search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழுநோய்"

    காரமடை அருகே தொழுநோயால் அவதிப்பட்டு வந்த புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 33). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார். கோவிந்தராஜ் தொழுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் பாதிப்பு ஏற்பட்டதால் கோவிந்தராஜ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தியா இந்த வருடத்திற்குள் தொழுநோய் இல்லாத நாடாகி விடும் என மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
    பல்லியா:

    உத்தர பிரதேசத்தில் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியாவில் இருந்து இவ்வருடத்திற்குள் தொழுநோய் ஒழிக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டிற்குள் கலா ஆசார் (கருப்பு காய்ச்சல்) இல்லாத நாடாகி விடும் என கூறினார்.

    அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும்பொழுது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு வரும் டெட்டனஸ் மற்றும் வேறு சில நோய்களும் கட்டுக்குள் உள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
    ×