான்ங்யன்ங்:

    ஏவுகணை சோதனை, அணு ஆயுத பரிசோதனை ஆகியவற்றை ஓரங்கட்டிவிட்டு மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ள வடகொரியா, முதற்கட்டமாக தென்கொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    இதன் பின்னர், அடுத்த மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சிங்கப்பூரில் சந்திக்க உள்ளார். இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் நேற்று முன் தினம் திடீரென முன்னறிவிப்பு இன்றி வடகொரியா சென்றுள்ளார்.

    அந்நாட்டு துணை அதிபர் கிம் யோங் டேய் மற்றும் வெளியுறவு, கலாச்சார துறை மந்திரிகளை வி.கே சிங் சந்தித்துள்ளார். பிராந்திய அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு பாகிஸ்தானுடன் உள்ள அணு ஆயுத உறவு குறித்து வி.கே சிங் தனது கவலையை தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் அன்று வடகொரியாவுக்கான இந்திய தூதராக அதுல் கோட்சர்வ் நியமிக்கப்பட்டார். பதவி்யேற்ற இரண்டு நாட்களில் இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பை அவர் நடத்த முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

    கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. #India #NorthKorea
    ×