search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஏழை, எளியோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தமிழக அரசின் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

    மதுரை

    மதுரை கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பில் திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் 840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட வீடு இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்.

    400 சதுரடி பரப்பளவு உள்ள குடியிருப்புக்கு மத்திய-மாநில அரசின் மானியம் போக மீதி ரூ.1 லட்சம் தொகையை பயனாளி செலுத்த வேண்டும்.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு வோர் கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டை நகல்கள், பங்களிப்புத் தொகை ரூ.1 லட்சம் செலுத்துவதற்கான சம்மதக் கடிதம், "The Executive Engineer, TNUHDB, Madurai Division, Madurai" என்ற பெயரில் 10 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலை ஆகியவற்றுடன், 'நிர்வாகப்பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எண்.69, கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை 20 என்ற முகவரியில் வருகிற 28, 29-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். தமிழக அரசின் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு முன்னுரிமை தரப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெ க்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • 1-ந் தேதி முதல் கூடுதல் ெரயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை- செங்கோட்டை, நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர் இடையே வருகிற 1-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 3.35 மணிக்கு மதுரை வரும்.

    இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசியில் நின்று செல்லும்.

    நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரெயில், 11.25 மணிக்கு செங்கோட்டை செல்லும். இதே மார்க்கத்தில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும்.

    இதே மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 12.25 மணிக்கு நெல்லை செல்லும். இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசியில் நின்று செல்லும்.

    திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில், மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் ரெயில், மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டையில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மலேசியாவுக்கு வேலை தேடி வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வர வேண்டும் என மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதன்மூலம் ஊதியம் தாமதமானால் அரசுக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேசிய தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் சார்பில் மலேசியா நாட்டு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு ராமநாதபுரத்தில் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத் தலைவர் செய்யது ஜமருல் கான் தலைமையில் 'ஒரு மாலை பொழுது' என்ற நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடந்தது.

    மலேசிய அமைச்சரை வரவேற்று பாரதி நகர் முதல் பட்டணம் காத்தான் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, தொழிலதிபர்கள், மலேசிய தமிழர்கள், தமிழ் சங்கத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அமைச்சர் டத்தோ சரவணனுக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சரின் வெற்றி பயணம் குறித்த காணொலி திரையிடபட்டதோடு நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி பேசும்போது,

    தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு உணவகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்கு அனுமதி பெற்று செல்லும் நபர்கள் அங்கு அதே உணவகத்தில் வேறு வேலை செய்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதை தடுத்து அவர்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்ய மலேசிய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    விழாவில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பேசும்போது, மலேசியாவிற்கு வேலை தேடி வரும் தமிழக தொழிலாளர்கள் முறையான ஆவண ங்களுடன் வர வேண்டும்.

    வேலை தேடி வரும் அந்நிய தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிடம் இல்லாமல் தவிப்பதால் தற்போது முறையான தங்குமிடத்தை உறுதி செய்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மின்னனு ஊதிய முறை நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் ஊதியம் தாமதமானால் அரசுக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மலேசியா மனித வள தலைமை செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீத், மலேசியா கவுன்சில் ஜெனரல் சரவணன், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாஜகான், ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம், மலேசியா ஒருங்கிணைப்பு குழுவினர், வெளிநாட்டு வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.
    • தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    2022-23ஆம்ஆண்டிற்கானசுதந்திரதினவிழாவை முன்னிட்டுபெண்களின்முன்னேற்றத்திற்கு சிறந்த

    சேவை புரிந்தசமூகசேவகர்மற்றும்தொண்டுநிறுவனத்திற்கானவிருதுகள்வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தமிழ்நாட்டைபிறப்பிடமாகக்கொண்டவராகவும், 18 வயதிற்குட்பட்ட பெண்ணாகவும் இருத்தல்வேண்டும்.சமூக நலன் சார்ந்தநடவடிக்கைகள், பெண்குலத்திற்குபெருமைசேர்க்கும்வகையிலானநடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்றதுறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்துமக்களுக்கு தொண்டாற்றும்வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    மேற்காணும்வகையில் சாதனைபுரிந்தவர்களாக இருப்பின்உரியகருத்துருவுடன்மாவட்ட சமூகநலஅலுவலகம், ராமநாதபுரம் (மாவட்ட கலெக்டர் வளாகம்) இணைப்புபடிவம்பெற்றுமுழுமையாகதமிழ்மற்றும்ஆங்கிலத்தில் நிரப்பிவழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும்தகவலுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • நாகர்கோவில்- கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில் 2-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    நாகர்கோவில்- கச்சிகுடா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு அந்த ரெயில் இயக்கப்படவில்லை. நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களை மீண்டும் இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்து உள்ளது.

