என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166459"

    • ரவடி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவரது 2-வது மகன் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மணி கண்டனுடன் சுற்றித்திரிவதை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் குடும்பத்திற்கும் நடராஜன் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் மூத்த மகன் ஆகாஷ் நேற்று எம்ஜிஆர் நகர் பகுதியில் சென்ற போது நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தினார்கள்.

    இதையடுத்து படு காயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக ஆசாரிப்ப ள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆகாஷ் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.அவருடன் அவரது தந்தை மணிகண்டனும் வந்தார்.

    சி.பி.எச்.ரோடு சிவன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது ஆகாஷையும் அவரது தந்தை மணிகண்டனையும் தடுத்து நிறுத்தி நடராஜன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஈசாக், ராஜா,வெற்றிவேல், ராஜராஜன் ஆகியோர் தகராறு செய்தனர்.

    பின்னர் ஆகாஷையும், அவரது தந்தை மணிகண்டனையும் கத்தியால் குத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டனர்.அங்கு பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவ ருக்கும் சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணி கண்டனின் மனைவி கீதா வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெ க்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் ஈசாக், நடராஜன் மகன் மணிகண்டன்,ராஜா, வெற்றிவேல் ராஜராஜன் ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் ஈசாக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும்.
    • தன் கண்களை திறந்து பார்க்கும் சிறுமி, தந்தைக்கு புதிய வேலை கிடைத்து விட்டதை அறிந்து ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறாள்.

    தனது தந்தைக்கு புதிய வேலை கிடைத்ததை கொண்டாடும் சிறுமியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும். ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கு இடையேயான உறவு என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத தூய்மையை உடையது.

    ஸ்விக்கி நிறுவனத்தில் தனது தந்தைக்கு வேலை கிடைத்து விட்டதை கொண்டாடும் சிறுமியின் வீடியோ பார்ப்பவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கிறது. அந்த வீடியோவில், தன் கைகளால் முகத்தை மூடியபடி சிறுமி நிற்கிறாள். அவள் முன்னால் நிற்கும் அவளது தந்தை, ஸ்விக்கியின் முத்திரை பதித்த டி-சர்ட்டை காட்டுகிறார். தன் கண்களை திறந்து பார்க்கும் சிறுமி, தந்தைக்கு புதிய வேலை கிடைத்து விட்டதை அறிந்து ஆனந்தத்தில் துள்ளி குதிப்பதுடன், தந்தையும் கட்டி அணைத்துக் கொள்கிறாள்.

    பூஜா அவன்திகா என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ள இந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வீடியோவை இணையவாசிகள் அதிகம் பகிந்து வருகின்றனர்.

    • சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
    • மது அருந்தக்கூடாது என்று தந்தை பலமுறை எடுத்து கூறியும் மகன் கேட்கவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54) கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மகனிடம் மது அருந்தக்கூடாது என அவரது தந்தை மாரிமுத்து பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டார். தொங்கிய அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌.

    சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமான நிலையத்தில் 5 வயது மகளை தவற விட்ட தந்தையால் பரபரப்பு
    • தாயை அழைத்து செல்ல வந்த போது நடந்தது

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவரது தாயார் கமாமிஷா நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் இப்ராஹிம் திருச்சி விமான நிலையம் வந்திருந்தார்.

    பின்னர் தனது தாயார் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அவரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். அப்போதுவரை தான் அழைத்து வந்த 5 வயது மகள் வாகனத்தில் ஏறிவிட்டாரா என்பதை கவனிக்கவில்லை. தாயை பார்த்த ஆர்வத்தில் மகளை மறந்துவிட்டனர். இந்த நிலையில் ஒருசில கிலோ மீட்டர்கள் தூரம் வரை அவர்கள் சென்றபிறகுதான் இப்ராகிம் தனது மகளை தேடியுள்ளார். உடனடியாக அவர்கள் தங்கள் வாகனத்தை திருப்பி மீண்டும் விமான நிலையம் நோக்கி பயணித்தனர்.

    இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதியில் குழந்தை ஒன்று தனியாக நின்று அழுது கொண்டிருந்ததை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை அழைத்துச் சென்று முனைய மேலாளர் அறையில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயர் மற்றும் அவரது பெற்றோர் குறித்த விபரங்களை பொது மக்களுக்கு தகவல் அளித்து வந்தனர்.

    சுமார் அரை மணி நேரம் தகவல் தெரிவித்தும் யாரும் அழைத்து செல்ல வராத காரணத்தினால் குழந்தை பத்திரமாக முனையை மேலாளர் அறையிலேயே தங்க வைக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தனது குழந்தையை காணவில்லை என மீண்டும் விமான நிலையத்திற்குள் நுழைந்த பெற்றோர் அங்குமிங்கும் தேடினர்.

