search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168181"

    மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைதுசெய்யப்பட்டார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சந்தேகத்தின்பேரில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 7 மயில்கள் விஷத்தை தின்று இறந்துகிடப்பதை பார்த்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரன்(வயது 50) என்பவர் விஷம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.

    கைதுசெய்யப்பட்ட சந்திரன் போலீஸ் விசாரணையில் கூறும்போது, ராஜகம்பீரத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்தன. இது தொடர்கதையாகி வந்ததால் நெல்லில் குருணை மருந்தை வைத்தேன். பின்னர் அதனை தின்ற மயில்கள் இறந்துபோனதாக தெரிவித்தார்.

    மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
    தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அதற்கு யாராவது விஷம் வைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள சில்லாகாட்டுப்புதூரில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த மயில்கள் இறந்து 2, 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.

    இந்த மயில்கள் வேறு எங்கேயாவது இருக்கும்போது அதற்கு யாராவது வி‌ஷம் வைத்தார்களா? வி‌ஷம் கலந்த உணவை அந்த மயில்கள் தின்று தென்னந்தோப்புக்குள் வரும் போது ஆங்காங்கே இறந்துள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து பார்வையிட்டு இறந்த மயில்கள் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சில மயில்களை நாய்கள் கடித்து குதறி இருந்தது.
    ×