என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு"
- பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.
இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
- ராமநாதபுரம் மாவட்ட உப்பளங்களில் விளைந்த உப்புகள் தார்ப்பாயால் மூடி பாதுகாக்கப்பட்டது.
- இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி நடைபெறும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், திருப்புல்லாணி, ஆணைகுடி, காஞ்சிரங்குடி, நதிப்பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக உப்பள பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி போனது. இதனால் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கோடை காலத்தில் அதிகப்படியாக விளைந்த உப்பை பாத்திகளின் ஓரம் கொட்டி தார்ப்பாயால் பாதுகாத்து வருகின்றனர். உணவிற்கான உப்பு, ரசாயனம் மற்றும் உர தொழிற்சாலைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு, சரக்கு லாரிகள் மூலம் தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழி லாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து மாற்று தொழிலை தேடி வருகின்றனர்.
- மதுரையில் நாளை போலீஸ் எழுத்து தேர்வை 11 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
- மதுரை மாவட்டத்தின் 12 தேர்வு மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் 2022 பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நாளை (26-ந் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 12 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இங்கு 11 ஆயிரத்து 500 பேர் எழுத்து தேர்வை எழுதுகின்றனர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுசீட்டு, எழுத்து அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்க்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, பரீட்சை முடிந்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
- கூடுதல்போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், 24 மணி நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் கோகுல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண்குமார் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு மதுரை தாழ்த்தப்பட்டோர் நல கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தண்ட னையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் ஐகோர்ட் கிளையில் மேல் முறையீடு செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பிலும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி கள் ரமேஷ் ஆனந்த், வெங்க டேசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்ப டுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. எனவே சுவாதி பயம் இல்லாமல் கோர்ட்டுக்கு வருவது உறுதி செய்து, அவரை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன்
சுவாதிநேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதற்கிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுவாதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீ
சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல்
போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், 24 மணி நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சாலைகள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
- பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வேதாரண்யம்:
வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர மாண்டஸ் புயல் காரணமாக வேதாரணத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் அலைகள் 5 அடி உயரம் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கடல் சீற்றம் காரணமாக ஆற்காடுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவாக பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் இரவில் இருந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.
இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாற்றம்யின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பேருந்து நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் காவல் துறை சார்பில் மீட்பு படையினர் வேதா ரண்யத்தில் முகாமிட்டு ள்ளனர்.
- அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்
- லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி:
அகில இந்திய பி.எஸ்.என்.எல். உழைக்கும் பெண்கள் 2-வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு தேசிய செயலாளர் ஏ.ஆர். சிந்து தலைமை வகித்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு, ஒருங்கிணைப்பாளர் இந்திரா, உதவிப் பொதுச் செயலாளர்செல்லப்பா, டெல்லி பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகள் அனிதா ஜோஹ்ரி, ஜெகதீஷ் பிரசாத் உள்படபலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பி.எஸ்.என்.எல் புத்தாக்கம், 4 ஜி, 5 ஜி சேவை வழங்க அனுமதித்தல், ஊதிய உயர்வு, அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவத்தை அமுல் படுத்தும் வகையிலான பாலினக்கொள்கை வகுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களை நிறுத்து வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லூதியானா பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்புகார் குழுக்களை சுதந்திரமாகவும் பயனுள்ள வகையிலும் செயல்படுத்துதல், புகார்களின் மீது உட னடி நடவடிக்கை, பணி யிடங்களில் பெண் ஊழி யர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, சிறப்பு மருத்துவ விடுப்பு, ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு, பணி யிடங்களில் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை வலி யுத்துவது உள்பட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் இறுதியில் அகில இந்திய அளவில் புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பாபு, ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, பா.ராஜு, பெர்லின் ஆலிஸ்மேரி, சுயம்புலிங்கம், ஜார்ஜ், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
- அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் ரசிகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், மாலதி, திலீப்குமார் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவசம்போர்டு நிர்வாகத்துடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
- இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களைகட்டிஉள்ளது. இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறைகடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளைஆக்கிர மித்து தள்ளுவண்டிமற்றும் உருட்டு வண்டி கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலை மையில் அகஸ்தீஸ்வ ரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த்ஆகியோர்முன்னிலையில்இந்தஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
மதுரை
மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்
- பல்வேறு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவையாறு:
திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டல இயக்குநரகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலைப் போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவுரைகளும் உறுதிமொழி ஏற்பும் தொடர்நது இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.
பள்ளிசெயலர் ரஞ்சன்கோபால் ஆலோசனையின்படி நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அனந்தராமன் சாலைப் போக்குவரத்து விதிமுறை உறுதிமொழிகளை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
சாலையின்இடது புறமாக நடந்து செல்வேன், சாலையின் குறுக்கே கடந்து செல்லாமல் உரிய நடைபாதைகளில் மட்டுமே கடந்து செல்லுவேன், ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்,ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே மோட்டார் வாகனங்களை ஓட்டுவேன், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவேன், பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெற்றோரையும் தலைக்கவசம் அணிய வலியுறுத்துவேன் மற்றும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு முன்னதாகவே செல்லுவேன் முதலிய 25க்கு மேலான உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
- சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
- திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாவட்டங்களிலும் சேர்த்து 3000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில், மணிமண்டபம் பூங்கா, வேளாங்கண்ணி தேவாலயம், மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்கள், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அங்கு சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக ஹோட்டல்களில் பாதுகாப்பை உஷா ர்படுத்தி உள்ளனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் யாராவது ஓட்டுகிறார்களா எனவும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணித்து வருகின்றனர். நாளை வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
- சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற்பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.