search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166460"

    • மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பெரிய வட்டாரம் கோவில்கோவில் வீதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 46 ). பிரிட்ஜ் மற்றும் ஏ.சி. பழுது நீக்கும்தொழில் செய்து வந்தார்.

    கடந்த 20ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வு வெளியான நிலையில் அவரது மூத்த மகன் பெயில் ஆனதால் சந்திரமோகன் கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பூதலிங்கம் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது
    • போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்த வர் பூதலிங்கம் (வயது 85). இவர் காலில் அடிபட்டு படுத்தபடுக்கையாக மகன் சுப்பையா வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பூதலிங்கம் திடீரென இறந்தார். இது குறித்து அவரது மூத்த மகன் வேலாயுதம், ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி சுப்பையா, தந்தையுடன் தகராறு செய்து உள்ளார். என் தந்தை சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பூதலிங்கம் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார், சுப்பையாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குடி போதையில் அவர் தந்தை பூதலிங்கத்தை கம்பால் தாக்கியதை ஒப்புக் கொண்டார். இதில் தான் பூதலிங்கம் இறந்துள்ளார் என தெரிய வந்தது.

    அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஜூன். 22-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.

    அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.

    அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.

    இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.

    திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை குற்றவாளியாக்கும் சட்ட பிரிவை இன்று நீக்கி தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட் அவரது தந்தையின் தீர்ப்பை மாற்றியுள்ளார். #AdulteryVerdict #Section497 #JusticeChandrachud
    புதுடெல்லி:

    திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டபிரிவு 497-ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புக்கு மாறாக தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடந்த 1985-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த அவரது தந்தை ஓய்.வி.சந்திரசூட், தகாத உறவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். அப்போது, கணவருக்கு தெரியாமல் அவரது மனைவியுடன், தகாத உறவில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை உறுதி செய்தார். மேலும், தகாத உறவில் ஈடுபடுவதை குற்றமாக கருதினால் தான், திருமண உறவு பலப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

    அதேபோல, தனி மனித உரிமை குறித்த வழக்கிலும் நீதிபதி சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பு வழங்கியிருந்தார். நெருக்கடி நிலை காலத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஓய்.வி.சந்திரசூட் இடம்பெற்ற அமர்வு, தனி மனித உரிமை அடிப்படை உரிமை அல்ல என தீர்ப்பு வழங்கியது.

    ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதார் வழக்குடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய டி.ஒய்.சந்திரசூட், தனிப்பட்ட நபரின் வாழ்க்கை மற்றும் தனிநபர்களின் உரிமைகள் மாற்ற முடியாதது. எந்த அரசும் தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
    குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது 3 வயது மகனை ஆட்டோ மீது தூக்கி அடித்த தந்தையில் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வசிக்கும் நபர் ஒருவர் நேற்று குடிபோதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 வயது மகனை அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார். மேலும், தலைகீழாக சிறுவனை பிடித்த நிலையில், தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.

    இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர தந்தைக்கு எதிராக புகாரளிக்க மனைவி மறுத்து விட்டதாகவும், போலீசார் தாமாக முன்வந்து சிறார் வன்கொடுமை சட்டத்தில் தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குற்றவாளி தலைமறைவாகிவிட்டதாகவும், குழந்தை தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
    டெல்லியின் கொடுமைப்படுத்திய மகன் மருமகளுக்கு எதிராக பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் மகன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தனது 74 வயது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். அவரது மகன், மருமகள் இருவரும் பெற்றொரை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை துன்புறுத்தி கொல்ல முயற்சி செய்தனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன் மருமகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். மகன் மற்றும் மருமகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், அவர்களை அமைதியாக வாழ விட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  #tamilnews

    ×