    இந்த ரெயில் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமைதோறும் காலை 8.40 மணிக்கு கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புறப்படும். இது வள்ளியூர் (9.17), நெல்லை (10.15), கோவில்பட்டி (11.14), சாத்தூர் (11.36), விருதுநகர் (12.03), மதுரை (மதியம் 1.10), திண்டுக்கல் (2.07), திருச்சி (3.15), கரூர் (மாலை 5 மணி), நாமக்கல் (5.40), சேலம் (இரவு 7 மணி), ஜோலார்பேட்டை (8.48), வாணியம்பாடி (9.08), குடியாத்தம் (9.44), காட்பாடி (10.25), சித்தூர் (நள்ளிரவு 11.03 மணி), திருப்பதி (12.30) வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 1.25 மணிக்கு கச்சிகுடா செல்லும்.

    மறுமார்க்கத்தில் கச்சிகுடாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரெயில், திருப்பதி (நள்ளிரவு 10.09), சித்தூர் (அதிகாலை 3.58), காட்பாடி (5.05), குடியாத்தம் (5.35), வாணியம்பாடி (6.09), ஜோலார்பேட்டை (6.50), சேலம் (8.35), நாமக்கல் (9.40), கரூர் (10.20), திருச்சி (12) திண்டுக்கல் (மதியம் 1.07), மதுரை (2.10), விருதுநகர் (2.58), சாத்தூர் (3.22), கோவில்பட்டி (3.44), நெல்லை (மாலை 5.10 மணி), வள்ளியூர் (5.44) வழியாக நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமை இரவு 9.05 மணிக்கு செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    எனவே சேலம் மாவட்டத்தில் துணிச்சல், தைரியமான மற்றும் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற வருகிற 20-ந்தேதிக்குள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை
    • கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்டமணப்பாடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்கு பெரும் இடையூறாக கடற்கரையில் இயற்கையான முறையில் பெரும் மணல் குன்றுகள் தோன்றின.

    இதனால் மீனவர்கள் கடலுக்குகள் படகுகளை கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீன்பிடித்தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது.

    இதையறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ராட்சத எந்திரங்கள் மூலம் மணல் குன்றுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். எனினும் மணல் குன்றுகள் உருவாகுவது குறையவில்லை.

    இதையடுத்து நிரந்தரத் தீர்வாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தமிழக முதல்-அமைச்சரிடம் அமைச்சர் தெரிவித்ததையடுத்து நபார்டு மூலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    கடலுக்குள் தூண்டில் வளைவு அமைக்கப்படும் இடத்தை நேற்று மாலை அமைச்சர் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் நேரில் படகு மூலம் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மீனவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மீனவர்களின் மீன்பிடித் தொழில் தடைஇன்றி சிறப்பாக நடைபெற்று அவர்களின் பொருளாதாரம் மேம்பட தூண்டில் வளைவு திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்.நான் படகு மூலம் கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராஜ், செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, தயாநிதி, தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா,

    தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் லெபோரின், மணப்பாடு ஜெயப்பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா, இளங்கோ, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மணப்பாடு மீனவர்கள் பலர் உடனிருந்தனர்.

    உண்மையா பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பரப்பலாம் என ராஜஸ்தானில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அமித்ஷா தொண்டர்களிடம் பேசியுள்ளார். #BJP #AmitShah
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “உண்மையோ பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பகிரலாம். சுமார் 32 லட்சம் பேர் நம் வாட்ஸப் குரூப்களில் உள்ளனர். இதனால், எதையும் வைரலாக ஆக்கலாம்” என அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    “சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையான முலாயம் சிங்கை அடித்து விட்டதாக வாட்ஸப்பில் புரளி பரவியது. உண்மையில் அப்படி நடக்கவில்லை என்றாலும் அது வைரலானது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதி உள்ளது. அதனால், உண்மைத்தண்மையை பற்றி கவலைப்பட வேண்டாம்” எனவும் அமித்ஷா பேசினார்.

    அமித்ஷாவின் பேச்சை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அகிலேஷ் யாதவ், “நாட்டின் ஆளுங்கட்சி தலைவர் பொய்களை பரப்ப தனது தொண்டர்களை எப்படி தூண்டிவிடுகிறார். அரசின் மீது உள்ள பல்வேறு பிரச்சனைகளை மறைக்க இப்படி பொய்களை பரப்ப பாஜக முயற்சிக்கிறது. இடைத்தேர்தல் தோல்வியை போல வரும் அனைத்து தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும்” என பதிவிட்டுள்ளார்.
    ×