search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி"

    • வேன் உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
    • பிரபல ரவுடி கைது
    • திருச்சி அரியமங்கலத்தில் சம்பவம்


    திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்தவர் தெய்வ மணிகண்டன் (வயது 41). இவர் சொந்தமாக டூரிஸ்ட் வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று அரியமங்கலம் வடக்கு உக்கடை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர், அவரது சட்டை பையில் இருந்த 2500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்து தெய்வ மணிகண்டன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற, கஞ்சா கணேசன் என்ற ரவுடியை கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிந்து, திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


    கைது செய்யப்பட்ட கஞ்சா கணேசன் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி ,செயின் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




    • அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
    • மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார்.

    கடலூர்:

    காடாம்புலியூர் பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 23) ரவுடி. அப்பகுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த அசோக்குமாரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசா ரிடம் வாக்குவாதம் செய்த அசோக்குமார், தான் வைத்திருந்த பிளேடால் கையை கிழித்து க்கொண்டார். சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்ய துடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் முன்பு நின்று கூச்சலிட்டார். மேலும், பிளேடால் மீண்டும் மீண்டும் தனது கைகளை கிழித்துக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின் அசோக்கு மாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).

    இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

    செல்போன் பறிப்பு

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆத்திரம் அடைத்த நாகராஜன் வீட்டிலிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து ஜான் அனீஸ்ராஜாவை வெட்டினார்.
    • ஜான் அனீஸ்ரா ஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகரா மன்புதூர் யோகீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்துள்ளார். இவர் ஒலிபெருக்கியை சோதனை செய்யும்போது அதிகம சத்தம் கேட்பதால் இவருக் கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதை கருணாகரன் தனது மகன் செல்வத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் தனது நண்பர் அகஸ்தியர் காலனியை சேர்ந்த ஜான் அனீஸ்ராஜாவுடன் சென்று கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைத்த நாகராஜன் வீட்டிலிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து ஜான் அனீஸ்ராஜாவை வெட்டினார். இதில் படு காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜான் அனீஸ்ரா ஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீ சார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து நாகராஜன் (வயது 25) மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நாகராஜன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜான் அனீஸ் ராஜா பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • படுகாயம் அடைந்த ஜம்பங்கி கிருஷ்ணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சுஜாதா நகரை சேர்ந்தவர் ஜம்பங்கி சண்முகா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    தற்போது ஹக்கும் பேட்டையில் தனது சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்றிருந்த ஜம்பங்கி சண்முகா நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் கோபால பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடினார். மது போதையில் இருந்த இருவரும் கத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

    அப்போது அறைக்கு வந்த ஓட்டல் ஊழியர் கத்தி கூச்சலிடக் கூடாது என கூறினார். இதில் ஆத்திரமடைந்த ஜம்பங்கி சண்முகா மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து விடுதி ஊழியரை தாக்கி வெளியே அனுப்பினர்.

    அறையில் இருந்து வெளியே வந்த விடுதி ஊழியர் அறையை வெளிப்பக்கமாக தாழிட்டு பூட்டினார்.

    விடுதி ஊழியர் கதவை வெளிப்பக்கமாக பூட்டியதால் போலீசில் புகார் செய்து விடுவார் என ஜம்பங்கி சண்முகா எண்ணினார்.

    போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என எண்ணிய சம்பங்கி சண்முகா நடிகர் வடிவேலு பாணியில் அறையில் இருந்த பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி அதன் மூலம் வெளிப்புறமாக கீழே குதித்தார்.

    ஆனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த ஜம்பங்கி கிருஷ்ணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.
    • ஆத்திரமடைந்த அறிவு பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நியூ பார்த்திமா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 58) தொழிலாளி.

    இவர் சைக்கிளில் விளார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    ஒரு தனியார் மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த பிரபல ரவுடி அறிவு என்பவர் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்.

    அப்போது அவர் குடிக்க தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு மைக்கேல் ராஜிடம் கேட்டார்.

    அதற்கு அவர் என்னிடம் தண்ணீர் பாட்டில் இல்லை என்று கூறினார்.

    இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அறிவு மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் மைக்கேல் ராஜை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மைக்கேல்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து ரவுடி அறிவை தேடி வருகிறார்.

    • 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுர அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெருங்கோப்பன பள்ளியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். ரெயில்வே துறையில் பணி செய்துவிட்டு ஓய்வு பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் திருமுருகன், 2-வது மகன் கோகுல கிருஷ்ணன் (வயது48). இதில் திருமுருகன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2-வது மகன் கோகுல கிருஷ்ணன் சென்னையில் வசித்து வந்து அங்கு பிரபல ரவுடியாக வலம் வந்தார்.

