search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்மன்"

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    • வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
    • சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேவசம் போர்டு மந்திரியாக இருந்த வர் சிவகுமார்.

    மந்திரி பதவியில் இருந்தபோது சிவகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சிவகுமார் வருகிற 20-ந் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    அப்போது சிவகுமார் தனது சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அமலாக்க துறையினர் கூறியுள்ளனர்.

    இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும், இல்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கமளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் உத்தரவிட்டுள்ளார். #HRaja #TNGovt
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்ஹ்டு கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை குறித்து கீழ்தரமாக பேசினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலகா பரவிய நிலையில், அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி செல்வம் அமர்வு, 4 வாரங்களில் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், எச்.ராஜா வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நராயணன் உத்தரவிட்டுள்ளார். நேரில் வரமுடியவில்லை என்றால், வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    ×