என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 170325
நீங்கள் தேடியது "தெலங்கானா"
தெலங்கானாவில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்பு கருதி பெண்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்களிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Telangana #TSPSC
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TSPSC) சார்பில், கிராம வருவாய் அதிகாரிக்கான தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைப்பெற்றது.
700 காலியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2,000 தேர்வு மையங்களில் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், நார்சபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களிடம், தங்களின் தாலியைக் கழற்றினால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்துக்களின் பாரம்பர்யத்தை எடுத்துக்கூறி, அந்தப் பெண்கள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தனர். தேர்வாணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளின் படியே தாங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் கூறினர். பின்னர், பெண்கள் தங்களின் தாலியைக் கழற்றிவிட்டே தேர்வு எழுதினர்.
இதையடுத்து, தேர்வு மையத்தின் வெளியில் தங்கள் மனைவிகளின் தாலிச்செயினுடன் கணவன்மார்கள் போராட்டம் நடத்தினர். பெண்கள், தங்களின் தாலியில் சில எலெக்ட்ரானிக் டிவைஸ் வைத்திருக்கக்கூடும். அதன் உதவியுடன் தேர்வெழுதும் வாய்ப்புள்ளதால் தான் அனுமதிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி இயக்குநர் சக்கரபாணி கூறும்போது, தேர்வு எழுத வரும் பெண்கள் தாலியைக் கழற்ற வேண்டும் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் விதிமுறைகளை தவறாகப் புரிந்துக்கொண்ட தேர்வு மைய அதிகாரிகள், இதுபோன்று செயல்பட்டு இருக்கலாம். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த பிறகு, அதே தேர்வு மையத்தில் 290 திருமணமான பெண்கள் தாலியுடன் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிலர் வேண்டுமென்றே இதனை பெரியதாக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். #Telangana #TSPSC
கேரளா வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை தெலங்கானா உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரளா வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.25 கோடிக்கான காசோலையை தெலங்கானா உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தெலங்கானா அரசு ஏற்கனவே அறிவித்தபடி 25 கோடிக்கான காசோலையை இன்று கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினேன். மேலும், சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 50 தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் விரைவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UAEConsulate #Hyderabad
ஐதராபாத்:
யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் கடந்த 24ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவர் மும்பை, அகமதாபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யு.ஏ.இ. நாட்டின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லாவுடன் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. #UAEConsulate #Hyderabad
தென் இந்தியாவின் முதல் அரசு கண் வங்கியை தெலங்கானா மாநில மந்திரி சி.லக்ஷ்மா ரெட்டி இன்று ஐதராபாத்தில் திறந்து வைத்தார். #EyeBank
ஐதராபாத் :
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் சுமார் ஒரு கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு கண் வங்கியை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சி.லக்ஷமா ரெட்டி இன்று திறந்து வைத்தார். தென் இந்தியாவின் முதல் அரசு கண் வங்கி இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த லக்ஷமா ரெட்டி, ஏழைகளுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தெலங்கானா அரசு சுகாதார துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கெனவே, நாட்டின் முதல் கருவுற்றல் மையம் ஐதாராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தம் 120 கோடி மக்கள் உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 1 கோடி மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 2 சதவீத மக்கள் கண் தானம் செய்தால் போதும் இந்தியாவில் பார்வையற்றவர்களே இல்லை எனும் நிலையை நாம் எட்டிவிடலாம் என அவர் தெரிவித்தார். #EyeBank
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X