search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலை யிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

    இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.

    பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.

    • சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் எஸ்.ஆர்.சி. நகர் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற ஒருவர், கார் வருவதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர் அவரை பார்த்து போ என சொன்னதாகவும், அதற்கு ரோட்டில் சென்றவர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், இதனால் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு,பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதற்குள் ரோட்டில் நடந்து சென்றவர் தரப்பில் இருந்து வந்த நபர்கள், காரில் வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காரில் வந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு திரண்டனர். மோதல் ஏற்படும் சூழ்நிலையில் அங்கு வந்த பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து கலைந்து போக சொன்னார்கள். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அந்தப் பகுதிக்கு நேரில் வந்தார் அப்போது அவரிடம் ஒரு தரப்பினர், எதிர்த் தரப்பினர்,சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களால் சமூகவிரோதச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதன் பின்னர் இரு தரப்பினரும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    • அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
    • போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.

    இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட முருகேசன் நகரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.44 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

    இந்த பூங்காவை அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி சுற்றுச்சுவரை யாரோ சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணலை கொட்டி வைத்திருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்பொழுது அனுமதி இன்றி சிலர் பூங்காவின் ஒரு பகுதியில் உள்ள சுவரை உடைத்து ரோடு போடுவதற்காக குழி தோண்டி மணல்களை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

    மாநகராட்சி அதிகாரிகள் வந்ததும் அந்த பகுதி மக்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் அதிமுக வீரப்பன் சத்திரம் பகுதி செயலாளர் கேசவமூர்த்தி,வார்டு செயலாளர் செல்வராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

    அவர்கள் பூங்கா சுவரை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,

    பூங்காவின் சுற்று சுவரை அனுமதியின்றி சிலர் உடைத்து ரோடு போடுவதற்காக அங்கு குழிகள் தோண்டி மணலை நிரப்பியுள்ளனர்.

    இது சம்பந்தமாக மாநகராட்சி சார்பில் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள திண்ணப்பட்டியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் தடம் உள்ளது. மேலும் மதுரை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில்களும் இந்த வழியாக சென்று வருகின்றன.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் ரெயில் பாதை என்பதால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் வந்து, செல்கின்றன.

    ெரயில் தடமாற்றி தண்டவாளத்தில்...

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள முள்ளிசெட்டிபட்டி இடையே ரெயில் தடம் மாற்றியில் இடையே கற்களை வைத்துள்ளனர். தொடர்ந்து மற்றொரு தண்டவளத்தில் இரும்பு ராடுகளை எடுத்து தண்டவாளத்தின் குறுக்கே வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து அவ்வழி வந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டு ரெயில் நிலையத்திலிருந்த பாயிண்ட் மேன் அருண் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாயிண்ட் மேன் அருண் கற்களையும் இரும்புத் ராடையும் அப்புறப்படுத்தினார்.

    இதில் தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் அகற்ற முடியாத அளவுக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்ற சிரமம் ஏற்பட்டது. கடின முயற்சிக்கு பிறகு அந்த கற்கள் முழுவதும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    கற்கள் மற்றும் இரும்பு ராடு வைத்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை தடமாற்றம் செய்யும் யார்டு பகுதியில் இடையே கற்கள் வைத்திருந்ததால் ரெயிலை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்டவாளம் நடுவே கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த மர்ம கும்பல் யார் ? என கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அவர்கள் தண்டவாளம் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த சம்பத்தை அடுத்து சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹேதா, துணை கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    உள்ளூர் பகுதியை சேர்ந்த நபர் சரியான நேரத்தில் தகவல் தெரிவித்ததால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள், போலீசார் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் யானை, மான், கரடி செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது ஒற்றை யானை ஊருக்குள் பூகுவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பர்கூர்-கர்நாடகா செல்லும் பிரதான சாலை பகுதியில் பர்கூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சாலையில் ஒற்றை யானை சென்றது.

    இதனால் சாலையில் செல்லக்கூடிய இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகள் வாகன த்தை ஓரமாக நிறுத்தினர். சில வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் யானையை படம் பிடித்தனர்.

    சுமார் அரை மணி நேரம் சாலையில் வலம் வந்த ஒற்றை யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பர்கூர் போலீஸ் நிலையத்தில் பின்புற மதில் சுவற்றின் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • சகோதரர் மகளை அவதூறாக பேசியதால் நண்பரை தாக்கி கொலை செய்தேன்
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்பு பிஸ்வாஷ் (வயது 28), அனில் பார்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வேலை பார்த்து வந்தனர். இதற்காக 5 பேரும் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.

