search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமரசம்"

    மனைவியுடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினருக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது47). இவர் சம்பவத்தன்று இரவு திருமங்கலம்-சோழவந்தான் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வாகைகுளம் சந்திப்பில் உறவினர் ரமேஷ் (32) மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    முத்து அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது தந்தை செல்வராஜ் (67) ஆகியோர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் முத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீ சில் முத்து புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடும் சந்தித்துப் பேசினர். இதில், பரஸ்பர வரி விதிப்பால் மோசமாகி வந்த இரு தரப்பு வர்த்தக உறவில் சமரசம் ஏற்பட்டு உள்ளது. #DoaldTrump #JeanClaude
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரி விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் கனடா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகின.

    மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படக்கூடிய கார்களுக்கும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தக்க விதத்தில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்தது.



    இதனால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மோசமாகி வந்தது.

    இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்து முடிந்து உள்ளது.

    அது மட்டுமின்றி இரு தரப்பு வர்த்தக உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப், ஜீன் கிளாடுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடைகளை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளது. இரு தரப்பு வர்த்தக உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நாள் சுதந்திரமான, நியாயமான வர்த்தகத்துக்கான நல்ல நாள் ஆகும்.

    நாங்கள் இப்போது முதல் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளோம். இது எங்கே போய் முடியும் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து இருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூடுதலான இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) இறக்குமதி செய்யும். ஐரோப்பிய நாடுகளுடனான சேவைகள், விவசாய வர்த்தகம் அதிகரிக்கும்.

    அமெரிக்க விவசாயிகளிடம் இருந்து அதிலும் குறிப்பாக மத்திய மேற்கு பகுதி விவசாயிகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் மிகக்கூடுதலான அளவில் சோயா பீன்ஸ் வாங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நிருபர்களிடம் பேசும்போது, “ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடனான பேச்சு வார்த்தை நன்றாக அமைந்தது. ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனது முக்கிய நோக்கம், தொழில் ரீதியிலான பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான். தேசிய பாதுகாப்பு தடைகளை விரைவில் மறு மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

    இரு தலைவர்களின் சந்திப்பால் ஏற்பட்டு உள்ள மாற்றங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு வர்த்தக அதிகாரி செசிலியா மால்ம்ஸ்டிராம் வரவேற்று உள்ளார். 
    ×