    அப்போது அவர்களிடம் குழந்தை முனைய மேலாளர் அறையில் இருப்பதாக தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். உடனே ஓடிச்சென்ற அவர்கள் குழந்தையை பார்த்ததும் கண்ணீர் விட்டனர். மேலும் பத்திரமமாக குழந்தையை மீட்டு ஒப்படைத்ததற்காக விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இதையடுத்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் குழந்தையுடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் தவறவிடும் பொருட்களை பத்திரமாக மீட்டு பயணிகளிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு வந்த மேலாளர்கள், நேற்று குழந்தையையும் பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியையும், பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

    • 15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சிறுமி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெற்ற மகளுக்கு, தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கோவை பெரிய நாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகன் சந்தோஷ்குமார் (33). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள சந்தோஷ்குமார் ஷீட் மெட்டல் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு கடந்த 2013-ல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம், தம்பி விமல்ராஜ் ஆகியோர் சென்று விசாரித்துள்ளனர்.

    அப்போது இரவு சுமார் 8 மணியளவில் சந்தோஷ்கு மார் கஞ்சி குடித்ததாகவும், அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவரை சத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் உயர் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு டாக்டர்கள்ள் பரிசோத்த பின், சந்தோஷ்கு மார் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரி ன்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் கருவம்பாளையத்தில் வசிப்பவர்கள் பிரேம்குமார் - ஜெயசித்ரா தம்பதி. இவர்களுக்கு பொன் குமரன் என்ற 8 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். பொன் குமரனுக்கு பிறந்தது முதலே உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.நேற்று முன்தினம் திருமுருகன்பூண்டியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு வழங்க அவர் செல்லும் வழியில் பிரேம்குமார் நின்றிருந்தார். முதல்-அமைச்சரின் பாதுகாவலர்கள் மனுவை வாங்கி, முதல்-அமைச்சரிடம் வழங்கினர்.

    மனுவில், என் மகனுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது.அரசு மற்றும் பல்வேறு அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை. அவனை நாள் முழுக்க கவனிக்க வேண்டியுள்ளதால், எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையுள்ளது. மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வரும் எங்களின் நிலை உணர்ந்து, எங்கள் பிள்ளைக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    • மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக தந்தையை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கணவர் தனது மனைவியை தாம்பத்ய உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மனைவி வர மறுத்ததால், நீ வரவில்லையென்றால் பெற்ற மகளை தொடுவேன் என்று கூறி அவர் தூங்கி கொண்டிருந்த 16 வயதுடைய இளைய மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் தாம்பத்ய உறவுக்கு மனைவி சென்று விட்டாராம். மேலும் அந்த கணவர் தனது மனைவியை எப்போதும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்தாராம். இது தொடர்பாக மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் அலுவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாதுகாப்பு நலன் கருதி அச்சிறுமியை மீட்டு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    • மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தந்தை விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ளது சின்னகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அறிவாணன் (வயது32). இவரது மனைவி ரோஜா (29) இவர்களுக்கு ஜீவா(8) என்ற மகனும், நிலா என்ற மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ரோஜா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த அறிவாணன் சம்பவத்தன்று தனது மகன் ஜீவாவை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.

    இந்த நிலையில் மாயமான மகனை பல்வேறு இடங்களில் ேதடி பார்த்து உள்ளார். அப்போது ரோஜாவின் உறவினரான இன்பவள்ளி என்பவர், கணவர் வீட்டிலிருந்த மகனின் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார்.

    இதனை அடுத்து ரோஜா கணவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ஜீவா காயங்களுடன் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அவரது தாயார் உடனடியாக மகனை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் வழக்குப்பதிவு செய்து அறிவாணனை தேடி வருகின்றனர். மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற மகனை தந்தை சித்ரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அவினாசி :

    அவினாசி அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது42). இவரும் இவரது மகன் தரணி (15) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அவினாசியை அடுத்து அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேத்தியாத்தோப்பு அருகே மகள் வீட்டுக்கு வந்த தந்தை விபத்தில் பலியானார்.
    • சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துலிங்கம். விவசாயி.இவரது மகள் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ளார். இவரது வீட்டுக்கு முத்துலிங்கம் வந்தார். அப்போது சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் இறந்தார். இது பற்றி சேத்தியாத்ேதாப்பு போலீசார் விசாரிக்கிறார்கள். 

    • பூதலிங்கம் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது
    • போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்த வர் பூதலிங்கம் (வயது 85). இவர் காலில் அடிபட்டு படுத்தபடுக்கையாக மகன் சுப்பையா வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பூதலிங்கம் திடீரென இறந்தார். இது குறித்து அவரது மூத்த மகன் வேலாயுதம், ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி சுப்பையா, தந்தையுடன் தகராறு செய்து உள்ளார். என் தந்தை சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பூதலிங்கம் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார், சுப்பையாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடி போதையில் அவர் தந்தை பூதலிங்கத்தை கம்பால் தாக்கியதை ஒப்புக் கொண்டார். இதில் தான் பூதலிங்கம் இறந்துள்ளார் என தெரிய வந்தது.

    அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×