search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    டிஎன்பிஎல் போட்டி இளம்வீரர்களுக்கு சிறந்த தளம் எனவும் கிரிக்கெட்டில் சாதிக்க கடும் பயிற்சி வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார். #TNPL #hemangbadani
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா, தேசிய கல்லூரி அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் மார்ட்டின்ராஜ், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கலந்துகொண்டு, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    மாவட்டங்கள் தோறும் அதிக அளவிலான கிரிக்கெட் மைதானங்கள் இருப்பது சிறப்பான அம்சம் தான். அப்போது தான் நிறைய இளம் வீரர்கள் உருவாகுவார்கள். டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுவது தற்போது இளம் வீரர்களுக்கு சிறந்த தளமாக உள்ளது. வீரர்களாகிய நீங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களிடம் திறமை இருந்தால் டிஎன்பிஎல், ஐபிஎல் போட்டிகள் மட்டு மல்ல, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் கூட விளையாட முடியும்.

    சிறிய மாவட்டத்தில் இருந்து வருகிறீர்களா? சிறிய நகரத்தில் இருந்து வருகிறீர்களா? என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. டோனி சிறிய நகரத்தில் இருந்து தான் கிரிக்கெட்டுக்கு வந்தார். முன்னணி கிரிக்கெட் வீரர்களாக உருவாகிய ஜாகீர்கான், சுரேஷ் ரெய்னா, சேவாக் போன்றவர்கள் எல்லாம் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

    ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமானால் கடும் பயிற்சி அவசியம். அதிகாலையிலேயே எழுந்து மைதானத்துக்கு சென்று விட வேண்டும். அதேபோல் மாலையிலும் பலமணிநேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டில் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் பெற்றோர் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் கட்டாயப்படுத்தி விளையாட வைக்கமாட்டார்கள். நாம் தான் ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் பேசும்போது, மாவட்டங்கள் தோறும் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடும் 150 பேரில் 60 முதல் 70 பேர் சிறிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்க ஆலோசனை செய்து வருகிறார்கள். அவ்வாறு அமைக்கப்படுகிறபோது, அங்கு வருங்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் கூட நடத்தப்படலாம் என்றார். #TNPL #hemangbadani
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மூன்றாவது தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணியை சேர்ந்த அருண் கார்த்திக் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். #TNPL2018 #ArunKarthik
    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    இதில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    இந்த தொடரில் வீரர்கள் வென்ற விருதுகளின் விவரம்:

    ஆட்ட நாயகன் மற்றும் தொடரில் அதிக ரன்கள் (472) எடுத்து தொடர் நாயகன் விருது ஆகியவற்றுடன் அதிக சிக்சர்கள் (23) அடித்த வீரர் விருது அருண் கார்த்திக்க்கு வழங்கப்பட்டது.

    தொடரில் அதிக விக்கெட் (15) வீழ்த்திய வீரர் அபிஷேக் தன்வருக்கு அளிக்கப்பட்டது.

    சிறந்த கேட்ச் பிடித்த வீரர் ஷாருக் கானுக்கும், தொடரில் அதிக பவுண்டரிகள் (45) அடித்த வீரர் விருது ஜெகதீசனுக்கும் வழங்கப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னையில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. #TNPL2018 #DDvMP
    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.

    சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இட்ம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அரை இறுதி வரை தேர்வான அணிகளுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னையில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி நடைபெற்றது.

    கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

    டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டி.என்.பி.எல். கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    திண்டுக்கல் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜெகதீசன் (345 ரன்), விவேக் (249 ரன்), ஹரி நிஷாந்த் (249) ஆகியோரும் பந்துவீச்சில் அபினவ், முகமது (தலா 8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் அணி இந்தப் போட்டித் தொடரில் ஒரு ஒரே ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    மதுரை பாந்தர்ஸ் அணி ஏற்கனவே இரண்டு முறை தோற்றதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அருண் கார்த்திக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 397 ரன் குவித்து இந்தப் போட்டித் தொடரில் முதல் இடத்தில் உள்ளார். 5 அரை சதம் அடித்துள்ளார். தலைவன் சற்குணம் (191 ரன்), சுஜித் சந்திரன் (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

