search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலிண்டரில் கசிவு
    • புகை மண்டலம் ஏற்பட்டதால் பரபரப்பு

    ஜெயங்கொண்டம்,

    திருச்சியில் இருந்து 40 கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர்களை ஏற்றி கொண்டு கும்பகோணத்திற்கு ஒரு சரக்கு வாகனம் சென்று கொண்டு இருந்தது. இந்த வாகனத்தை திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் ஓட்டி சென்றார். ஜெயங்கொண்டம் கடைவீதியில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த மணி தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.அப்போது ஒரு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சரக்கு வாகனம் கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை விமான நிலைய சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர்.
    • இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெருங் குடி பகுதியில் உள்ள விடு தலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக மாலை அணி விக்க வந்தனர்.

    அவர்கள் செல்லும் பாதையில் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்லுங்கள் என கூறினர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. வசந்த குமார் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டிரான்ஸ்பார்மரின் மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
    • அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் நேற்று இரவு மின்சார வினியோகம் தடைபட்டு இருந்தது. இரவு 9 மணிஅளவில் அந்த பகுதியில் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.

    அப்போது சம்பத் நகரில் இருந்து நாராயணவலசுக்கு செல்லும் வழியில் சாலையோரமாக உள்ள டிரான்ஸ்பார்மரின் உச்சியில் இணைப்பு கொடுக்கப்பட்ட மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மருக்கு சிறிது தூரத்துக்கு முன்பே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர்.

    மேலும் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி கீழே விழுந்ததால் அதன் அருகில் யாரும் செல்லவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு தடைபட்டதால் தீ தானாகவே அணைந்தது. இதனால் பெரும் அசம்பா–விதம் தவிர்க்கப்பட்டது.

    அதன்பிறகு வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் அங்கிருந்து கடந்து சென்றார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல்குவாரியில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலை வாழை தோட்ட வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி பேபி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    தங்கராஜ் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடியை நிறுத்த முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்தோட்டில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் முத்தூரில் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்று வருவதாக கூறி தங்கராஜ் சென்றுள்ளார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கொல்லன் வலசு பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் கழிவு கற்கள் கொட்டப்படும் இடத்தில் அழுகிய நிலையில் தங்கராஜ் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.

    ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர்.
    • இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர்

    ,கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளாக வீடு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து உள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.
    • பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது.

    கொடுமுடி:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் 6 ஏ நம்பர் ஈரோட்டில் இருந்து சோலார், மொடக்குறிச்சி வழியாக பாசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பஸ்சை கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்தார். மணி என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    பஸ் ஊஞ்சலூர் அடுத்த சோளாங்காபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.

    இதனால் பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது. பயணிகள் உயிர் தப்பினர்

    இதில் பஸ்சில் பயணம் செய்த 8 பயணிகள் உயிர் தப்பினர்.

    இதைத்தொடர்ந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.
    • கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார்

    கடலூர்

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.  இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் ஆறுகள் ஓரமாகவும் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வைடிப்பாக்கம், மோரை எவரட்புரம் பகுதியில் அகற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை சரிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று காலை சரவணபுரம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதனை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக நெல்லிக்குப்பம் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 25, 26, 27 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று கமிஷனர் மகேஸ்வரி வாகனத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர பின்னர் எந்தவித அனுமதியும் இல்லாமல் குப்பைகள் கொட்டி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் குப்பைகளை எரித்து வருவதால் மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் நேரில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது 

    • மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று துணை மேயர் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். மாநகராட்சி துணை மேய ராக நாகராஜன் உள்ளார். இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.

    மதுரை மாநகராட்சியில் பதவிக்கு வந்த புதிதில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே செயல் பட்டு வந்தனர். மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 2 பேரையும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்க முடிந்தது.

    ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி மேய ரின் நிகழ்ச்சிகளில், பெரும் பாலும் துணை மேயரை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே துணை மேயர் நாகராஜன் சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத் தொடரில் பேசும் போது, என்னை மேயர் தரப்பினர் மாநகராட்சி விழாக்கள் முதல் நிர்வாக பணிகள் வரை திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர் என்று பகிரங்க குற்றம் சாட்டினார்.

