search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168147"

    • பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம்.
    • லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும்.

    வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை இரண்டாவதாக மற்றொரு சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மேலும் அதிக போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம். அதாவது ஒரே மொபைல் நம்பர் கொண்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

     

    லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக மெசேஞ்ச், மீடியா, அழைப்புகள் என அனைத்துமே எண்ட்-டு-எண்ட் என்க்ர்பிட் செய்யப்படுகிறது. எனினும், உங்களின் பிரைமரி சாதனம் 14 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனில், மற்ற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப் தானாக லாக் அவுட் செய்யப்பட்டு விடும்.

    விரைவில் புதிய வசதி:

    தற்போது வாட்ஸ்அப் கியூஆர் கோட் மூலம் பிரைமரி சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    வரும் வாரங்களில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு எளிமையாக லின்க் செய்துவிட முடியும். எதிர்காலத்தில் இந்த அம்சத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.

    தற்போது புதிய அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. 

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் செட்டிங்ஸ்-இல் விரைவில் சர்ச் பார் வழங்கப்பட இருக்கிறது.

    மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் வழங்க இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி செயலியின் செட்டிங்ஸ்-இல் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படலாம். ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

     

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்த்தும் ஐகான் இடம்பெற்று இருக்கிறது.

    இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சர்ச் பார் மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கம்பேனியன் மோட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் சாட்களை லாக் மற்றும் ஹைட் செய்ய முடியும்.
    • இந்த அம்சம் வழங்கப்பட்டதும், பயனர்கள் சாட்களை கைரேகை சென்சார் மூலம் லாக் செய்யலாம்.

    பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங்கில் உள்ள ஏராளமான புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பயனர்கள் பிரைவேட் சாட்-ஐ லாக் மற்றும் ஹைட் (மறைத்து வைத்தல்) செய்யும் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து WaBetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.23.8.2 அப்டேட்டில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் பயனர்களின் சாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. எதிர்கால ஸ்டேபில் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படும்.

     

    காண்டாக்ட் மற்றும் க்ரூப்-களில் பயனர்களின் மிகமுக்கிய தனிப்பட்ட சாட்களை லாக் செய்ய முடியும். லாக்டு சாட் பட்டியலில் இணைக்கப்பட்டதும், அதனை அதற்கான ஸ்கிரீனில் இருந்து மட்டுமே இயக்க முடியும். சாட் லாக் செய்யப்பட்டால், அதனை பாஸ்வேர்டு அல்லது பயனரின் கைரேகை மூலமாகவே பார்க்க முடியும்.

    ஒருவேளை புதிய அம்சம் ஆக்டிவேட் செய்யப்பட்ட மொபைல் போனினை மற்றவர்கள் எடுத்து சாட்களை திறக்க முயற்சித்தாலும், அவர்களால் முழு சாட்களையும் அழிக்காமல் பார்க்க முடியாது. லாக்டு சாட்-இல் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவைகளும் பயனர் கேலரியில் தானாக சேமிக்கப்படாது.

    சாட், ஆடியோ சாட், எடிட் மெசேஞ்ச் மற்றும் ஷார்ட் வீடியோ மெசேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் டெஸ்டிங்கில் உள்ளன. மேலும் இவை எதிர்கால அப்டேட்டிலேயே வெளியிடப்பட உள்ளன. புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக கூறப்படும் அம்சமாக டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளது.
    • வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் டெஸ்டிங் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    வாட்ஸ்அப் செயலியில் டெக்ஸ்ட் எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த அம்சம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு இந்த அம்சம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது டெஸ்டிங்கில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் விரைவில் அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமின்றி எடிட் மெசேஞ்ச் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

     

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் WABetainfo, புதிய அம்சம் கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவைகளை டூல்ஸ் மற்றும் ஃபாண்ட்களை எடிட் செய்ய முடியும் என தெரிவித்து இருக்கிறது. தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.7.17 வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஃபாண்ட்களிடையே எளிதில் ஸ்விட்ச் செய்ய முடியும். ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருந்த போதிலும், தற்போது எளிதில் விரும்பிய ஃபாண்ட்களை தேர்வு செய்துவிட முடியும். இத்துடன் டெக்ஸ்ட் அலைன்மெண்ட் வசதியின் மூலம் டெக்ஸ்ட்-ஐ இடதுபுறம், வலதுபுறம் மற்றும் நடுவில் வைத்துக் கொள்ள முடியும்.

    டெக்ஸ்ட் பின்னணியில் உள்ள பேக்கிரவுண்ட் நிறத்தை பயனர்கள் புதிய அம்சம் கொண்டு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் மிகமுக்கிய டெக்ஸ்ட்-ஐ நிறம் கொண்டு வித்தியாசப்படுத்தி காண்பிக்க முடியும். அடுத்து வரும் சில வாரங்களில் புதிய டெக்ஸ்ட் எடிட் அம்சம் பலருக்கும் வழங்கப்பட இருப்பதாக WABetainfo தெரிவித்து இருக்கிறது.

