search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி, பழந்தின்னிப்பட்டி உள்பட 24 ஊராட்சிகளிலும் தூய்மை பணி தொடங்கியது.
    • நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    ராசிபுரம்:

    தமிழக அரசு சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற சுகாதார இயக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் பகுதியில் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், நீர்நிலைகள், சுகாதார வளாகங்கள் தூய்மைப்படுத்துதல் பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி, பழந்தின்னிப்பட்டி உள்பட 24 ஊராட்சிகளிலும் தூய்மை பணி தொடங்கியது. மேலும் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் மாதவன், அரசு அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பேரையூர் பேரூராட்சியில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்று முதல் 15 வார்டுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

    மதுரை 

    மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி, செயல் அலுவலர் ஜெயதாரா, துணைத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையிலும், பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்பு உள்ள நிழற்குடையில் மழைநீர் கால்வாயில் சுகாதாரப்பணிகள் நடைபெற்றது. முன்னதாக தூய்மையான பேரூராட்சியாக மாற்ற தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    பேரையூர் பேரூராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்று முதல் 15 வார்டுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.விழிப்புணர்வு, campaign ,பிரசாரம், Awareness,

    • காங்கிரஸ் கட்சியினர் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் பெருமைகளை உணர்த்திடும் வகையில் தொடர் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்
    • பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை :

    தமிழகம் முழுவதும் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின திருநாளை போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் தேசந்தந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் பெருமைகளை உணர்த்திடும் வகையில் தொடர் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் ரெகுநாதபுரத்திலிருந்து ஊர்வலமாக மருதன்கோன்விடுதி, வாண்டான்விடுதி வழியாக கறம்பக்குடி வரை காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். இந்த பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.

    இதில் கலந்துகொண்ட காங்கிரசார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கிராம புறங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் ஆண்கள், பெண்களிடத்திலும் சுதந்திரத்திற்காக எந்த அரசு பாடுபட்டது என்பதையெல்லாம் எடுத்துக்கூறி, பா.ஜ.க. மக்கள் விரோத போக்கையும் விளக்கமாக எடுத்துக்கூறினர்.

    நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி கிழக்கு வட்டாரத் தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அந்தோனிராஜ், மாநில பொதுகுழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், கறம்பக்குடி நகர தலைவர் ரெங்கநாதன், வைமா.கண்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் அன்பழகன், கலியமூர்த்தி, அருணாச்சல தொண்டைமான், வெள்ளைச்சாமி மற்றும் பலர் இந்த பா யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.
    • விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    அவிநாசி:

    பா.ஜ.க. 8ம் ஆண்டு சாதனை விளக்க தாமரை மாநாடு நாளை 17-ந்தேதி பல்லடம் கரையாம்புதூரில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க நூதன முறையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் விசிட்டிங் கார்டில், மாநாடு நடைபெறும் இடம், தேதி அச்சிட்டு மாநாட்டிற்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவிநாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விசிட்டிங் கார்டை கொடுத்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    • மாநாடு குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஒளிரும் விளம்பர பதாகைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும் ‘ரோபோடிக்’ பிரசாரம் தொடங்கியுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த பல்லடத்தில் வருகிற 17-ந்தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை மாநாடு நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இந்த நிலையில் மாநாடு குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 'எல்.இ.டி. வாக்கர்ஸ்' என்ற பெயரில்ஒளிரும் விளம்பர பதாகைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும் 'ரோபோடிக்' பிரசாரம் தொடங்கியுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் இந்த நூதன பிரசாரத்தை தொடங்கிவைத்தனர்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் பாண்டி, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இதில் கலந்து கொண்ட வாலிபர்கள் ஒளிரும் விளம்பர பதாகைகளை முதுகில் அணிந்து கொண்டு பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூதன பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியை தூய்மை நகராக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
    • சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    சோழவந்தான்

    நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டு பகுதிகளில் தன்னார்வலர்களுடன், தூய்மை பணியாளர்கள் இணைந்து தெருக்கள் மற்றும் வைகை ஆற்று கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றி "குப்பைகள் இல்லாத தூய்மை நகராக்கும்" முயற்சியில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமி சதீஸ், செல்வராணி ஜெயராமன்,தன்னார்வலர்கள் மில்லர் இளமாறன், மணிகண்டன், நாகேந்திரன், பேரூராட்சி கணக்கர் கல்யாண சுந்தரம், கண்ணம்மா, மேஸ்திரி சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உண்மையா பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பரப்பலாம் என ராஜஸ்தானில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அமித்ஷா தொண்டர்களிடம் பேசியுள்ளார். #BJP #AmitShah
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “உண்மையோ பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பகிரலாம். சுமார் 32 லட்சம் பேர் நம் வாட்ஸப் குரூப்களில் உள்ளனர். இதனால், எதையும் வைரலாக ஆக்கலாம்” என அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    “சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையான முலாயம் சிங்கை அடித்து விட்டதாக வாட்ஸப்பில் புரளி பரவியது. உண்மையில் அப்படி நடக்கவில்லை என்றாலும் அது வைரலானது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதி உள்ளது. அதனால், உண்மைத்தண்மையை பற்றி கவலைப்பட வேண்டாம்” எனவும் அமித்ஷா பேசினார்.

    அமித்ஷாவின் பேச்சை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அகிலேஷ் யாதவ், “நாட்டின் ஆளுங்கட்சி தலைவர் பொய்களை பரப்ப தனது தொண்டர்களை எப்படி தூண்டிவிடுகிறார். அரசின் மீது உள்ள பல்வேறு பிரச்சனைகளை மறைக்க இப்படி பொய்களை பரப்ப பாஜக முயற்சிக்கிறது. இடைத்தேர்தல் தோல்வியை போல வரும் அனைத்து தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும்” என பதிவிட்டுள்ளார்.
    கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தேர்தல் களத்தில் சூடு பிடிக்கும் பிரசாரங்கள் நடந்து வந்த நிலையில், மாலை 5 மணியுடன் பிரசாரங்கள் ஓய்ந்தது. #KarnatakaElections2018
    பெங்களூர்:

    கர்நாடக மாநில சட்ட சபைக்கு நாளை மறுநாள் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருப்பதால் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.  காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    224 தொகுதிகளிலும் கடந்த 2 மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. இந்த நிலையில் ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால், அந்த தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 223 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.



    கடந்த சில தினங்களாக 223 தொகுதிகளிலும் அனல் பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர். தேவேகவுடா தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்த நிலையில், இன்று காலை முதல் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள், தொண்டர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



    மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது என்றாலும் நாளை மாலை 5 மணி வரை வீடு, வீடாக சென்று அமைதியான முறையில் வாக்குச் சேகரிக்க எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் நாளை வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி ஓட்டு சேகரிக்க உள்ளனர்.

    நாளை இரவு எந்த பிரசார பணியிலும், எந்த கட்சியினரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டுப்பதிவை அமைதியான முறையில் நடத்த உள்ளூர் போலீசுடன் இணைந்து பணியாற்ற மத்திய படையினர் சுமார் 50 ஆயிரம் பேர் கர்நாடகாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15-ம் ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #KarnatakaElection2018
    ×