    பந்து வீச்சில் அபிஷேக் தன்வர் (11 விக்கெட்), கவுசிக் (9 விக்கெட்) ஆகியோர் முத்திரை பதித்து உள்ளனர்.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018 #NammaOoruNammaGethu
    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் (திண்டுக்கல்) நடக்க இருந்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    நெல்லையில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணிகள் மோதிய ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெல்லையில் 2 ஆட்டங்கள் நடந்தன. இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின்போது, வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்தனர். அவர்கள், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்களிடம் ரூ.100 கட்டணம் வசூலித்து கொண்டு, பவுண்டரி அடித்தால் ரூ.500 மற்றும் சிக்சர் அடித்தால் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நித்தியானந்த் (வயது 37), மகேஷ் சர்மா (26), சுனில் ஷெட்டர் (30), ஜெர்லால் (27), அபே (37), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயிந்த் (26), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோரத் (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகிந்த் (42), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அபின் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.  #TNPL2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் இறங்கினர்.

    முதலில் திண்டுக்கல் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் திணறினர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய மோகித் ஹரிஹரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். மோகித் 77 ரன்களுடனும், ரோகின்ஸ் 64 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து 167 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கால் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் சுண்டியதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்றது. இதையடுத்து, தனது அணி முதலில் பந்து வீசும் என திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, காஞ்சி வீரன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மதுரை பாந்தர்ஸ். #TNPL #MaduraiPanthers #TutiPatriots
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டூட்டி பாட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் எஸ்.தினேஷ் ஆகியோர் களமிறங்கினர்.

    தினேஷ் 35 ரன்களும், சுப்ரமண்யன் ஆனந்த் 44 ரன்களும், அக்ஷய் சீனிவாசன் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து, ரோகிட் 28 ரன்களும், ஸ்ரீஜித் சந்திரன் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஜெகதீசன் கவுசில் 22 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. #TNPL #MaduraiPanthers #TutiPatriots
    காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களே காரணம் என காரைக்குடி அணியின் கேப்டன் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். #TNPL2018 #KKvVKV #Srinivasan
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று 8-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி அணி நிர்ணயித்த 146 ரன் இலக்கை எடுத்து காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி வீரர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-

    இந்த வெற்றிக்கு அனைத்து பெருமைகளும் பந்து வீச்சாளர்களையே சாரும். அணி வீரர்கள் விவாதத்தின் போது என்று திட்டமிட்டோமோ அதை அப்படியே செயல்படுத்தினோம். இது போன்ற ஆடுகளத்தில் எதிரணியை 145 ரன்னுக்குள் கட்டுபடுத்துவது என்பது பெரிய வி‌ஷயம் தான். எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

    திண்டுக்கல் மைதானத்தில் அனிருதா தொடர்ச்சியாக 4-வது அரைசதம் அடித்து உள்ளார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #NammaOoruNammaGethu #KK #Srinivasan
    தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் போட்டியின் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று இரவு நடக்கும் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று தனது 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    அந்த அணியில் கவுசிக் காந்தி, தினேஷ், ஆனந்த் சுப்பிரமணியம், ஆர்.சதீஷ், சாய்கிஷோர், அபிஷேக், ஆதிசயராஜ், டேவிட்சன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இதில் கவுசிக் காந்தி முதல் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தி இருந்தார். இதனால் பேட்டிங் வரிசை பலமுடன் காணப்படுகிறது. பந்துவீச்சிலும் தூத்துக்குடி திறமையுடன் இருக்கிறது. இதனால் 2-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. காரைக்குடி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. திண்டுக்கல்லிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    அந்த அணியில் அபினவ் முகுந்த், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத், ரோகித், அந்தோணிதாஸ், நடராஜன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கடந்த இரண்டு சீசனில் தூத்துக்குடி அணியில் விளையாடிய அபினவ் முகுந்த் இன்று அந்த அணிக்கு எதிராக களம் இறங்குகிறார்.

    திண்டுக்கல்லுக்கு எதிரான கடந்த போட்டியில் 185 ரன் குவித்தும் கோவை தோற்றது. இதனால் அந்த அணி பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டி.என்.பி.எல். போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaooruNammaGethu
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 7 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. டூட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் தலா 2 புள்ளியுடன் உள்ளன. காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் எந்த புள்ளியும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஐடிரீம் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணியும் வெற்றி எதுவும் பெறவில்லை. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அந்த அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி முதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் முதல் ஆட்டத்தில் 48 ரன்னில் தூத்துக்குடி அணியிடம் தோற்றது. எனவே அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaooruNammaGethu
    ×