search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதுக்கல்"

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எம்.அகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கந்தன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் அனுமதி பெறாமல் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் மங்கலம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையை ஆய்வு செய்தபோது அங்கு அட்டை பெட்டிகளில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அட்டை பெட்டிகளில் இருந்த 164 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 155 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் தொழிலாளி கந்தன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கந்தனின் மனைவி விஜயாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
    ×