search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர்.
    • பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

     பல்லடம் : 

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்றிரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ராஜன் பஸ்சை ஓட்டினார். பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது அந்த பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி(வயது 21),உதயசந்திரன்(23) ஆகியோர் திருப்பூர் செல்வதற்காக பஸ்சிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

    வாலிபர்கள் தகராறு

    அவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டினர். இடை நில்லா பஸ் என்பதால் அந்த பஸ் நிற்காமல் சென்றது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, உதயசந்திரன் ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சென்று ராயர்பாளையம் பஸ் நிறுத்தம்அருகே, அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர். மேலும் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி டிரைவர் ராஜனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    டிரைவர்கள் போராட்டம்

    தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், இரு தரப்பினிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பஸ் ஓட்டுநர்கள், சிரஞ்சீவி, உதயச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததையடுத்து டிரைவர்கள் பஸ்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூர்- பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • வீட்டிற்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்துள்ளது.
    • தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த தேனி கூட்டை தண்ணீர் அடித்து கலைத்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னமனவாரணபள்ளி கிராமத்தில் சசிகுமார் என்பவரது வீட்டிற்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்துள்ளது.

    தேனீக்கள் கூட்டத்தை பார்த்த சசிகுமார் குடும்பத்தினர் அலறிய டித்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் கிராம மக்கள் தேனீக்களை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

    ஆனால் தேனீக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அப்பகுதியில் பொதுமக்களை கொட்ட முயன்றது. இதனால் கிராம மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்டுக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரியில் இருந்து மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த தேனி கூட்டை தண்ணீர் பீச்சி அடித்து கலைத்தனர்.

    பின்பு அப்பகுதியில் இருந்த தேனீக்களை அகற்றி பையில் போட்டுக்கொண்டு வனப்பகுதியில் கொண்டு சென்று தேனிக்களை பத்திரமாக விட்டனர்.

    வீட்டிற்குள் இருந்த தேனீக்கள் கூட்டை அகற்றியதால் அப்பகுதி பொதுமக்களும் சசிகுமார் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். வீட்டுக்குள் தேனிகள் கூட்டம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு
    • பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள்பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம்கோட்ட ரெயில்வே அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர்- இளம்பெண்ணையும் வீடியோ எடுத்தார்.

    இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர், திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும்புடுச்சி, புடுங்கிட்டாங்களா, என்ன வந்து விசாரிக்கிறீங்க, என்னை யாரும்எதுவும் கேட்க முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க,குறுக்கிட்ட அந்த பெண்,' உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த என வாய்க்கு வந்தபடி பேசினார். அங்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னைரெயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி.
    • நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசரியர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

    இந்நிலையில், வழக்கம்போல் ஆசிரியை ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த சிலர் நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டனர்.

    உடனே, அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திரை சீலன், அருள் ஜோதி, பாலாஜி அமுதன் ஆகியோர் நீண்ட நேரம் போராடி மொபட்டில் இருந்த நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் கூறும்போது:-

    பள்ளியின் அருகில் கருவை காடுகள் மண்டியிருப்பதால் அங்கிருந்து அடிக்கடி பாம்புகள், விஷபூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் வருகிறது. எனவே, கருவை மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
    • பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டி ருந்தது. இதேபோல் பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அந்த போர்டுகளை பத்மநாபபுரம் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலையில் அகற்றி னர். இதை அறிந்த பாரதிய ஜனதா கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலையில் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணித்தலை வர் குமாரதாஸ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் நகராட்சி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தி லும் ஈடுபட்டனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஆணை யாளர் லெனின் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில்உடன்பாடு ஏற்படா ததால் கவுன்சிலர்கள் அலுவ லக அறைக்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுடன் நகராட்சி தலைவர் அருள் சோபன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து பாரத மாதா போர்டு போரா ட்டம் நடத்தியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அகற்ற ப்பட்ட இடத்திலேயே இர வில் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அந்த இடத்தில் பாரதமாதா போர்டு மாயமாகி இருந்தது.

    இதுபற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகம் அந்த போர்டை மீண்டும் அகற்றியிருப்பதாக தெரியவந்தது. இதனால் பாரதிய ஜனதாவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றனர்.
    • வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார்.

    லாரி டிரைவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வந்து இறக்கி விட்டு மார்க்கெட் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கும்பகோணம் மாணிக்கநாச்சியார் கோவில் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தேவன் (25) ஆகியோர் வீரக்குமார் ஓட்டி வந்த லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வீரக்குமார் வைத்திருந்த ரூ.1000-ஐ பறித்து சென்று விட்டனா்.

    இந்த தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் வீரக்குமார் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட அருண் மற்றும் தேவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட அருணுக்கு 3 வருடம் 5 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் உடந்தையாக இருந்த தேவனுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • தடயங்களை அழிக்க முயற்சியா?
    • கிரீஷ்மா வீட்டில் போலீஸ் வைத்த சீலை உடைத்தது யார்?

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா (வயது 22).

    இவருக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கேரள மாநிலம் முறியன் கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காதலி கிரீஷ்மா தான், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதன் அடிப்படையில் கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தடயங்களை அழித்ததாக சிந்து மற்றும் நிர்மல்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போலீ சாரின் விசாரணை யில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தி ருப்பதும், ஜாதகப்படி கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என்பதால், காதலனை அழைத்து அவரை ஏமாற்றி கணவர் எனக் கூறி கிரீஷ்மா விஷம் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பான விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால், அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது விஷ பாட்டிலை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அந்த வீட்டுக்கு சீல் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னர்.

    தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அழைத்துச் சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என விசாரணை நடத்த போலீசார் திட்ட மிட்டிருந்தனர்.

    இந்த சூழலில் நேற்று யாரோ, கிரீஷ்மா வீட்டில் போலீசார் வைத்திருந்த சீலை உடைத்துள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், பளுகல் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையில் கேரள குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடம் வந்து பார்வை யிட்டனர்.

    கிரீஷ்மாவை விசாரணைக்கு வீட்டுக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டிருந்த சூழலில், வீட்டில் போலீசார் வைத்த சீல் உடைக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்குள் புகுந்து தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருக்கலாமா? அவர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது.

    சம்பவம் தொடர்பாக இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கிரீஷ்மா வீட்டுக்கு வைத்த சீலை உடைத்தவர்கள் குறித்து பதிவு ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • தினமும் பலருடன் செல்போனில் பேசியதால் கழுத்தை நெரித்து கொன்றேன்
    • ஏளனமாக பேசி கிண்டல் செய்வார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி பெனிஸ்டர் (வயது 30). இவரது மனைவி பத்மா (30).

    இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை வீட்டில் பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து பத்மாவின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பத்மா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி போலீசில் சரண் அடைந்தார். மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆண்டனி பெனிஸ்டர் கூறியதாவது:-

    நானும் பத்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எங்களுக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரண மாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். இதையடுத்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு பிரிந்து செல்லலாம் அதுவரை ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று கூறி ஒரே வீட்டில் வசித்து வந்தோம் .

    இந்தநிலையில் நேற்று காலை எனது மகனும் மகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். வீட்டில் இருந்த எனது மனைவி பத்மா தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் நடத்தை யில் எனக்கு சந்தேகம் இருந்ததால் இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவர் நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறது, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று என்னிடம் கூறினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அவரது கழுத்தை நெரித்தேன். இதில் பத்மா மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். வீட்டிற்கு வந்த போதுதான் எனது மனைவி இறந்திருக்கும் தகவல் தெரிய வந்தது.உடனே நான் போலீசில் சரணடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை,போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மத்தூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஒரு மறைவுக்கு பின்னால் அமர்ந்து மது பாட்டில்களை விற்கும் வீடியோ காட்சி நேற்று பரவியது.

    இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.அப்போது அந்த சிறுவனின் வீடு பூட்டியிருந்தது. அக்கிராமத்தில் விசாரித்த போது மது விற்ற சிறுவன் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.

    மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த சிறுவனின் தந்தை இறந்து விட்டார். எனவே தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறான்.இதையடுத்து அந்த சிறுவனின் தாய் மது விற்று வந்துள்ளார்.

    சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. தாய் கைதான நிலையில் அந்த சிறுவன் மது விற்றிருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்த வீடியோ வெளியானதால் சிறுவனின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள தங்களது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் ஊருக்கு திரும்பியதும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    11 வயது சிறுவன் மது விற்ற வீடியோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
    • 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் வீரபாகுபதியில் அனுமதி இன்றி வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. இதனை பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டித்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்து முன்னணி ராஜாக்க மங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து புத்தளம் ஜங்ஷனில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் ஜெகநாதன், பொரு ளாளர் முத்துராமன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான அய்யப்பன், ராஜக்கா மங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தர்மலிங்கம் என்ற உடையார், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா தெற்கு மாநகர பொதுச் செயலாளருமான வீரசூரபெருமாள், ஓ.பி.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், வீரபாகுபதி ஊர் பொதுமக்கள் திரண்டனர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் விரைந்து வந்தார். அவர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சினைக்குரிய வீட்டில் எக்காரணம் கொண்டும் ஜெபக்கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம். இதனை மீறி ஜெபக்கூட்டம் நடத்த முயற்சித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் உறுதி கூறினார்கள்.

    இதனை ஏற்று போரா ட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வீரபாகுபதியில் உள்ள அந்த வீட்டில் வைத்து ஜெபக்கூட்டம் நடத்திவிட கூடாது என்பதற்காக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, ஏ .டி .எஸ்.பி. ராஜேந்திரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்

    அப்போது ஜெபக்கூட்டம் நடத்து வதற்காக 40-க்கும் மேற் பட்டோர் வந்திருந்தனர். அப்போது தகுந்த அனுமதி இருந்தால் மட்டுமே ஜெபக்கூட்டம் நடத்த முடியும் என்று அவர்களிடம் கூறினர்.

    உடனே அவர்கள் டி.எஸ்.பி.யிடம் நாங்கள் 10 நிமிடம் ஜெப கூட்டம் மட்டும் நடத்திவிட்டு செல்கி றோம் என்றனர். பின்னர் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் காலை 9.10 முதல் 9.20 வரை 10 பேர் ஜெபம் செய்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட் டது.

    • கீழவாசலை சேர்ந்த முகமது உஸ்மான் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    வல்லம்:

    தஞ்சை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார்.

    பின்னர் மாணவியின் தாயை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவியின் தாய் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் தஞ்சை கீழவாசலை சேர்ந்த முகமது உஸ்மான் (வயது 39) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முகமது உஸ்மான் கடந்த 4-ம் தேதி மாணவியிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது பற்றி அந்த மாணவி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியில் மாறி மாறி குத்திக் கொள்கின்றனர்.
    • இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாகஇயங்கி வருகிறது.

    இந்த மருத்துவ மனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்தி ற்காக அனுமதித்துள்ளார்.

    அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர்  அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார்.

    அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார்.

    இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக  முயன்றார்.

    இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர்.

    இந்த காட்சிகள் மருத்துவம னையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர்.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின்  மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×