search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை"

    • தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.
    • கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார்.

    கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார்.

    இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

    இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-

    சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது.

    ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.

    விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.

    தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.

    சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை. புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.

    அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது.

    மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    • 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
    • தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

    இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

    இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.
    • பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

    பொது சுகாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக பெண்களைப் பாதிக்கும் நோய்களைப் பற்றி போதுமான அளவுக்கு கணிக்கவில்லை.

    இது இலக்கு வைக்கப்பட்ட சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. அரசு வழங்கும் சுகாதார சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில், சுகாதார சேவையை மேம்படுத்த நடமாடும் மருத்துவ பிரிவுகளை நிறுவ வேண்டும்.

    ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரகம், இதயம், எலும்பியல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் இருக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே, பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
    • பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

    புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

    பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.

    ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். #BJP #PMModi #TamilisaiSoundararajan
    சென்னை:

    நாடு முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் பயன்பெரும் வகையிலான தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று ஜார்கண்டில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம், இந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டது. 

    இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடியை 2019-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 


    ×