    இதே போன்ற அம்சம் ஐஒஎஸ் சாதனங்களிலும் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. எனினும், ஐஒஎஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: WABetainfo

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
    • ஐஒஎஸ் பயனர்களிடையே சிறிய வீடியோ நோட் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாற்ற முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய அப்டேட் டெஸ்க்டாப் தளத்திற்கானது ஆகும். இதைத் தொடர்ந்து தற்போது பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புதிய அம்சம் பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை அழிப்பதற்கு மாற்றாக அதில் ஏற்பட்ட பிழையை மட்டும் சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும். அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு தற்போது 15 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்து கொள்ள வேண்டும்.

     

    தற்போது வழங்கப்பட்டு இருக்கும் டெலிட் அம்சத்திற்கு மாற்றாக, புதிய அம்சம் இருக்கும். டெலிட் அம்சம் குறுந்தகவலை முழுமையாக அழிக்கச் செய்து வேறொரு தகவலை அனுப்ப உதவி வருகிறது. புதிய அம்சம் குறுந்தகவல்களை அழிக்காமல், அதில் சிறு மாற்றங்களை மேற்கொள்ளச் செய்கிறது. இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் என இருவருக்கும் தகவல் இடம்பெற்று இருக்கும்.

    புதிய அம்சம் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த அம்சம் ஐஒஎஸ் பயனர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

    இதுதவிர வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஞ்ச் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 நொடிகளுக்கு சிறிய வீடியோ நோட்களை அனுப்பலாம். டெலிகிராமில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ நோட் போன்றே வாட்ஸ்அப்-இல் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.

    • வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவலில் மத்திய அரசு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    • வைரல் குறுந்தகவல் பற்றி PIB தமிழ்நாடு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாடு பெருமளவு அதிகரித்து விட்டதை போன்றே இதன் மூலம் ஏற்படும் அபாயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகள் மக்களை ஏமாற்றுவதோடு அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடவும் செய்கின்றன.

    அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில், "மத்திய அரசு இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ. 239-க்கு இலவச ரிசார்ஜ் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இலவச ரீசார்ஜ் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், "நான் எனக்கான 28 நாட்கள் இலவச ரீசார்ஜ்-ஐ பெற்றுக் கொண்டேன், நீங்களும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜை கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 30," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறுந்தகவலை யாரும் நம்ப வேண்டாம் என PIB தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு இவ்வாறு எந்த விதமான இலவச ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறது. 

    • சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார்.
    • பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானை சேர்ந்த சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு பெஷாவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சையது முகமது ஷானின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவர் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    • வாட்ஸ்அப் சேவையை பயனர்கள் ஒரே சமயம் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்.
    • வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் தளத்தில் புதிய அம்சத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்கள் எளிதில் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான புதிய வாட்ஸ்அப் ஆப் அதன் மொபைல் செயலியை போன்றதாகும். இது வாட்ஸ்அப் சேவையின் அதிவேக அனுபவத்தை கூடுதல் சாதனங்களில் வழங்குகிறது. இதுதவிர பயனர்கள் அதிகபட்சம் நான்கு சாதனங்களில் தங்களின் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்து கொள்ளலாம் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

     

    இவ்வாறு செய்தபின் பயனர்களின் அக்கவுண்ட் சின்க் செய்யப்பட்டு இருக்கும். இப்படி செய்யும் போது போன் ஆஃப்லைனில் இருக்கும் போதிலும் சேவை சீராகவே இயங்கும். விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்த பின் பயனர்கள் புதிய அம்சங்களை பயன்படுத்த துவங்கலாம். இதில் வீடியோ, வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை அடங்கும்.

    "சார்ஜர் இல்லையா, பிரச்சினையே இல்லை. இனி உங்களின் வாட்ஸ்அப்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களுடன் லின்க் செய்து கொண்டு ஸ்மார்ட்போன் ஆஃப் ஆன பின்பும் சாட்களுடன் எந்நேரமும் சின்க், என்க்ரிப்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர முடியும்," என வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    பல்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப் லின்க் செய்வது எப்படி?

    - மொபைல் போன் நம்பர் லின்க் செய்யப்பட்டு இருக்கும் சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ திறக்க வேண்டும்.

    - சாதனத்தில் செட்டிங்ஸ் (Settings) -- லின்க்டு டிவைசஸ் (Linked Devices) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    - இனி லின்க் எ நியூ டிவைஸ் (Link a new device) ஆப்ஷனை கிளிக் செய்து திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    - விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் இரண்டாவது சாதனத்தை லின்க் செய்ய, வாட்ஸ்அப் வெப் வலைத்தளத்தை பிரவுசரில் திறக்க வேண்டும்.

    - இரண்டாவது சாதனத்தில் இருந்தபடி வலைத்தளத்தில் தெரியும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.

    - சாதனங்கள் சின்க் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். உங்களின் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தெரியும்.