    இதற்கு மேயர் தரப்பு பதில் அளிக்கையில், மாநகராட்சி நிர்வாக பணிகளில் தலையிட துணை மேயருக்கு அதிகாரம் இல்லை என்று பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் துணை மேயர் நாகராஜன் நேற்று மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடித த்தில் கூறப்ப ட்டு இருப்ப தாவது:-

    கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாநகராட்சி 5-வது மண்ட ல அலுவல கத்தில் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எனது பெயர் விடுபட்டது. இது தொட ர்பாக நான் உங்களுக்கு கடிதம் எழுதி னேன். பல தடவைகள் நேரிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடமும் நினை வு படுத்தினே ன். ஆனாலும் புதிய கல்வெ ட்டை வைக்க விடாமல் சிலர் தடுத்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் மாநக ராட்சி 29-வது வார்டில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. இதற்காக வைக்கப்பட்டு உள்ள கல்வெட்டிலும், எனது பெயர் இடம் பெற வில்லை. அதே நேரத்தில் மேயர், கமிஷனர், மண்டல தலைவர், கவுன்சிலர் ஆகி யோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் ஏதோ திட்டமிட்டு எனது பெயரை வைக்காமல் உள்ளதாக தெரிகிறது. ஆகவே மேற்கண்ட 2 பகுதிகளிலும் என் பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக வைக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 21-ந் தேதி மாநக ராட்சி 5-வது மண்டலத்தில் நடக்க உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நான் போராட்டத்தில் ஈடுபடு வேன் என்று கூறப்பட்டு உள்ளது.

    மதுரை மாநகராட்சியில் மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • காட்டு யானைகள் குட்டியுடன் நின்ற வாகனங்களை வழிமறித்து நின்றன.
    • யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலையில் அங்கும் இங்கும் அலைமோதுகின்றன.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே அதிகாலையில் காட்டு யானைகள் குட்டியுடன் கூட்டம் கூட்டமாக நடமாடியதோடு, சாலையில் நின்ற வாகனங்களை வழிமறித்து நின்றன.

    இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தினர். யானைகள் நடமாடத்தை தங்களது செல்போனில் சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் சாலையோர வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    காட்டு யானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும்,

    சாயோரம் நிற்கும் யானைகளை செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

    • தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.
    • உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூடிய பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.   அது முதல் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.  மேலும், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பி.எஸ். சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.  இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  இதில் வெளியேறு! வெளியேறு! தலைமை பதவிக்கு தகுதியில்லாத நயவஞ்சகன் நம்பிக்கை துரோகி எடப்பாடியே அ.இ.அ.தி.மு.க.வை விட்டு வெளியேறு, உனக்கு துதிபாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு என்று அச்சிடப்பட்டுள்ளது.    மேலும், மறைந்த ஜெயலலிதா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளது.

    இந்த போஸ்டர் உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் துரை தலைமையிலான கட்சியினர் புகார் மனு அளித்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் சிறையில் மரணமடைந்தார் அவர்களை பணி இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்
    • பேரணியாக சென்றவர்கள் செல்லாத வகையில் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

    கடலூர்:

    நெய்வேலி போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் சிறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீசார் சவுமியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை பணி இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்ட்டிருந்தது.  அதன்படி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், நிர்வாகிகள் பஞ்சாட்சரம், சிவானந்தம், பாலமுருகன், ஜெய பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுபான்மை குழு மாநில துணைத்தலைவர் மூசா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரண்டனர் .இவர்கள் கடலூர் டவுன் ஹாலில் இருந்து பேரணியாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பழைய கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக கோஷங்கள் எழுப்பிக்கொண்டு சென்றனர். அப்போது கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.   மேலும், சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டு பேரணியாக சென்றவர்கள் செல்லாத வகையில் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    ×