என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 164942"
- தி.மு.க. ஆட்சியை அகற்றாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் என மதுரையில் எச்.ராஜா பரபரப்பாக பேசினார்.
- திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.
மதுரை
மதுரையில் பா.ஜ.க. வக்கீல் பிரிவு பொறுப் பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் மாநில வக்கீல் அணி தலைவர் வணங்காமுடி, மாவட்ட தலைவர் அய்யப்பராஜா, துணைத்தலைவர்கள் நிரஞ்சன்குமார், அருண், தமிழரசன், அமிழ்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசுகையில், தமிழகத்தில் இந்து விரோத மனபான்மை அதிகரித்து வருகிறது. நாம் தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளோம். திராவிட தீயசக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியுள்ளது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றாவிட்டால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். திராவிட மாடல் என்பது தமிழகத்தை குடிபோதை நாடாக மாற்றியது என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம்.
- ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும்.
மதுரை:
பா.ஜனதா தேசிய செயலாளரும், மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் அரங்கத்திற்குள் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் தலைவர் அவ்வாறு பேசினார், இவ்வாறு பேசினார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கிறது. அதனை பொருட்படுத்த வேண்டாம். அவை முறையாக கூறப்பட்ட தகவல் அல்ல. அவர்கள் சொன்னதாக கசிந்த வார்த்தைகள்.
கூட்டணி தொடர்பாக நாங்கள் மையக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்களே முடிவு செய்து அறிவித்தாலும் அதனை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை.
கூட்டணி குறித்து உறுதியான முடிவுகள் அறிவிக்கும் வரை பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பொது வெளியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.
சமீபத்தில் நான் டெல்லிக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரை பார்த்து பேசினேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் அது மத்தியில் இருக்கும் பா.ஜனதாதான் முடிவு செய்யும். இது மாநிலத்தில் உள்ள தலைவர்களோ, நிர்வாகிகள் குழுவோ முடிவு செய்ய முடியாது. எங்கள் கருத்துக்களை மத்திய குழுவிடம் சொல்லலாம்.
தி.மு.க. உடைந்த பானை. இனி ஒட்டாது. தி.மு.க. தமிழகத்தில் ஒரு கட்சியாக இருக்காது. பல்வேறு கட்டங்களில் விரிசல் ஏற்படும். தி.மு.க.வின் டி.என்.ஏ. மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு தலைவர் சொல்வதற்கு கட்டுப்படும் நிலை இல்லை. இதனை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை.
- இப்போது 500 டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறந்திருக்கிறார்கள்.
மானாமதுரை:
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மானாமதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தமிழக ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் (தி.மு.க.) முடிவு பண்ண முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கையெழுத்தாக இருக்கும் என கனிமொழி சொன்னார். ஆனால் இப்போது இன்னும் 500 கடைகள் அதிகமாக திறந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். அதற்கு காரணம் டாஸ்மாக். எனவே தி.மு.க.வை வேரோடு கலைவதற்கான அனைத்து செயல்களையும் பா.ஜ.க.செய்யும். தமிழகத்தில் தினமும் கொலைகள், குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை கொடுத்து வருவது பா.ஜ.க அரசு.
- மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது.
தேனி:
தேனியில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
பா.ஜ.க அரசின் சாதனைகளோடு தி.மு.க அரசின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும். 43 கோடி மக்களுக்கு ஜன்தன்வங்கி கணக்கு, 12 கோடி கழிப்பறை, 9 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு மத்திய பா.ஜ.க அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களை கொடுத்து வருவது பா.ஜ.க அரசு. தமிழகத்தில் உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.
நேரு முதல் கருணாநிதி வரை இந்திய நிலப்பரப்புகளை மற்ற நாடுகளுக்கு தாரைவார்த்து கொடுத்ததை தான் சாதனையாக கூறி கொள்கின்றனர். தற்போது பிரதமர் மோடி அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமரின் கட்சத்தீவை மீட்டுத்தருமாறு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது.
தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் ஊழல் பட்டியல் டெல்லி சென்றுள்ளது. விரைவில் பலர் சிக்குவார்கள். இந்து கோவில்களில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. புதுப்பேட்டை கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர், இன்று திருநாவுக்கரசர் உருவாக்கிய ஆதீனத்தை மிரட்டுகிறார். இருக்கிற கோவிலை பராமரிக்க தகுதியற்ற அரசு சிதம்பரம் கோவிலை கைப்பற்ற முயற்சி எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓரினச்சேர்க்கை, கள்ள உறவு, அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கான அனுமதி என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பரபரப்பாக பேசப்படுகிறது. மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் எந்த விஷயமாக இருந்தாலும் அது நல்லதல்ல.
நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்ததாக எச்.ராஜா பேசிய பேச்சு, ஒரு ‘வெர்சனில்’ இல்லை, இன்னொரு ‘வெர்சனில்’ இருக்கிறது. அந்த ஆடியோ ‘டேப்’ வெளிநாட்டில் நவீன தொழில்நுட்ப வழியாக ‘எடிட்’ செய்து மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தடயவியல் துறைக்கு உள்ளது. தவிர இது எச்.ராஜா பிரச்சினை. அதை அவரே சரி செய்வார். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #SVeShekher
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
இதற்கிடையே, திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களின் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #HRaja
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்