search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகரளிரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    வடக்கு மாவட்டம்

    தலைவர்-லதா கண்ணன், துணைத்தலை வர்-யசோதா, அமைப்பா ளர்-சரஸ்வதி, துணை அமைப்பாளர்கள்-செல்வி, வகிதா ரகுமான், உமா, ராமலட்சுமி, ராதா, வலை தள பொறுப்பா ளர்கள்-சுப ரத்தினா, தேன்மொழி.

    தெற்கு மாவட்டம்

    தலைவர்-சுதர்சனா, துணைத்தலைவர்-ஜெயந்தி, அமைப்பாளர்-சுமதி ராமமூர்த்தி, துணை அமைப்பாளர்கள்-சுப்புலட்சுமி, கல்பனா, கற்பகம், ஸ்ரீமதி சந்தோஷ், கவிதா, புஷ்பம், வலைதள பொறுப்பா ளர்கள்-அனுஷியா, சோனியா.

    மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி 3 மாதத்தில் செயல்படுத்தப்படும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு 3-ம் ஆண்டில் அடிெயடுத்து வைத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையி லும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

    ரேஷன் கடை களில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    பழங்காலத்தில் சிறுதானியங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மறந்து விட்டனர். ஆனாலும் இப்போது டாக்டர்கள் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறுதானியத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

    ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்கும் திட்டம் தற்போது சோதனை முறையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்துதான் சிறுதானியங்களை வரவழைக்கிறோம்.

    எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு படுத்துவதற்கு தேவையான அளவு சிறுதானியங்கள் கையிருப்பு வேண்டும். அதன் பின்னர்தான் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த திட்டம் அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை மின் தடை ஏற்படும்.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    விருதுநகர்

    ஆவியூர் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியா ளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின்நிலையங்களு க்குட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. ஆதலால் ஆவியூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கல்லுப்பட்டி, தொடு வன்பட்டி, புல்லூர், வினோபா நகர், வலை யங்குளம், பெருமாள் புதுப்பட்டி, கல்லணை, சேது பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

    அதேபோல காரியாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி, பாண்டியன் நகர், அச்சம்பட்டி, சின்ன காரியபட்டி, காரியாபட்டி பஸ் நிலையம், செவல்பட்டி, சித்து மூன்றடைப்பு, சத்திரம் புளியங்குளம், பாப்பனம், கம்பிகுடி, சுந்தரம் குண்டு, வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

    புல்வாய்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், நாங்கூர், எழுவணி, குண்டு குளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், வேப்பங்குளம், முஷ்டக்குறிச்சி, தேசிய னேந்தல், எஸ். நாகூர், மேல கள்ளங்குளம், ஆவியூர், அரசகுலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு வாடிப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்ட மன்றத்தில் நிறைவேற் றப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகா னந்தன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • மீன்வளத் துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.05.2023-ந் தேதி வரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணி யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-


    கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்து டன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன்பிடிப்பு தடைக்காலத்தில் தமிழ கத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்று டன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான எரி எண்ணை மற்றும் இதர மானியத் திட்டங்க ளுக்கு நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நடப்பு 2023-ம் ஆண்டில் மீன்பிடி விசைப்படகுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீன்வளத் துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.05.2023-ந் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகினை பச்சை வர்ணம் பூசப்பட்டு படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும் . மேலும் ஆய்வின்போது படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைதொடர்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிர் காப்பு மிதவை மற்றும் உயிர்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக்குழுவிடம் அவசியம் காண்பிக்கப்பட வேண்டும், ஆய்வுக்கு உட்படுத்த ப்படாத மீன்பிடி விசைப்ப டகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கடலூர் மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் அனை வரும் தங்களது பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத படகுகளை 17.05.2023 அன்று தவ றாமல் ஆய்வுக்குழுவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
    • மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலமாக கிராமங்களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் ஜீலை மாதம் 15- ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த மே1-ந் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை உறுதி மொழி எடுத்து கொண்டவாறு வருகின்ற 13-ந் தேதி வரை பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு ஆகியோரை ஈடுபடுத்தி பெருமளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. வருகின்ற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளிகள், பொது நிறுவனங்களில் சுகாதார மற்றும் நல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவிக்கபடவுள்ளது.

    மேலும் 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தண்ணீர் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊரக பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டவுள்ளது. 29 - ந் தேதிமுதல் ஜீன் மாதம் 3- ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அவற்றிற்கான மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதேபோல் ஜீன் மாதம் 5- ந் தேதி முதல் 15- ந் தேதி வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (2-ந் தேதி) கோலாகலமாக நடக்கிறது.

    கோவிலின் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருமணம் நடக்கும் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் பல்லக்கில் புறப்பட்டு வந்தனர்.

