search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மனி"

    • இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து எரிவாயு விநியோக அவசர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன.

    பெர்லின்:

    ஜெர்மனி அரசு இன்று இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான தனது மூன்று-நிலை அவசரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்த பின்னர், குளிர்காலத்திற்கான சேமிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் முதல் உக்ரைன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து, இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியது.

    மேலும், தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே எரிபொருள் வர்த்தக பிரச்சனை நீடிப்பதால், ஜெர்மனியும் பிற நாடுகளும் நிலக்கரிக்கு திரும்புகின்றன. இது, ஐரோப்பாவில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    நம்மால் இன்னும் உணர முடியாவிட்டாலும், நாம் இப்போது எரிவாயு நெருக்கடியில் இருக்கிறோம் என ஆற்றல்துறை மந்திரி ராபர்ட் ஹாபெக் கூறினார்.

    ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
    முனீச்:

    ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

    இந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போன்களை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.

    ஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி. 
    கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக டிரம்ப் வெளியேறி காட்டமாக ட்வீட் செய்ததற்கு, ஜெர்மனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. #G7 #G7Summit
    முனீச்:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த 8, 9 தேதிகளில் நடந்தது. 

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்க, கடுப்பான டிரம்ப் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறி, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். விமானத்தில் இருந்த படியே ஜி7 மாநாடு குறித்து காரசாரமாக டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றார்.

    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் ட்வீட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ், “அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை ஒற்றை ட்வீட் மூலம் குறுகிய நேரத்தில் நீங்கள் உடைத்து விட்டீர்கள். அமெரிக்காவே முதன்மை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே பதிலாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    பெர்லின்:

    ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரிணச்சேர்க்கை கடும் குற்றமாக கருதப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குறிப்பாக இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் பலர் தேடித்தேடி கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தவறுகளுக்கு தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  ‘அப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.
    ×