    - இதே வழிமுறைகளை கொண்டு மேலும் அதிக சாதனங்களில் வாட்ஸ்அப்-ஐ லின்க் செய்ய முடியும்.

    அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும். இணைய இணைப்பில் இருக்கும் வரை உங்களின் வாட்ஸ்அப் அக்வுண்ட் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும். விரும்பாத பட்சத்திலோ அல்லது தேவையில்லாத சமயத்திலோ என்று எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் இருந்தும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அன்-லின்க் செய்து விடலாம்.

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
    • வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய வசதியை வழங்கும் அப்டேட் வெளியாகி வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் அட்மின்கள் நிர்வாகம் மற்றும் நேவிகேட் செய்வதை எளிமையாக்கும் க்ரூப் அப்டேட்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய அப்டேட் க்ரூப்-இல் யார் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவதோடு, நீங்கள் எந்த க்ரூப்களுடன் பகிர்ந்து கொள்கின்றீர்கள் என்பதை எளிமையாக்குகிறது.

    கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் க்ரூப்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களுடன் புதிய அப்டேட்கள் இணைகின்றன. இதில் க்ரூப் அளவு உயர்த்தியது, மெசேஞ்ச் டெலீட் செய்யும் அம்சம் உள்ளிட்டவை அடங்கும்.

     

    அட்மின்களுக்கு கூடுதல் கண்ட்ரோல்:

    புதிய அப்டேட் மூலம் அட்மின்கள் யார் க்ரூப்-இல் இணைய முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். இன்வைட் லின்க் அல்லது கம்யுனிட்டியுடன் க்ரூப்-ஐ இணைக்க செய்யும் போது, யார் க்ரூப்-இல் இணைய வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மாணிக்கலாம்.

    இதோடு ஏதேனும் காண்டாக்ட் பெயரை க்ளிக் செய்தால், எந்த க்ரூப்-இல் இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கொண்டு மற்றவர்களுடன் நீங்கள் இருக்கும் க்ரூப்களை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.

    புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்பட இருக்கிறது. இதுதவிர க்ரூப்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

    • வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஐபோனில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதியை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களின் வாய்ஸ் நோட்-களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இந்த அம்சம் தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.5.77 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் வாய்ஸ் நோட்-ஐ ஸ்டேட்டஸ் ஆக வைக்க செய்கிறது. புதிய அம்சத்தை பெற ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து, அப்டேட் செய்ய வேண்டும். செயலியை அப்டேட் செய்ததும் இந்த வசதி வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

     

    பயன்படுத்துவது எப்படி?

    - ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்

    - ஸ்கிரீனின் கீழ்புறம் இருக்கும் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

    - கீழ்புறத்தில் வலதுபுறமாக இருக்கும் பென்சில் ஐகானை கிளிக் செய்யவும்

    - வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்ய மைக்ரோபோனை கிளிக் செய்யவும்

    - மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்த படி மெசேஜை ரெக்கார்ட் செய்யவும். அதிகபட்சம் 30 நொடிகளுக்கு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யவும்

    - மெசேஜை ரெக்கார்ட் செய்து முடித்தபின் அழுத்தி பிடித்திருக்கும் மைக்ரோபோன் ஐகானை விட்டுவிட வேண்டும்

    - ரெக்கார்ட் செய்த மெசேஜை ரிவியூ செய்த பின், அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்

    இவ்வாறு செய்தபின் உங்களின் வாய்ஸ் மெசேஜ் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு தெரியும்..

    ஆப் ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ்அப் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் ஐஒஎஸ் பயனர்கள் வாட்ஸ்அப் வீடியோ காலில் இருந்தபடி பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ள செய்கிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் புதிய அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொந்தரவாக இருக்கின்றதா? விரைவில், வாட்ஸ்அப் இந்த தொந்தரவை சரிசெய்யும் வசதியை வழங்க இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் "Silence Unknown Callers" எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யலாம். இதுகுறித்து wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    விரைவில், இது டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் வெளியாகும் பட்சத்தில், பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றை தவிர்க்க முடியும். எனினும், மியூட் செய்த பின்பும் அழைப்பு வந்ததை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் இடம்பெற்று இருக்கும். புதிய அம்சம் மூலம் பயனர்கள் Spam அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ்அப் கால் நோட்டிபிகேஷன் அனைத்தையும் மியூட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை இரண்டாக பிரித்து, ஒன்றில் சாட் விண்டோ மற்றொன்றில் ஸ்டேட்ஸ் பார், கால்ஸ் என இதர வாட்ஸ்அப் அம்சங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் டேப்லெட் வெர்ஷனில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Photo Courtesy: wabetainfo

    • கடந்த ஜனவரியில் 29 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
    • முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10.38 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. மாதம் தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

    மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் கூடுதலான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கையாக வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

    நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரையில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

    அவற்றில், பயனாளர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதனை பெற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கை, சமூக தளம் தவறாக பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.

    ×