    இவர் மீது சென்னையில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவரது தங்கை மீனாட்சி என்பவரை தருமபுரி மாவட்டம் மாட்லாம் பட்டியில் உள்ள அவரது தாய் மாமன் மதியழகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் கோகுலகிருஷ்ணனின் பாட்டிக்கு சொத்து இருந்து வந்துள்ளது. இந்த சொத்து பிரச்சனையால் கோகுல கிருஷ்ணனுக்கும் அவரது தங்கை மீனாட்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அடிக்கடி மாட்லாம்படியில் உள்ள மீனாட்சி வீட்டிற்கு கோகுல கிருஷ்ணன் வந்து தகராறு செய்து அவர்களை மிரட்டி பணம் வாங்கி செல்வார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோகுலகிருஷ்ணன், அவருடைய நண்பர்கள் சென்னை வடபழனியைச் சேர்ந்த லோகோஷ்வரன் (21), காசிமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (20) ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் ஒருவீட்டில் உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்துள்ளனர்.

    இவர்களை பின்தொடர்ந்து மத்தூர் போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பின்தொடர்ந்து தேடி வந்தனர். அவர்கள் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்களுடன் மாட்லாம்பட்டியில் உள்ள மீனாட்சி வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் மீனாட்சியையும், அவரது கணவர் மதியழகனையும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கோகுலகிருஷ்ணனும், அவரது நண்பர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பட்டி பகுதி டாஸ்மாக் கடைக்கு வந்தனர்.

    இதுகுறித்து மீனாட்சி காரிமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்து விட்டு ஊர்பொதுமக்கள் உதவியுடன் தனது அண்ணனையும், மற்றும் அவரது கூட்டாளிகளையும் நல்லாம்பட்டி நோக்கி தேடிவந்துள்ளார்.

    அப்போது கோகுல கிருஷ்ணன், அவரது நண்பர்களும் மது குடித்து விட்டு நல்லாம்பட்டியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வழியில் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் தவித்து நின்றனர்.

    அதற்குள் மீனாட்சியும், ஊர் பொதுமக்களும் ஒன்று திரண்டு வந்து வழியில் நின்று கொண்டிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் 3 பேரும் தப்பித்து செல்லாமல் இருக்க அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதனைதொடர்ந்து பிடிபட்ட 3 பேரையும் மதிகோண்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுர அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று காயமடைந்த கோகுலகிருஷ்ணன் மதிகோண்பாளையம் போலீசாரிடம் தன்னுடைய தங்கையிடம் பணம் கேட்டு விட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்ற போது மீனாட்சியும், உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து என்னையும், எனது நண்பர்கள் 2 பேர் மீதும் நல்லாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மடக்கி பிடித்து மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கினர் என்று புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மீனாட்சி மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை, மணியம்மன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(32). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு அவர், பெரம்பூர் தீட்டி தோட்டம் 4-வது தெருவில் நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் திடீரென கமலக்கண்ணனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலக்கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கை, முகம், மார்பில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது.
    • ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் மாதா சிலை அருகில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திருவேங்கடபுரம் பள்ளி அருகே ஆட்டோவில் வந்த டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி திடீரென தாக்கினர்.

    இதனை அவ்வழியே வந்த கல்லூரி மாணவர் ஒருவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மாணவரை ஓட, ஓட விரட்டி தாக்கினர். மேலும் கத்தியாலும் திருப்பி பிடித்து சரமாரியாக அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த மாணவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களாக பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது. அவர்கள் மீது புகார் கொடுத்தாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி.

    நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார்.

    அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது.
    • 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 30), பெயிண்டர். இவர் மீது கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், ராஜேஷ் என்பவருக்குமிடையே 'யார் பெரிய ரவுடி' என்ற முன்விரோத மோதல் உள்ளன. இதன் காரணமாக தினேஷ்குமாரை கொல்ல ராஜேஷ் திட்டமிட்டார்.

    நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். அப்போது ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது. உடன் வந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து முன்விரோதம் தொடர்பாக சமாதானப் பேச்சு நடத்தலாம் என கூறி தினேஷ்குமாரை கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்து சென்றனர். காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மீண்டும் இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் ராஜேஷ் உட்பட, 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், (28), கண்ணன் (25), தினேஷ் (26), பாலாஜி சரவணன் (28), தமிழரசன், (25), பாலகிருஷ்ணன், (25) என 6 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 ேமாட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ், ராம்குமார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி ராஜேஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் நல்லூர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 6பேர் மீது கஞ்சா, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளன. ஜாமீனில் எடுக்க உதவி செய்யாதது தொடர்பாக தினேஷ்குமார், ராஜேஷிடம் முன்விரோதம் இருந்தது. 'யார் பெரிய ரவுடி' என்ற பிரச்னை முற்றி போய், தற்போது கொலையில் முடிந்தது.

    6 பேரில் பாலாஜி சரவணன், மணிகண்டன் மற்றும் தலைமறைவாக உள்ள ராம்குமார் ஆகியோர் மீது கடந்த, 2022 திருப்பூர் எம்.பி., நகர் காட்டு பகுதியில் சதீஷ் என்ற வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி என்பது தெரிந்தது.

    தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அப்போது அவருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட வாலிபர் புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி (22) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து கத்தி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×