search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல்"

    • ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம்.
    • சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதைமுன்னிட்டு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குலுவில் சாலைப் பேரணி நடத்தினர்.

    அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொது மக்களிடம் உரையாற்றினார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. அண்ணா ஹசாரே இயக்கத்தில் தொடங்கிய எங்கள் பயணம், பின்னர் கட்சியை உருவாக்கினோம். ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம். முதலில், டெல்லியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்தோம். பின்னர் பஞ்சாபில் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான செயல்முறையைத் தொடங்கினோம்.

    எந்த ஒரு முதலமைச்சரும் தன் அமைச்சரை சிறைக்கு அனுப்பியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தனது சுகாதார அமைச்சர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை மான் கண்டுபிடித்தார். அவருக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர் அதை கம்பளத்தின் கீழ மறைத்திருக்கலாம் அல்லது அமைச்சரிடம் தனது பங்கைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவரை சிறைக்கு அனப்பினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்சார துறையில் நடந்த ஊழலை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன் என் மீது வழக்கு போட தங்கமணி தயாராக உள்ளாரா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #DMK #Thangamani
    சென்னை:

    தமிழக மின்சார துறையில் காற்றாலை மின்சார உற்பத்தில் என்ற பெயரில் ஊழல் நடந்திருப்பதாக கூறி திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த அமைச்சர் தங்கமணி பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறினார்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், “காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை. குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடரவில்லை. ஆதாரத்துடன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளேன். என் மீது வழக்கு தொடர தங்கமணி தயாராக உள்ளாரா?” என கூறினார்.

    மேலும், தங்கமணி வழக்கு போட வில்லை என்றால், அவர் மீது நான் வழக்கு போடுவேன் எனவும் ஸ்டாலின் கூறினார். 
    ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #NajibRazak #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

    அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  

    கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும். 

    மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இன்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Malaysia #NajibRazak
    ×