    நேற்று பணிமுடிந்து அறைக்கு வந்த 5 பேரும் ஒன்றாக மது அருந்தி உள்ள னர். அப்போது சோம்பு பிஸ்வாஷ், அனில்பார்மன் இடையே தகராறு ஏற் பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனில்பார்மன் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில் சோம்பு பிஸ்வாஷ் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சோம்பு பிஸ்வாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உறவினர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து வர 3 நாட்கள் ஆகலாம் என்பதால் பிரேத பரி சோதனைக்கு பிறகு சோம்பு பிஸ்வாஷ் உடல் அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் தப்பி ஒடிய அனில் பார்மனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான கார ணம் குறித்து அவர் போலீ சாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மது அருந்திக் கொண்டிருக்கும் போது சோம்பு பிஸ்வாஷ் குடி போதையில், எனது சகோதரர் மகள் பற்றி அவதூறாக பேசினார். இதனை நான் கண்டித்தேன்.

    ஆனால் அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் சோம்பு பிஸ்வாஷ் இறந்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளார்.

    • சதீஷ் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
    • தொடர்ச்சியாக, மருத்து வமனை வளாகத்தில் சதீஷ்சை அந்த கும்பல் தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். கார் ஓட்டுநரான இவர், திண்டிவனம் 5-வது வார்டு கிளை அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்கும், கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர், அவரது சகோதரர் வேலவனுக்கும், கடந்த 10ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சங்கர், வேலவன், அவரது கூட்டாளிகள் ஆன பிரபா, அஜித், வேலு மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள், சதீஷ் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர். வெளியே சென்ற சதீசை அந்த கும்பல், கான்கிரீட் கல் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இதில்அவருக்கு தலை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை சதீஷின், உறவினர்கள் அவரை, மீட்டு, ஆட்டோவில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றது. அதில், சதீஷ் ஏற்றி வருவதாக கருதிய, அந்த கும்பல், மருத்துவமனை வாசலில், ஆம்புலன்சை மடக்கி, கையில் வைத்திருந்த ஆயுதத்தால், முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் விநாயகமுருகன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சரண்ராஜ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக, மருத்து வமனை வளாகத்தில் சதீஷ்சை அந்த கும்பல் தாக்கியுள்ளனர். அதை தடுக்க சென்ற மகாலட்சுமி, என்பவரையும் தாக்கி விட்டு, அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில், மகாலட்சுமிக்கும், தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த சதீஷிக்கு, தலையில் 13 தையல், வலது கண் புருவத்தில்3 தையலும் போடப்பட்டது. அங்கிருந்து சதீஷ் மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.
    • ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.

    அப்போது அந்த வழியாக கார், இரு சக்கர வாகனங்கள் வந்தது. ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை க்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் ஆயில் கசிந்த பகுதிகளில் டயர்களை போட்டு அந்த பகுதியில் வாகனங்கள் வராமல் தடுக்கப்பட்டு மணல் போட்டு சரி செய்தனர்.

    இதனால் வாகனங்களில் வந்தவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்த னர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பும் பர பரப்பும் அந்தப் பகுதியில் நிலவியது.

    • கடலூர் முதுநகரில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் திடீர் மாயமனார்.
    • கடலூர் முதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செல்லங்குப்பம் சேர்ந்தவர் ஆறுமுகம் . இவரது 12 வயது மகன் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8-ம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் மாலை மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு வருவது வழக்கம்.

    ஆனால் நேற்று வீட்டுக்கு வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் அதே 8-ம் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவனும் விட்டுக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என்பதால் வீட்டுக்கு செல்லாமல் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மேலும் இரு வீட்டினரும் காணாமல் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் முதுநகர் பகுதியில் 3 சிறுமிகள் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று காணாமல் போனார்கள். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையின் பேரில் 3 சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இரண்டு மாணவர்கள் திடீர் என காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் கூத்தப்பாக்கத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் முதியவர் தவறி விழுந்தார்.
    • அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் அருகே சி .கே. சுப்பிரமணியன் நகர் உள்ளது. இந்த நகரில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை பள்ளத்தில் மூடி உடைந்த நிலையில் அது மூடப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று இரவு அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் அந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்துள்ளார். மேலும் அவர் பள்ளத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார்.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டனர் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த பாதாள சாக்கடை பள்ளத்தை மூடி, அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.
    • இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.

    இதனால் அந்த கம்பி மின்கம்பியிலிருந்து சாலையின் கீழ் பகுதி வரை தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் அந்த கம்பியை தொட்டால் மின்தாக்கிவிடும் என்ற அச்சத்தில்ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வர தாமதம் ஆகிவிட்டது.

    இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு குழந்தையை கொண்டு சென்று விட்டு செல்லும் பெற்றோர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் அச்சத்தோடு சென்றனர்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அட்டையும் கற்களையும் வைத்து பொ துமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி அந்த கம்பியில் மோதாமல் செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×