search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுயானை"

    காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி சேரம்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பந்தலூர்;

    பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாகி விட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் எந்த நேரத்திலும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துவிடுமோ? என்ற பீதியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேரம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அதில், வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்து தர வேண்டும், ஆழமான அகழிகள் வெட்டப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள், பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் சுதர்சனன் நன்றி கூறினார். #tamilnews
    கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து காட்டுயானை உயிரிழந்தது. அந்த காட்டுயானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் வனத்துறையினர் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலவாடி 1-ம் பாலம் பகுதிக்குள் கடந்த 24-ந் தேதி காலை 6 மணியளவில் ஒரு காட்டு யானை புகுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த யானையை விரட்டினர். அப்போது அங்குள்ள ஒரு கழிவுநீர் தொட்டியில் காட்டுயானை தவறி விழுந்தது. அதில் பலத்த காயம் அடைந்த காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. 50 வயது மதிக்கத்தக்க அந்த காட்டுயானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. ஆனால் யாரையும் தாக்கியது இல்லை. பொதுமக்களிடம் இயல்பாக பழகி வந்தது. இதனால், அந்த காட்டுயானை இறந்தது பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கொளப்பள்ளியில் இறந்த காட்டுயானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.



    இந்த நிலையில் இறந்த காட்டுயானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று காலை 9 மணிக்கு ஓவேலி வனவர் செல்லதுரை தலைமையில் வனத்துறையினர் சென்றனர். பின்னர் அந்த இடத்தில் மாலை அணிவித்து, ஊதுபத்திகள் கொளுத்தினர். தொடர்ந்து பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மனிதர்களுடன் இயல்பாக பழகி வந்த காட்டுயானை உயிரிழந்தது பொதுமக்களை மட்டுமின்றி வனத்துறையினரையும் கண்கலங்க செய்துள்ளது. 
    ×