search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி 230 கோடி செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலையின் இரு புற மும் நெடுஞ்சாலை த்துறையினர் சரியான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமலும், ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வரை வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    மேலும் கடந்த 2 மாதமாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தியும், சரியான முறையில் அளவீடு பணிகளில் சர்வேயர் ஈடுபடவில்லை என கூறி தொடர்ந்து அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று திடீரென்று கீழ்ப்பட்டாம்பாக்கம் ஸ்டேட் வங்கி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை பார்த்த ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்கதைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணி நடைபெற்று முடியவில்லை. ஆனால் இந்த பணியை தொடங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று பணியில் ஈடுபட்ட வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் சட்டவிரோதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என புகார் தெரிவிப்போம் என தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் முரண்பாடான பல்வேறு தகவல்கள் தெரிவித்ததால் கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ேகாவிலுக்குள் ஒடிசா வாலிபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த மந்தை அம்மன் ேகாவில் என்கின்ற ஆதி பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் கோவிலின் கதவுகளை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்ப வர்கள் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் பூட்டிய கோவிலுக்குள் இருப்பதையும், அவர் விளக்குகள் ஏற்றக்கூடிய பகுதியில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைந்து போட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் நிர்வாகி ராமசாமியை அழைத்து கோவில் பூட்டை திறந்து கோவிலுக்குள் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைக்கா சிங் என்று தெரியவந்தது. அவரிடம் ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மர்ம வாலிபர் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த சம்பவம் அவனி யாபுரம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு
    • 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • மதுரை விமான நிலைய காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து ஓடுதள பாதையில் திரிந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த யுகில் மார்டி என்பவர் மனைவி மற்றும் 19 வயது மகன் கிலியன் மார்டியுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை விமான நிலைய ஓடுபாதை காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து வாலிபர் கிலியன் மார்டி உள்ளே சுற்றி திரிந்துள்ளார்.

    இதனை சி.ஐ.எஸ்.எப். ஆய்வாளர் துருவேய் குமார் ராய் தலைமையில் வீரர்கள் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து அவனி யாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் கிலியன் மார்டி மனநலம் பாதிக்கப் பட்டவர் என்பது தெரிய வந்தது. மனநிலை சரியில்லா ததால் வேலைக்கு அனுப்பா மல் மகனை தன்னுடன் வைத்திருப்ப தாகவும், இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டி ருந்த போது எங்களுக்கு தெரியாமல் மகன் விமான நிலையத்திற்குள் சென்று விட்டதாகவும் தந்தை யுகில் மார்டி தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் கிலியன் மார்டி மீது வழக்குப்பதிு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் மதுரை விமான நிலையத்திற்குள் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம்-விருதுநகர் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் பணி முடித்து ஊழியர்கள் கதவைப் பூட்டிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். அவர்கள் இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் டவுன் போலீசார் உடனடியாக வங்கிக்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு மர்மநபர்கள் புகுந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை.இதையடுத்து எலெக்ட்ரீசியனை அழைத்து அலாரத்திற்கான இணைப்பினை சோதனை செய்தனர்.

    அப்போது மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக அலாரம் தானாகவே ஒலிக்கத் தொடங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்
    • தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரியலூர்,

    ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். அப்போது அவர், தனது இடம் தொடர்பாக, சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தீக்குளிக்க முயன்றதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீடு சூறை-பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
    • மண்ணச்சநல்லூர் அருகே பரபரப்பு

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார். சொந்தமாக டாட்டா ஏசி வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவர் தில்லாம்பட்டியைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.அவ்வண்டியில் அப்பெண்ணின் புகைப்படத்தை இரண்டு பக்க கதவுகளிலும் வரைந்து உள்ளார். இதை பெண்ணின் உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அந்த பெண்ணின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனைக் கண்டு கொந்தளித்த ஊர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு காளவாய்ப்பட்டியில் உள்ள செல்வகுமார் வீட்டிற்கு சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை அடித்து நொறுக்கினர். மேலும் அவரது வீட்டையும் சூறையாடி உள்ளனர்.அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்வகுமாரின் அண்ணன் கோபியை வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். அவர் தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த பெண் என்னால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறிவந்தார். அத்துடன் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்கும் தின்னரை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரு ஊர் பிரச்சினை என்பதால் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் காளவாய்ப்பட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காளவாய்ப்பட்டியில் இளைஞர் வீட்டை சூறையாடிய 13 பேரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

    • தா.பழூர் அருகே ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது
    • இரண்டு சமூக பிரிவினர் அந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியை சேர்ந்த கோடாலி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டது. இரண்டு சமூக பிரிவினர் அந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர்.இந்தநிலையில் அந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் அதே இடத்தில் ரேஷன் கடை அமைத்தால் ரேஷன் பொருட்களை வாங்க மாட்டோம் என்றும் இரு தரப்பினருக்கும் பொதுவான இடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால் மற்றொரு தரப்பினர் தங்கள் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைக்கு தங்களது இடத்தை கொடுத்து கட்டிடம் கட்ட சொன்னோம்.

    ஆனால் அப்பொழுது மற்றொரு தரப்பினர் கட்டிடம் கட்ட இடம் தரவில்லை. எனவே ஏற்கனவே ரேஷன் கடை இருக்கும் இடத்தில் தான் கடை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.இந்தநிலையில் நேற்று திடீரென்று ஒரு தரப்பினர் தங்களது ரேஷன் கார்டை அதிகாரிகளை சந்தித்து ஒப்படைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து ரேஷன் கடையை நோக்கி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
    • மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரி பட்டியை சேர்ந்தவர் மணி வண்ணன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 25). இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.

    இந்த நிலையில் அதி காரியப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வசுமதி(25) என்பவருடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர்க ளுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக மணிகண்ட னுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன் நண்பருடன் லோகேஸ்வரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் லோகேஸ்வர னின் பின் தலையில் தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே லோகேஸ்வரன் பரிதாப மாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்த னர். பின்னர் மணிகண்ட னையும் பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் தனது மனைவியுடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக அந்த பகுதி யினர் கூறியதால் தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

    இதை அடுத்து போலீசார் மணிகண்டனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு இடையே லோகேஸ்வரன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முசிறி கோர்ட் வளாகத்தில் பரபரப்பு
    • மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சி முசிறி நெய்வேலையை சேர்ந்தவர் உஷாராணி(வயது 25). இவரின் கணவர் பாலசுப்பிரமணியன்(37). இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை தொடரபாக உஷாராணி முசிறி கோர்ட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை அங்கு கண்ட பாலசுப்பிரமணியன் தகாத வார்த்தையால் திட்டி, செருப்பால் அடித்து, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது
    • அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    பேனர் கிழிப்புஇதனை தொடர்ந்து இன்று காலை விழா நடைபெறும் இடத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள் வந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர் . பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார் ? எதற்காக கிழித்தார்கள் என தெரியவில்லை. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் யார் பேனரை கிழித்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெட்டிச்சா வடி போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை கைப்பற்றினர்.
    • கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சதம்பூர் கிராமத்தில் காலி ங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை கைப்பற்றினர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    அந்த நபரின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் வாய்க்காலில் குளித்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டா ரா என்று தெரிய வில்லை.

    இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×