search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான்"

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • டிரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • ட்ரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக கூறினார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக சவுதி அரேபியாவைத் தாக்க ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் இதேபோன்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கியதாக சல்லிவன் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து தமது சுற்றுப்பயணத்தின் போது பைடன் ஆலோசிக்க உள்ள நிலையில், ஈரான் குறித்த சல்லிவன் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ==

    • ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சியை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டார்.
    • இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது. இது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதை தடுக்க வகை செய்கிறது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அடுத்து அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் விலகினார். தற்போது அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் சேர்க்க முயற்சித்து வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவந்தது.

    இதற்கிடையே ஈரான் தனது அணுசக்தி தளங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் கண்காணிப்பு கேமராக்களை மூடிவிட்டது. தற்போது ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    தோஹா பேச்சுவார்த்தை முடிவின்றி முடிந்ததற்காக ஈரானும், அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டின. அணு உலைகளில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருவதாகவும், இதற்கான சோதனைகளை ஈரான் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்ததாகவும், உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் டெஹ்ரானில் செயல்பட்டு வரும் இங்கிலாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரி மற்றும் சில வெளிநாட்டினரை ஈரான் புரட்சிப் படையினர் கைது செய்தது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர்.
    • விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன.

    கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு பயணிகள் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, தபாஸ் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன. மேலும், 12 ஆம்புலன்ஸ்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் மாகாணத்தின் மேலாண்மைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IranSanctions #US
    தி ஹேக்:

    ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.

    அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பான விசாரணை நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் நடத்தது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர் பொருளாதாரத் தடைகள் குறித்த சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில், ''மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் அந்நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும். எனவே இதனைக் கவனத்தில் கொண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்'' என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

    எனினும், சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின்பற்றுகிறாரா? அல்லது இந்த வழக்கில் அமெரிக்கா மேல்முறையீடு செய்கிறதா? என்பது தெரியவில்லை. 
    ஈரானில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர். #Iran #AlcoholPoision
    டெஹ்ரான்:

    ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இருந்த போதிலும் அந்நாட்டு மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை ஈரான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Iran #AlcoholPoision
    ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. #Iran #US
    நியூயார்க்:

    ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.

    இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஈரான்  ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. அதில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்  பெடரிகா மொஜர்னி கூறும்போது,  “ஈரானுடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக செலுத்தப்படும் பணம். ஈரானுடன் சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடருவதற்கு உதவும் பொருளாதார இயக்கநர்களுக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்க சிறப்பு வழி முறைகளை உருவாக்க வேண்டும்" என்றார்.
    அமெரிக்கா மீது உலக நாடுகள் நம்பிக்கை இழந்துவிட்டதாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரீப் தெரிவித்துள்ளார்.
    டெஹ்ரான் :

    ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.

    அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் தனது நட்பு நாடுகளையும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் ஈரானின் பணமான ரியாலின் மதிப்பு குறைந்துள்ளது. பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. ஈரானின் பணமதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகர்கள் டெஹ்ரானில் பாராளுமன்றம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயிலான பேச்சுவார்த்தைக்கு தாயார்  டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், பேச்சுவாத்தைக்கு உடன்படாமல் ஈரான் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரீப், ’ஒழுங்கற்ற முடிவுகளால் அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்ட . இதன்பிறகும், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்பது மிகவும் கடினமானது.

    பேச்சுவார்த்தை தொடர்பாக இப்போது தான் அமெரிக்கா யோசிக்க தொடங்கியுள்ளது, ஏற்கெனெவே பல ஒழுங்கற்ற முடிவுகளை எடுத்துள்ள அமெரிக்காவை நாங்கள் எப்படி நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக 5 புதிய விமானங்களை ஈரான் வாங்கியுள்ளது.
    டெஹ்ரான் :

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. 

    ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு நிறுவனமான ஏடிஆர் உடன் 72-600 ரக பயணிகள் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி ஏற்கனவே 8 விமானங்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது அந்நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. 

    இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா வித்தித்துள்ள பொருளாதார தடைகள் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், தடைக்கு ஒரு நாள் முன்னதாக ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஐரோப்பாவிடம் இருந்து 5 ஏடிஆர் 72-600 ரக விமானங்களை ஈரான் வாங்கியுள்ளது. 

    குறிப்பிட்ட 5 பயணிகள் விமானங்களும் நேற்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் வந்தடைந்ததாக ஈரான் சாலை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி அப்பாஸ் அகோவ்ந்தி தெரிவித்துள்ளார். 

    மேலும், ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடையே ஈரானுக்கு உள்ள நல்லுறவு, அமெரிக்காவின் பொருளாதார தடையினால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என அப்பாஸ் தெரிவித்தார். 
    ஈரான் உடனான உறவை துண்டிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு இணை மந்திரி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். #MansoonSession #VKSingh
    புதுடெல்லி:

    ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. 

    நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிடில் பல விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது.

    சவூதி, ஈராக் நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிகாவின் எச்சரிக்கை இந்தியா, சீனா என பல நாடுகளுக்கும் பொருந்தும் நிலையில், இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



    இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-

    ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

    என அவர் பேசினார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
    சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. #TrumpTravelBan
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த பயணத்தடை உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி விமர்சிக்கப்பட்ட நிலையில், வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

    வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண கோர்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை சரியே என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
    அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Iran #Isreal
    டெல்அவிவ்:

    அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரபு நாடுகளில் ஒன்றான ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானுக்கு நெருக்கடி கொடுத்தன.

    இதையடுத்து ஈரான் சற்று இறங்கி வந்தது. இது சம்பந்தமாக ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் முறித்து கொண்டன.

    இதைத்தொடர்ந்து ஈரான் அணு செறிவூட்டல் திட்டத்தை தீவிரமாக்கி உள்ளது. இதன் மூலம் அணு குண்டுகளை ஈரானால் தயாரிக்க முடியும்.

    ஈரானை பொறுத்தவரை அதன் முக்கிய எதிரி நாடாக இஸ்ரேல் உள்ளது. அந்த அணுகுண்டுகளை இஸ்ரேலுக்கு எதிராகத்தான் ஈரான் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய இஸ்ரேல் முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஏற்கனவே சதாம் உசேன் அதிபராக இருந்த காலத்தில் ஈராக் நாடு அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால் தங்களுக்குதான் ஆபத்து என கருதிய இஸ்ரேல் ரகசியமாக போர் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலைகளை முற்றிலும் தகர்த்தது.

    அதேபோல் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியையும் முறியடிக்க இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


    இது சம்பந்தமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறும் போது, ஈரான் தயாரிக்க திட்டமிட்டுள்ள அணுகுண்டுகள் எங்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நாங்களும் உரிய பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொள்வோம் என்று கூறி உள்ளார்.

    ஒரு வேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பெரும் போராக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. #IranNuclearBomb #IranNuclearDeal #Iran #Isreal
    ×