search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்லா"

    • கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

    கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன.

    இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜீப் ஒன்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். #Shimla
    சிம்லா:

    இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி சாலையில் ஸ்னைல் என்ற பகுதி அருகே இன்று காலை பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஜீப், எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில், பொதுமக்கள் முதல்வர் மற்றும் மந்திரிகளின் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தொடங்கியுள்ளனர்.
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசம் தலைநகரான சிம்லா பிரபல சுற்றுலாத் தளமாகும். தற்போது கோடைக்காலம் என்பதால் அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்லா நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 22 மில்லியன் லிட்டர் தேவை என்ற நிலையில், தற்போது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. அதுவும், லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.

    போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சொகுசு ஓட்டல்கள் மூடப்பட்டன. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய துயரம் உள்ளது. இதனால், கொதிப்படைந்த பலர் முதல்வர் மற்றும் மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 
    ×