என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 166375"
- ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
- செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ரெயில் விபத்து குறித்து மத உணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் என்பவர் கருத்து பதிவு செய்திருந்தார்.
இதுதொடர்பாக தக்கலை போலீசார் செந்தில்குமார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாலிபரை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி யாதவர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 35). இவர் அங்குள்ள கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அேத பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விசிலடித்து அங்கிருந்தவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை முத்துராஜா தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கி ருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த முத்துராஜா சிறிது நேரம் கழித்து மீண்டும் கலை நிகழ்ச்சி களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வெங்க டேஷ் மற்றும் அவரது உறவினர்க ளான ராகவன், ரமேஷ், முத்து, முத்து சரவணன், லட்சுமி உள்ளிட்ட 11 பேர் அவரை வழி மறித்து தகராறு செய்த னர். மேலும் அவரை தாக்கினர். இதை தடுக்க வந்த முத்துராஜாவின் தந்ைத முத்தையா, ராமகிருஷ்ணன், ஆதிமுகிலா ஆகியோருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து முத்துராஜா கூமாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வெங்கடேஷ் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
- ஆத்திரம் அடைந்த பெண் தனது மகள் மற்றும் சிலருடன் சேர்ந்த வாலிபரை தாக்கினார்.
- 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கரூரை சேர்ந்த 36 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ஒரு மடத்தில் தங்கி செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் பெண்ணின் மகளுக்கு தெரிய வரவே அவர் தனது தாயை கண்டித்தார். இதனால் பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
சம்பவத்தன்று வாலிபர் மடத்துக்கு சென்றார். அப்போது பெண் அவருடன் பேசாமல் இருந்தார். உடனடியாக வாலிபர் தனது கள்ளக்காதலியிடம் சென்று ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண் தனது மகள் மற்றும் சிலருடன் சேர்ந்த வாலிபரை தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆழியாறு போலீசார் கள்ளக்காதலனை மகளுடன் சேர்ந்து தாக்கிய பெண் அவரது மகள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன்.
- போலி பணி நியமன ஆணை என அறிந்த பிரான்சிஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 45).
இவர் நிலையான வேலை யில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன்.
அதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரான்சிஸ் சேவியரிடம் கூறினார். இதனை உண்மை என்று நம்பிய பிரான்சிஸ் சேவியர் ரூ.58000-த்தை ராஜ்குமாரிடம் கொடுத்தார்.
அடுத்த சில நாட்களில் ஒரு பணி நியமன ஆணையை தயார் செய்து
பிரான்சிஸ் சேவியரிடம் கொடுத்தார். அந்த ஆணையை எடுத்து க்கொண்டு நுகர் பொருள் வாணிப கழகத்தில் காண்பித்தார்.
இதனை வாங்கி பார்த்த அதிகாரிகள் இது போலி பணி நியமன ஆணை என்று கூறினர்.
அப்போது தான் ஏமாற்றபட்டோம் என்பதை பிரான்சிஸ் சேவியர் உணர்ந்தார்.
இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
- கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் உள்ள இடத்திற்கு சென்று மது அருந்தி போதை அதிகமாகி கிடந்தார்.
- புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் அய்யமபேட்டையை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்தார்.
பின்னர் ஒரு டாஸ்மாக்கில் மது வாங்கினார்.
அப்போது தஞ்சையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாகையை சேர்ந்த அருண் (25) என்பவரும் அதே கடையில் மது வாங்கினார்.
அப்போது இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்திதுக்கு சென்று மது அருந்தினர்.
இதில் சதாம்உசேன் போதை அதிகமாகி கிடந்தார்.
இதனை பயன்படுத்திய அருண், மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு தப்பினார்.
போதை தெளிந்ததும் சதாம் உசேன் தனது மோட்டார் சைக்கிளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் மோட்டார் சைக்கிளை அருண் திருடியது தெரியவந்தது.
இது பற்றி சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர்.
- துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). இவரது சகோதரர் மணிகண்டன்(35). இவர்களுக்கும் உறவினர் சுப்பிரமணி(58) என்பவ ருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று வில்லாபுரத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு முனிய சாமி, மணிகண்டன் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த சுப்பிர மணிக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சுப்பிர மணி, முனியசாமி, மணி கண்டன் ஆகிய 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை பெற்று வந்துள்ளார்.
- சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெற்று வந்தார்.
இதற்கிடையே நிலா, 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை மறைத்து கணவரால் கைவிடப்பட்டவருக்கான அரசு நிதி உதவியை அவர் பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே நிலா வுக்கு 2-வதாக திருமணம் ஆகி கணவர் இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை அரசு நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நிலா அரசிடம் இருந்து பெற்ற ரூ.82 ஆயிரத்து 200-யை திரும்ப செலுத்தும்படி துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நிலா மீது புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்து மீனா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் திருச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மல்லாங்கிணறு முடியனூரைச் சேர்ந்த பெரிய முத்து என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரை அவதூறாக பேச தொடங்கினார். மேலும் போலீசாரை வாகன சோதனை செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையை போலீசார் சோதனையிட முயன்றனர்.
அப்போது அந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். அந்த சாக்கு பையில் 27 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.
- அனுமதியின்றி பட்டாசு ஆலை வைத்திருந்தவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள மல்லநாயக்கன்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை கொண்ட அட்டைபெட்டிகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர், ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ராஜசேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள மூலிகை சேமிப்பு பண்ணையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக நத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் பண்ணையில் ேசாதனை நடத்தினர். அப்ேபாது அங்குள்ள தகர ெகாட்டகையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அழகாபுரியை சேர்ந்த மணிவைரம் என்பவரை தேடி வருகின்றனர்.
- நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
திருச்சி:
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார்.
இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர்பாபு, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அப்போது வெட்ரா கேப்பிட்டல்ஸ் என்ற வணிக நிறுவனத்தை மைக் கேல் என்பவர் நடத்தி வருவதாகவும், அவரது நிறுவனத்தில் முதலீட்டு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை முழுமையாக நம்பிய ஆடிட்டர் பவுன் குமார் பணத்தை முதலீடு செய்யவும் தயாரானார்.
அதன்படி சென்னையில் இருந்து திருச்சி வந்த அவர், நெம்பர் 1 டோல் கேட்டில் அலுவலகம் அமைத்துள்ள சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோரிடம் கடந்த 10.7.2019-ல் முதல் கட்டமாக ரூ.8.50 லட்சம் பணத்தை வழங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த தவணைகளில் ரூ.10 லட்சம், ரூ.32 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். காலம் கடந்தும் அவர்கள் முதலீட்டு பணத்துக்கான வட்டி எதையும் வழங்கவில்லை.
முதலில் கனிவாக பேசிய 2 பேரும் பின்னர் பவுன்குமாரை மிரட்ட தொடங்கினர். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவுன் குமார் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கர்பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கத்தியை காட்டி வின்சென்டை மிரட்டினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் பிரட்ரிச் வின்சென்ட் (வயது23).
இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கால்டாக்சி மூலம் வளசரவாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதிக்கு வந்த வின்சென்ட் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கத்தியை காட்டி வின்சென்டை மிரட்டினர். மேலும் அவர் வைத்து இருந்த 2 பெரிய பைகளை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அதில் "லேப்டாப்" உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.
இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வின்சென்ட் இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையின் ஓரம் இன்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. குழந்தையின் சடலத்தில் இருந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை வீசியது யார்? குழந்தை கள்ளக்காதலால் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா? அல்லது குழந்தை இறந்ததால் வீசி சென்றார்களா? குறை பிரசவத்தில் இறந்த குழந்தையை சாலையோரம் வீசினார்களா? என்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்