    முன்னதாக நாளை அதிகாலை 4 மணியளவில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் யானை-ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த கோவில் மற்றும் சித்திரை, மாசி வீதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதிகளில் நிறுத்துவது தொடர்பாக மாநகர போலீசார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

    போக்குவரத்து மாற்றம்

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் வகையில், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள நான்கு ஆவணி, மாசி, வெளி வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி இன்று இரவு 11 மணியில் இருந்து ஆவணி மூலவீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் அன்று அனுமதி அட்டை இல்லாத இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. மஞ்சள் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு- மேலமாசி வீதி சந்திப்பு வழியாக, தானப்பமுதலி தெருவில் மேற்கு ஆவணி மூலவீதியிலும், பிங்க் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் கட்டப்பொம்மன் சிலை, நேதாஜி ரோடு வழியாக வாகனங்கள் நிறுத்த அனுமதி தரப்பட்டு உள்ளது. கீழ ஆவணி மூலவீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.

    இது தவிர மற்ற மாசி வீதிகளில் பகல் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.
    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு சென்னை தரமணியிலுள்ள மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. 2022 - ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்டபடிப்பு ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு மேலும் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு , ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவிைனஞர் பட்டய படிப்பு மேற்கண்ட படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். 10- வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில தேர்வு நடத்தப்படும். மேலும் நிறுவனத்தில் தாட்கோ மூலம் இலவசமாக சென்னையில் வழங்கப்படும். தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி-27.04.2023 இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற தாட்கோ இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுஹட்டி ஊராட்சி பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினையும், கெங்கரை ஊராட்சி பிக்கட்டி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் 2021-2022 -ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாண்டியன் நகர் மற்றும் குண்டுபெட் காலனி பகுதியில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடமும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் கல்லட்டி சாலை பணிகள், ரூ.5 லட்சம் மதிப்பில் பையங்கியில் சமையற் கூடத்தினையும், கட்டபெட்டு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கலர்செட், பெப்பேனில் ரூ.5 லட்சம் மதிப்பில் சமையற்கூடத்தினையும் மற்றும் இதர திட்டங்களாக 39 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டிற்கு 16 பணிகள் ரூ.59 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் இரண்டு ஆண்டுகளில் இவ்வூராட்சி பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மேலும், கோத்தகிரி பேரூராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த ஆண்டு ரூ.46 லட்சமும், நடப்பு ஆண்டில் ரூ50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், நடுஹட்டி ஊராட்சியில் 14 -வது மத்திய மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி அருகில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு சுவர், கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ், குரூஸ்லி முதல் குண்டுபெட் பிரிவு வரை ரூ.96.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹிம்சா கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தன், அனிதா, கோத்தகிரி பேரூராட்சி (செயல் அலுவலர்) மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, ஊராட்சித்தலைவர்கள் கிருஷ்ணன் (நடுஹட்டி), முருகன்(கெங்கரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்களாக விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிற னாளிகள் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகள் பெற்றி ருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத் தொழில் பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் வரையிலும் கடனு தவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவை யில்லை.

    மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.500 லட்சம் வரை மேலும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு வரையில் அதிகபட்சமாக ரூ.17.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது, மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மான்யமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்குத் தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DICஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தகவல் கூறியுள்ளார்.
    • உரிய நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது,

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனம் முதல் நகரி வரை புதிய அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக சலவாதி, தாதாபுரம், கருவம்பாக்கம், பெரப்பேரி, கீழ்மாவிலங்கை, ரோஷணை, மேல்பாக்கம், மேல்மாவிலங்ககை, புத்தனந்தல், வடம்பூண்டி, ஊரல் மற்றும் வெள்ளிமேடுபேட்டை ஆகிய 12 கிராமங்களில் தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 10/99)-ன்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இறுதி தீர்வம் வெளியிட ப்பட்டுள்ளது. இறுதி தீர்வத்தின் அடிப்படையில் 63% இழப்பீட்டுத் தொகை உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.     இறப்பு முகாம்கள்மேலும், எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகை பெறவேண்டியுள்ள உரிமைக்கான பதிவு ஆவணங்கள், இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் வங்கியில் அடமானம் மீட்கப்பட்ட பதிவு ஆவணங்கள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்காத நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 17.04.2023 முதல் 19.04.2023 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை திண்டிவனம் வட்டம், ஜக்காம்பேட்டை கிராமத்தில் உள்ள திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    எனவே அவ்வமையம் தொடர்புடைய பட்டாதாரர்கள் பட்டா நகல், வில்லங்கச்சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ளலாம். ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகை இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் பட்டா நகல் தேவைப்படுவோர் உரிய அசல் ஆவணங்களுடன் வந்தால் சான்றுகள் பெறு வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உரிய சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். உரிய நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது மிதித்து விட்டார்.
    • கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 56). இவர் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். மேலும் தஞ்சை பல்லேரி பகுதியில் உள்ள தனது வயலில் கத்தரிக்காய் சாகுபடியும் மேற்கொண்டு இருந்தார்.

    இளங்கோ பணி முடித்து தினமும் வயலுக்குச் சென்று கத்திரிக்காய் செடிகளுக்கு தண்ணீர் விடுவது உரம் தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம். சம்பவதன்று வயலுக்குச் சென்ற இளங்கோ அங்கு மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது மதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் கள்ளப் பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளங்கோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இளங்கோவின் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×