என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் போராட்டம்"
- பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர்.
- சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர்.
தக்கலை:
தக்கலை அருகே பத்மனாபபுரம் கோட்டையை ஒட்டி கல்குளம் அரசு தொடக்க பள்ளி சுமார் 70 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக அரசு பழைய பள்ளி கட்டிடம் இருந்தால் அகற்ற ஆணை பிறப்பித்து புதிய கட்டிடம் கட்ட திட்ட பணிகள் தயாரிக்கபட்டு கடந்த மார்ச் மாதம் கட்டிடம் இடிக்கப்பட்டது.
இந்த பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.
ஆனால் சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து அடிப்படை வசதிகள் கேட்டு திடீரென பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் அறிந்து தக்கலை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார்.
- அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
பாலியல் சீண்டல், தொல்லைகளில் இருந்து பெண்களை, குழந்தைகளை, மாணவிகளை பாதுகாப்பது என்பது தற்போது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் என அனைத்திலும் வியாபித்துள்ள இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எந்திரமும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தினமும் ஆங்காங்கே அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறத் தான் செய்கிறது. அப்படி ஒரு கொடுமை நாகையிலும் நடந்துள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறு இயல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த உரையாடல் விபரம் வருமாறு:-
ஆசிரியர்: ஹலோ, நான் பேசுறது கேட்குதா?
ஆசிரியர்: நீ என் வீட்டுக்கு வா...
மாணவி: இல்ல சார், என்னால வர முடியாது. எனக்கு மென்சஸ் சார், வலி அதிகமா இருக்கு
ஆசிரியர்: பரவாயில்ல வா, நான் பாத்துக்கிறேன், இன்னிக்கு எத்தனாவது நாள்
ஆசிரியர்: வாடா தங்கம், என்ன புரிஞ்சிக்க மாட்டியா. ஒண்ணும் பிரச்சினையில்ல வா...
மாணவி: இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்ருங்க சார், இனி என்மேல எந்த புகாரும் வராம பாத்துக்கிறேன் சார்.
ஆசிரியர்: பிரச்சினை பெரிசாயிக்கிட்டே இருக்கு, அதனாலதான் உன்ன கூப்பிட்டு வார்ன் பண்ண வீட்டுக்கு கூப்பிடுறேன், வா
மாணவி: (அழுது கொண்டே) இல்ல சார், எனக்கு பயமா இருக்கு
ஆசிரியர்: என்னடா பயம், அழாத உடனே கிளம்பி வா...
மாணவி: இந்த பிரச்சினையை இதோட விட்ருங்க சார்
இவ்வாறு உரையாடல் நீளுகிறது.
இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளை அருகில் அழைத்து தொடுவது போன்ற சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த வகையில்தான் எல்லை மீறிய ஆசிரியர் சதீஷ், மாணவியை வலுக்கட்டாயமாகவும், மிரட்டும் தொணியிலும் தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லியும், அதனை புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்த சக மாணவ, மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் விசாரித்தார். அப்போது அங்கு புகார் கூறப்பட்ட ஆசிரியர் சதீஷ் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த புகார் கலெக்டர் அருண்தம்புராஜூக்கு சென்ற நிலையில் சமூக நலத்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர். அதனை கலெக்டரிடமும் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நாகை டவுன் போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த ஆசிரியர் சதீஷ் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதற்குள் தனது காம லீலைகளை மாணவிகளிடம் வக்கிரத்துடன் காட்டி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
- பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் - உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் பிரிவில் சுற்றுவட்டார பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் இன்று காலை சரியான நேரத்திற்கு இயக்கப்படாத அரசு நகர பேருந்துகளை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கை விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
- சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகவும், ஜாதி ரீதியாகவும் பேசி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அந்த பேராசிரியர் மாணவிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியானது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
- முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியின் முதல்வராக ரெமா உள்ளார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர்.
இதனால் கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் கேரள உயர் கல்வித்துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது.
கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கல்லூரி முதல்வர் ரெமாவையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
கொழும்பு:
இலங்கையில் கால வரையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறக்ககோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பில் உள்ள கல்வி அமைச்சக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மூடிக்கிடக்கும் பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 58 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
- மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
- முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வராக ரெமா செயல்பட்டு வந்தார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடிநீர் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர். இதனால் கல்லூரி முதல்வர், மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தகவல் கேரள உயர் கல்வி துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது. கேரள உயர் கல்வி துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரெமாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி சுமார் 100 மாணவர்கள் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பெரம்பூர்:
காசிமேடு, சூரிய நாராயணன் சாலையில் ஆதிதிராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி உள்ளது.
இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்கள் விடுதி பொறுப்பாளர் ராதிகாவிடம் தெரிவித்தனர். அதேபோல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி சுமார் 100 மாணவர்கள் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஐட்ரீ்ம் மூர்த்தி, சப்-கலெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 12 மணியளவில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈவுஇரக்கமற்ற செயலை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.
- சேதமடைந்த இந்த பள்ளி கட்டிடத்தை பார்த்து மாணவர்கள் இன்று காலை அச்சமடைந்தனர்.
- மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 3 மாடிகளுடன் இந்த பள்ளி கட்டிடம் அமைந்து உள்ளது.இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடத்தின் தூண் பல இடங்களில் உடைந்து விரிசல் ஏற்பட்டது.மேலும் சீலிங்' சிமென்ட் பகுதியும் பெயர்ந்தது. சேதமடைந்த இந்த பள்ளி கட்டிடத்தை பார்த்து மாணவர்கள் இன்று காலை அச்சமடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து பள்ளி முன் பெற்றோர்களும் குவிந்தனர். அதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பள்ளி கட்டிடம் விரைவில் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'பள்ளி கட்டடத்தின் நிலைபடுமோசமாக உள்ளது. பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளதால், மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது' தற்போது பள்ளி கட்டிட தூண்கள் இடிந்து விழுந்து உள்ளதால் மாணவ மாணவிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைக்க வேண்டும்' என்றனர்.
- மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
- மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மணிப்பூர்:
மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர் களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் மணிப்பூரில் உள்ள கவுபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதில் பா.ஜனதா கட்சி அலுவலகம் எரிந்தது. மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும், வாகனங்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. "குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவர் தற்போது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூத்த போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். அவர் மணிப்பூரில் வன்முறையை தடுக்க அந்த மாநிலத்தில் பணியாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
- இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பண்ருட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் உள்பட 9 பேர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஷேர் ஆட்டோ திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கு உத்தரவிட்டார். ஆனால் இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை பெரியார் அரசு கலைக் கல்லூரிக்கு வழக்கம் போல் மாணவர்கள் வந்தனர். பின்னர் திடீரென்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ போன்றவை எங்களுக்கு தேவையில்லை. மேலும் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்குவதோடு, அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் மாணவர்கள் அங்கிருந்து தலைமை தபால் நிலையம் வந்து மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்காமல் மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். உப்பனாறு பகுதியில் வரும் போது தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு நின்றனர். அவர்களும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர். அதனையும் ஏற்காத மாணவர்கள் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்தனர்.
அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் நீங்கள் வாய்மொழி வழியாகத்தான் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என கூறுகிறீர்கள். கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்றனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் வரவேண்டும் என்றனர். கலெக்டர் வெளியூர் சென்று இருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.