search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    பரமத்திவேலூரில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரனவீரன் தலைமையில் ‌‌‌‌‌‌வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் நேற்று பரமத்திவேலூர் சந்தை பேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகை கடை மற்றும் பெட்டிக்கடை திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா‌ புகையிலை பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பரமத்திவேலூர் , சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 40), உழவர் சந்தை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (44) மற்றும் கரூர் மாவட்டம், புகளூர், ராம்நகரை சேர்ந்த சுப்ரமணியன்(56) ஆகிய 3 பேரை பரமத்திவேலூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 300 குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டன் கணக்கில் குட்கா பொருட்களும் 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். 

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் விசாரணை காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

    மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு அவருக்கு சொந்தமான சென்னை அண்ணாமலை இன்டஸ்ட்ரீஸில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையின் போது டன் கணக்கில் குட்கா மூலப்பொருட்களும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    குட்கா ஊழல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். #GutkhaScam #CBIRaid #VijayaBaskhar
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு இன்று வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் விஜய பாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

    இதற்கிடையே, குட்கா ரெய்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ், குட்கா விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது எனவும், தன்னை சிக்கவைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
    குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவும் கைது செய்யப்பட்டார். 

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ள நிலையில், டிஜிபி டி.கே ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். #GutkhaScam #DGPRajendran #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சோதனை முடிந்த சில மணி நேரங்களில் டி.கே ராஜேந்திரன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்போது சந்தித்து பேசி வருகிறார். 
    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், ‘தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். #GutkhaScam #VijayaBhaskar #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது:-

    குட்கா, பான்மசாலா தொடர்பாக நான் யாரையும் சந்தித்தது இல்லை. இன்று நடந்த சிபிஐ சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். எந்த விசாரணைக்கும் தயாராகவே உள்ளேன். குற்றச்சாட்டுகளை பரப்பி அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர். 

    அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வேன். 

    என விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஆலங்குளத்தில் இருந்து கேரளாவுக்கு உரமூட்டைக்குள் பதுக்கி கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பான்மசால, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). நேற்று இவர் மினி லாரியில் ஆலங்குளத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கேரளா மாநிலத்தில் உள்ள அஞ்சல் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த டிரைவர் ரவி(35) என்பவர் ஓட்டினார்.

    லாரி தமிழ்நாடு எல்லையை தாண்டி, கேரளா எல்லையான ஆரியங்காவு பகுதியில் சென்றது. அப்போது அங்குள்ள சோதனை சாவடியில் கேரள‌ போலீசார் மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உர மூட்டைகளின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மூட்டைகளை போலீசார் சோதனை நடத்தினர். அந்த மூட்டைகளில் பாக்கெட் பாக்கெட்களாக பான் மசாலா, குட்கா பொருட்கள் இருந்தன.

    இவற்றை உரமூட்டை போல கேரளாவுக்கு கடத்தி சென்ற‌து தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பான்மசால, குட்கா ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது தொடர்பாக ஆரியங்காவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×