என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வணிகர்கள்"
திருச்சி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சம் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்த உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மாற்ற வேண்டும். பிளாஸ்டிக்கில் எதை தடை செய்ய வேண்டும் என்பதை அரசு எங்களை அழைத்து பேச வேண்டும்.
ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தடை செய்து விட்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வருகிற 23-ந்தேதி திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், மதுரை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சேலம், கடலூர், வேலூர், கோவை ஆகிய 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய ரதம் ஒன்று டெல்லியில் இருந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ரதம் வருகிற 23-ந்தேதி சென்னை வருகிறது. அன்றைய தினம் உண்ணாவிரதத்தில் டெல்லி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.
மத்திய, மாநில அரசுகள் வணிகர்களுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கின்றன.
பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வருகிற 2019- ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் மாற்று முடிவை எடுத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிளாஸ்டிக் தடை தொடர்பாக வணிகர்களை அழைத்துக் கொண்டு முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். வியாபாரிகள், தொழிலாளர்களை பாதிக்காத வகையில் அரசின் நியாயமான முடிவுக்கு நாங்கள் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டத்தில் விக்கிரமராஜா சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம், துணை தலைவர் பசுபதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #vikramaraja
புதுச்சேரி:
அகில இந்திய வணிகர் சம்மேளன துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கருக்கு பாராட்டு விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது.
புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், பழனி அடைக்கலம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பாலு வரவேற்றார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசங்கருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார். அவர் பேசும்போது:-
புதுவை வியாபாரிகள் தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அரசுக்கு வரியாக செலுத்துகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகிறார்கள். புதுவை அரசு வணிகர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தெற்குமாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்குமாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு விசுவநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், பா.ம.க. முன்னாள் எம்.பி. தன்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி தேவபொழிலன், தமிழ்ச்சங்க தலைவர் முத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் பாபு, அன்பழகன், சரவணன், கணேசன், ஆறுமுகம், அனில்குமார், கலீல் ரகுமான், சித்திக்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார். #narayanasamy #puducherrygovernment
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்