என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 172657
நீங்கள் தேடியது "மரத்தடி"
அருப்புக்கோட்டை அருகே மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்வதால் வகுப்பறை கட்டு மானப்பணியை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்வதால் இரண்டாண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட வகுப்பறை கட்டு மானப்பணியை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் வந்து மனு கொடுத்தனர். அருப்புக்கோட்டை அருகேயுள்ள தமிழ்பாடி கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2010- ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளியில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
எங்கள் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 10 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் கட்டுமானப்பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் பணி முடிவடையாத நிலையில் மாணவ-மாணவிகள் போதிய இடவசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று பிற பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கட்டுமானபணிகள் முடிவடைந்து வகுப்பறைகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி வகுப்பறை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள நரையன்குளம், ஒத்தப்பட்டி, காந்திநகர், இந்திராநகர் காலனி ஆகிய கிராம மக்களும் நேச்சுரல் பாய்ஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினரும் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நரையன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் அவருக்கு உதவியாக உள்ள சில ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளியின் நலன் பாதிக்கப்படுவதாகவும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி தலைமைஆசிரியை மற்றும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியில் மகளிர் மேம்பாட்டு நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை மூலம் 791 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த கடையின் செயல்பாடு பல்வேறு அமைப்புகளால் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இக்கடை செயல்பட தடை விதிக்கப்பட்டு கூட்டுறவு கடையாக மாற்றப்பட உள்ளது. எனவே தொடர்ந்து இக்கடையினை மகளிர் மேம்பாட்டு நல்வாழ்வு சங்கம் நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்று அந்த கிராமத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

×

X