என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 164957
நீங்கள் தேடியது "வரிவிதிப்பு"
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்காமல் இருக்க அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
நியூயார்க் :
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜா’ (இந்தியா) அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்தற்கான காரணம் என்ன ? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதிக்கிறது. ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம், இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது அதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்ததாக அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக இந்தியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இதுவரை அவர்கள் வேறு எந்த நாட்டுடனும் இதைப்போன்று ஒப்பந்தம் செய்தது கிடையாது.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கப்படும் என எச்சரித்த நிலையில் என்னை மகிழ்விப்பதற்க்காக இந்த ஒப்பந்தம் செய்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது.’
இவ்வாறு அவர் தெரிவித்தார். #DonaldTrump

சூலூர் பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டாளர்களிடம் 65 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து வருவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொது மக்களின் வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்திற்கு 65 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த சென்ற போது 95 ரூபாய் மின் கட்டணத்திற்கு மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாயும்,மாநில அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாய் என 158 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, இது அதிகாரிகளின் உத்தரவு கம்பயூட்டரில் வந்த பதிவுப்படி தான் வசூலிக்கிறோம் என கூறினர்.
100 யூனிட் வரை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கும் போது அதற்கு 9 ரூபாய் வரி வசூலிப்பதாக பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த மாதிரியான வரி எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. இலவசத்திற்கும் வரிவிதிப்பது இங்குதான் .இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பொதுமக்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

×

X