search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார தலைவர் முருகையன், செயலாளர் எலிசபெத் ராணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • காலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பண்டிகை கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி, கொடியேற்றம் ஆகியவை நடைபெற்றது. பண்டிகை தொடங்கிய நாளில் இருந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் குண்டம் திருவிழா வரும் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் அந்தியூர் தாலுகா மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பத்ரகாளியம்மன் கோவில் அன்னதான கூடத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் தாசில்தார் தாமோதரன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்ட த்தில், காவல்துறை, தீயணை ப்பு துறை, மின்சார துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை அதிகாரி கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

    இந்த நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் சாக்கு பழனிச்சாமி, தி.மு.க. பேரூர் செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், கோவில் செயல் அலுவலர் நந்தினீ ஸ்வரி, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்,

    பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, பி.ஜே.பி. நிர்வாகி சரவணன், கோவில் அலுவலர்கள் செந்தில்குமார், தணிகாசலம் மற்றும் அறங்காவலர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
    • பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மானாசிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சிவராமகிருஷ்ணன். இவர் திருப்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகள் ரம்யாவை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு ரம்யா வெளியேறினார். பின்னர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிவராம கிருஷ்ணனும், ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது தனது பெற்றோர் எங்களை பிரிக்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ரம்யா போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரம்யாவின் வயது சான்றிதழை ஆய்வு செய்த போது அவர் மேஜர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விருப்பப்படி கணவர் சிவராமன் வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தனர் .இதையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் மானாசிபாளையத்தில் உள்ள சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.

    • ராமசாமி மகன் சசி (வயது 23), .நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக
    • கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சசி (வயது 23), இவர் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் சசிக்கும் கர்நாடக மாநிலம் கெங்கேரி மாவட்டம் கன்சந்த்ராவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி மகள் பிரகத்தி (22) என்பவக்கும் காதல் ஏற்பட்டது. இவரது காதலுக்கு பிரகத்தியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 4- ந் தேதி சசியின் சொந்த ஊரான பூண்டி கிராமத்திற்கு வந்தனர். தொடர்ந்து கடந்த 7-ந் தேதி குஞ்சரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரகத்தி மனு அளித்தார். மனுவில் கடந்த 6- ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், தனது வீட்டில் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 7-ந் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனது பெற்றோரும் உறவினர்களும் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனக்கும், கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன சுரங்க பணி வளாகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை

    நெல்லை:

    நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் (பொறுப்பு) சுஜின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமானம் மற்றும் சுரங்க பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமானம், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன சுரங்க பணி வளாகத்தில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். இதில் ராம்கோ நிறுவன சுரங்க தொழிலாளர்கள் 100 பேரும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு), ராம்கோ நிறுவன சுரங்க பிரிவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டிடம் மற்றும் சுரங்க பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டிடம் மற்றும் சுரங்க பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
    • குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார், போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோர் உத்தரவுப்படி தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வழிகாட்டுதல் படி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் ரோசி கலந்து கொண்டார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

    பல்கலைக்கழக அசோசியேட் டீன் சங்கர் ஸ்ரீராம், மாவட்ட அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு மேலாளர் பிரதீப் கண்ணன், சரபோஜி கல்லூரியின் கணினி துறை தலைவர் மோகன் குமார், சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரன் ஆகியோர் சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கில், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வங்கி கணக்கு விபரங்கள், ஏ.டி.எம் கார்டு குறித்த விவரங்கள், ஓ.டி.பி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தினை எடுத்து வரும் குற்றமானது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அவ்வாறான குற்றங்களை தடுக்கும் வகையில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் அரசு மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள், அலுவலர்கள், பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
    • 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில், கோடைவெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட இருக்கும் நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பும் பொருட்டும், பள்ளி முடிந்தவுடன் வெளியிடங்களுக்கு பெற்றோர்கள் அனுமதியின்றி நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்திட வேண்டும்.

    ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினருக்கு (இலவச எண்.101) காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்.108), காவல் துறை மற்றும் தீயணைப்புதுறையை அழைக்க (இலவச எண்.112) என்ற 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24/7 நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 – 226623 / 1077 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    கோடைகாலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி இருக்க உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
    • வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்வேறு மாவட்டங்களில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்ப குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திமுக சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு சமபந்தி நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வட மாநில தொழிலாளர்களுக்கு மாலை போட்டு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

    தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டு சமபந்தி விருந்தாக ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் குண்டுமணி, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • உரிய பாதுகாப்புடன் இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார்.

    தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அரசு சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்காக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் ஜவுளிக்க டைகள், உணவகங்கள், ரைஸ்மில்கள்உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டிட தொழில்கள் என பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களது பாது காப்பினை உறுதி செய்யு மாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    அதன் பேரில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா, மிரட்டல்கள் இருந்து வருகிறதா, தாக்கப்படுகிறார்களா என கேட்டனர்.

    அதன்படி திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம், வண்டம்பளையம் தனி யார்நவீன அரிசி ஆலை மற்றும்நீடாமங்கலம், மன்னார்குடி, பரவாக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தாங்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருந்து வருவதாகவட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு
    • இந்து அமைப்பினர் போராட்டம் எதிரொலி

    நாகர்கோவில்:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திரு விழாவின்போது ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த சமய மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்து அறநிலைய துறை சார்பில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. திட்டமிட்டபடி ஹைந்துவ சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    சமய மாநாடு நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடந்தது. இந்த நிலையில் இன்று மண்டைக்காடு பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    போராட்டத்திற்கு போலீ சார் அனுமதி மறுத்தி ருந்தனர். தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து போராட்டத்திற்கு வருபவர்களை தடுக் கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மண்டைக்காட்டில் நடை பெறும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வருப வர்களை அந்தந்த பகுதி களில் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டை காட்டிற்கு செல்லும் பாதை பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் இன்று காலை முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் பறக்கை விலக்கு, புத்தளம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பினர் போராட்டத் திற்கு அனுமதி கிடைக்கா ததால் வேறு தேதியில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

    • திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.
    • ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அந்த இளைஞரை, கோவிலினுள் நுழைந்ததற்காக பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க. பிரமுகர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.

    மேலும் இளைஞரை திட்டிய மாணிக்கம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இந்த நிலையில் இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே அனைத்து சமுதாய மக்களும், கோவிலில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியோடு நேற்று அந்த பகுதியை சேர்ந்த பட்டியல் இன மக்கள் அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்த கோவில் திறக்கப்பட்டு, கோவிலுக்குள் அவர்கள் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கட்சியினர் சம்பந்தப்பட்ட மாரியம்மன் கோவிலுக்குள் சென்று பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து இளைஞர்கள் கோவிலுக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×