search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசேனா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.
    • சுப்ரியா சுலே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராமதி தொகுதி அஜித் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. 48 தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியது.

    இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா தலையிட்டு இரண்டு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.

    பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்குகிறது. தற்போது சரத் பவார்- அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

    • கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவருக்கும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் கல்யாண் தொகுதி பொறுப்பாளர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத் தகராறு இருந்துள்ளது.

    இதற்கிடையே, உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டின் மகன் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது எதிர்தரப்பில் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் வந்துள்ளனர்.

    தகவலறிந்த எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டும் அங்கு விரைந்தார். இன்ஸ்பெக்டர் அறையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கைகலப்பு ஏற்பட எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் தனது துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை நோக்கி சுட்டார். இதில் மகேஷ் கெய்க்வாட், அவரது உதவியாளர் ஆகியோர் காயமடைந்தனர்.

    உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

    ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இடையே நடந்த இந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகாராஷ்டிரா அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.
    • எனவே பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிரா வருகிறார் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வருகிறார். அவர் மகாராஷ்டிராவை அவ்வளவு நேசிக்கிறார் என்பதால் அல்ல.

    உத்தர பிரதேசத்திற்கு பிரதமர் செல்வது உ.பி.யை நேசிப்பதால் அல்ல. உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகம். அதற்குப் பிறகு மகாராஷ்டிரா. வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா முக்கியப் பங்கு வகிக்கும்.

    இங்குள்ள அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.

    கடந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம்.

    மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்வு ஜூன் 21ம் தேதி அன்று சிவசேனா இரண்டாக பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது.

    ஷிண்டே முகாம் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார்.

    ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. மேலும், 53 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவும் முடியாது.

    ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம் எனவும் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.

    • உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • 48 இடங்களை பிரித்துக் கொள்வதில் மூன்று கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய மாநிலமாக கருதப்படுவது மகாராஷ்டிரா மாநிலம். இந்த மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கட்சிகளுக்கு இடையே இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இன்று முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்கள் தொடர்பாக வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆலோசனையில் அது சரி செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே கட்சி 23 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    • விரைவில் கடவுள் ராமரை தங்கள் வேட்பாளராக பா.ஜ.க.வினர் அறிவிப்பார்கள்.
    • ராமர் பெயரில் பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்தார்.

    மும்பை:

    சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், இப்போது தேர்தலுக்கு ராமரை தங்கள் வேட்பாளராக மட்டும்தான் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. விரைவில் அவரை தங்கள் வேட்பாளராகவும் அறிவிப்பார்கள். ராமர் பெயரில் இவ்வளவு பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என காட்டமாக விமர்சனம் செய்தார்.

    இந்நிலையில், ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா தலைவர் கிருபாள் துமானே கூறுகையில், வெட்கமின்மைக்கும் ஒரு எல்லை உண்டு. தற்போது ராவணன் மடியில் அமர்ந்திருப்பதால் பா.ஜ.க. மீது வெறுப்பு கொண்ட அவர் இப்போது ராமரையும் வெறுக்க ஆரம்பித்து விட்டார். இந்திய மக்கள் இதைப் பொறுக்க மாட்டார்கள் என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

    • ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
    • பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.

    அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
    • உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை

    மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.

    இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.

    இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
    • மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்

    2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.

    2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.

    ×