search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169591"

    • வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை சோலை அழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 25). இவர் நேற்று ஜெய்ஹிந்த் புரம் எல்.எல். ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 435 ரூபாயை பறித்து சென்றது. இது தொடர்பாக அருண்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கீரைத்துறை அருமை நாயகம் (27), ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு கருப்பசாமி மகன் கண்ணன் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை அண்ணாநகர், சூ மேக்கர் காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (50). இவர் நேற்று காலை குருவித்துறை, ஒயின்ஷாப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றார். இது தொடர்பாக ராஜரத்தினம், அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது முந்திரிதோப்பு, லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த வினோத்ராஜா (33) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்தனர்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், கோவலன் நகரை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 49). இவர் நேற்று இரவு கோவலன் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது ஆண்டாள்புரம், ஓதுவார்மடம் நாச்சியப்பன் மகன் கணேசன் (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ. 1500-ஐ பறித்துச் சென்றார். இதுபற்றி சுந்தரேசன் சுப்பிரமணியபுரம் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

    மதுரை வாடிப்பட்டி, அய்யங்கோட்டை, அம்பேத்கர் நகரைச்சேர்ந்த மாமுண்டி மகள் ஹரிணி மனோன்மணி (23). இவர் நேற்று இரவு விளாங்குடி பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹரிணி மனோன்மணியிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் நெத்திமேடு காமராஜ் நகர் கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவரை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.
    • இதைத்தொடர்ந்து தலைமறைவான மூர்த்திக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண் 4 நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் நெத்திமேடு காமராஜ் நகர் கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் மூர்த்தி (வயது 25). இவரை கடந்த 2020-ம் ஆண்டு சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஜாமினில் வெளிவந்த மூர்த்தி அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.இதைத்தொடர்ந்து தலைமறைவான மூர்த்திக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண் 4 நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை மூர்த்தியை கைது செய்தனர்.

    • மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.

    மதுரை

    மதுரை ஆத்திகுளம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவர் சம்பவத்தன்று பீ.பி.குளம் மெயின்ரோட்டில் நின்றிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பாபு மகன் ராஜாமைதீன் (24), செல்லூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த நெல்லை கார்த்திக் (24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500யை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் முத்து (26).

    இவர் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

    ராணிபேட்டை மாவட்டம், சோளிங்கர்பாறைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். மதுரை வந்த இவர் ஆரப்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000-த்தை பறித்துச் சென்றது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோமஸ்பாளையத்தைச் சேர்ந்த திருப்பதிசெல்வம் மற்றும் 17 வயது வாலிபரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பதியை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பாக்கியநாதபுரம், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் சேகர் (56). இவர் நேற்று மதியம் தத்தனேரி காபி கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.400-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பதியை கைது செய்தனர்.

    • மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    விளாங்குடி சொக்கநாத புரம் முதல் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் விஜய் (23). இவர் விளாங்குடி கார்ப்பரேஷன் ஆபீஸ் எதிரே சென்றபோது அவரை வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட விளாங்குடி அண்ணா தெருவை சேர்ந்த குமார் மகன் கணேஷ் (21), புது விளாங்குடி சத்குரு நாதர் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் இருவரையும் கைது செய்தனர்.

    மீனாம்பாள்புரம் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த செல்வம் மகன் காளிதாஸ் (28). இவர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு-குலமங்கலம் ரோடு சந்திப்பில் சென்ற போது அவரை வழிமறித்த விஜய் என்ற துப்பாக்கி விஜய் (25) கத்தி முனையில் மிரட்டி ரூ 420-ஐ வழிப்பறி செய்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் என்ற துப்பாக்கி விஜய்யை கைது செய்தனர்.

    பீ.பி.குளம் காமராஜர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). இவர் இந்திரா நகர் முதல் தெருவில் சென்றபோது அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்செந்தூர் முத்து என்ற ஜூலி (27), சூர்யா (23) ஆகியோரை கைது செய்தனர்.

    ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 2-வது தெருவைச்சேர்ந்தவர் விஜய் (32). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்ற போது இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி இவரிடம் இருந்து ரூ.1410ஐ வழிப்பறி செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விஜய் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெ.ஜெ. ரோட்டை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் (23), பொன்னகரத்தை சேர்ந்த மனோஜ் சிவா என்ற மனோஜ் (22) சுடுதண்ணி வாய்க்காலை சேர்ந்த பிரசன்னா (25) ஆகியோரை கைது செய்தனர்.

    • சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
    • பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பல்லடம்,

    திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்( வயது 32) . இவர் தற்போது பல்லடம் அருகேயுள்ள சாமளாபுரம் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி இரவு நண்பரைப் பார்க்க பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை சென்று விட்டு அங்குள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் கரணம்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சதீஷ்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த மாசானம் மகன் அருண் (வயது 22,) அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் ( 21) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4.3/4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    தேனி மாவட்டம், தெற்கு ஜெகநாதபுரம், ஊமைத்துரை தெருவைச் சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவர் நேற்று காலை ஆத்திகுளத்துக்கு வந்தார். அவரிடம் 6 பேர் கும்பல் கத்திமுனையில் ரூ. ஆயிரத்தை பறித்து சென்றது.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஜேம்ஸ்ராஜா, வெற்றிவேல்முருகன், பாக்யராஜ் என்ற ராஜா, மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சின்னமுத்து, சின்னத்தம்பி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நிவாஸ் (26). இவர் நேற்று சின்ன சொக்கிகுளம், பழைய அக்ரஹாரம் தெரு அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்பதை பறித்துச்சென்றது.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீ.பீ.குளம், நபிகள் நாயகம் தெரு, ஹக்கீம் மகன் அல்-முபின் (22), நரிமேடு தாமஸ் தெரு அய்யனார் மகன் விக்னேஸ்வரன் (22), விஜய் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

    ஆம்பூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள நதிசீலபுரம் பகுதியை சேர்ந்தவர் அகமதுபாஷா இவரது மகன் ஜாபர் (வயது 26). இவர் ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். ஜாபர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் ஜாபரை வழிமறித்து சரமாறியாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.1000 மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து ஜாபர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஆம்பூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த இமானுவேல் (23). ஆனந்தன் (29). ஆகிய 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×