search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானவரி"

    அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்த சீன நடிகையை போலீசார் கைது செய்து வருமான விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PaneBingang
    பெய்ஜிங்:

    பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காணவில்லை. திடீரென மாயமானார்.

    இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற் பட்டது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது.

    இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மவுனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

    அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர்.

    இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அதாவது ரூ.950 கோடி அபராதம் விதித்தது. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

    சீனாவில் வருமான வரி செலுத்தாதவர்கள் இது போன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நடிகை பேன் பிங்பிங் தற்போது தான் இத்தகைய பிரச்சினையில் சிக்கியுள்ளார். #PaneBingang
    பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498. அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. #PMModi #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2017-18-ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் கையிருப்பு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498.

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் மோடிக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடி. காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கி என்.எஸ்.சி.எச். கிளையில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 இருப்பு தொகை உள்ளது.



    அதே கிளையில் அவருக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 288 வைப்பு நிதி உள்ளது. இவை தவிர ரூ.20 ஆயிரத்துக்கு வரிசேமிப்பு பத்திரங்கள் உள்ளன. இவை 2012-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி அன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 18 ஆயிரத்து 235 ரூபாய்க்கு தேசிய சேமிப்பு சான்றிதழும், 1 லட்சத்து 59 ஆயிரத்து 281 ரூபாய்க்கு எல்.ஐ.சி. பாலிசியும் உள்ளது.

    அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 67 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கையிருப்பு இருந்தது.

    மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு தங்க நகைகள் எதுவும் வாங்கவில்லை. அவருக்கு சொந்தமாக 4 மோதிரங்கள் மட்டுமே உள்ளது. 45 கிராம் எடையுள்ள அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 60.

    மோடியின் பெயரில் கார் எதுவும் இல்லை. மேலும் சமீபத்தில் அவர் மோட்டார் வாகனம், விமானம், கப்பல், உல்லாச படகு போன்ற எதுவும் வாங்கவில்லை. வங்கிகளில் அவர் கடன் எதுவும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. #PMModi #Modi

    வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசம் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். #IncomeTax
    சென்னை:

    வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

    வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

    அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

    வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

    மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர். 
    ×