search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணிக்கை"

    கோவையில், வார இறுதி நாட்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
    கோவை:

    கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அதிகாலை 1 மணிக்கு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் 50 முதல் 60 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 150 முதல் 160 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை 6 ஆயிரத்து 218 வழக்குகளும், அதே கால கட்டத்தில் நடப்பு ஆண்டில் 14 ஆயிரத்து 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை கோர்ட்டுக்கு சென்று செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வாகன ஓட்டிகளை வலியுறுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதின் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத் தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை 196 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதே கால கட்டத்தில் 111 பேர் இறந்துள்ளனர்.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 96 ஆயிரத்து 761 வழக்குகளும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 180 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வீட்டுவசதி சாதனங்கள், உடைகளை வாங்குவதற்கு இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. #OnlineShoping #IndianConsumer
    புதுடெல்லி:

    தகவல், தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியால் இப்போது செல்போன், உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் போன்றவற்றை இப்போது இணையதளம் வழியாக வாங்குகிற ‘ஆன்லைன் ஷாப்பிங்’ அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளையதலைமுறையினர் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு, இணையதளம் வழியாக 10 கோடியே 80 லட்சம் பேர் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும், சாதனங்களையும் வாங்கி உள்ளனர்.

    இந்த ஆண்டிலும் இப்படி இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. குறிப்பாக 12 கோடிப்பேர் இந்த ஆண்டு இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவார்கள் என்று ‘அசோசாம்’ என்று சொல்லப்படுகிற இந்திய தொழில், வர்த்தக சபை மற்றும் ரீ சர்ஜன்ட் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

    இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்குவோரில் 60 முதல் 65 சதவீதம்பேர் செல்போனில் ‘ஆர்டர்’ செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டில் இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர், தங்களுக்கு உரிய பொருள் அல்லது சாதனம் கையில் கிடைக்கிறபோது பணம் செலுத்தும் வழியை தேர்ந்தெடுத்து உள்ளனர்.   #OnlineShoping #IndianConsumer
    உலகம் முழுவதும் 100 கோடி துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாகவும், இவற்றில் 84 சதவிகிதம் பொதுமக்கள் கைகளிலும் மீதமுள்ளவை ராணுவம் மற்றும் போலீசார் கைகளில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    உலகம் முழுவதுமுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே என்ற அமைப்பு, உலகில் உள்ள 230 நாடுகளில் உள்ள கைத்துப்பாக்கிகள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்கள், ராணுவம் மற்றும் காவல்துறை போன்று சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகள் ஆகியவை வைத்திருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் போன்று உலகில் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 17% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிர்ச்சி தரும் தகவலாக 85 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் தனியார், தனியாரால் நடத்தப்படும் பாதுகாப்பு நிறுவனங்கள், திருட்டு, கொள்ளை கும்பல்கள் ஆகியவையும் அடங்கும்.

    உலக மக்கள் தொகையில் 4% அளவிற்கே பங்களிப்பை அளிக்கும் அமெரிக்காவில் உலக துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 40% அளவுக்கு குவிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அங்கு 40 கோடி துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது.

    அதாவது அங்கு வசிக்கும் 100 பேருக்கு 121 துப்பாக்கிகள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் 100 பேருக்கு 90 என்ற அளவிற்கே அங்கு துப்பாக்கிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அங்கு வசிக்கும் மக்களை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சம் யாதெனில் பொதுமக்களிடம் குவிந்து கிடக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா இருப்பதே. இந்தியாவில் பொதுமக்கள் கைவசம் சுமார் 7 கோடி துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 5 கோடி துப்பாக்கிகளை கொண்டுள்ள சீனா 3வது இடத்தையும் பெற்றுள்ளன. எனினும் சராசரியாக மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 100 நபர்களுக்கு 52 துப்பாக்கிகள் கொண்டுள்ள ஏமன் 2 வது இடத்திலும் 39 துப்பாக்கிகளுடன் மாண்ரினெகரோ மற்றும் செர்பியா நாடுகள் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

    இந்த புள்ளிவிவரங்களுக்கு நேர்மாறாக மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் மாலாவி ஆகிய நாடுகளில் வசிப்போரில் 100 நபர்களுக்கு ஒன்றுக்கும் குறைவான துப்பாக்கியே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறை இதே போன்றதொரு ஆய்வை இதே அமைப்பானது, 2007ஆம் நடத்தியிருந்தது. அப்போது உலகில் மொத்தமே 87 கோடி துப்பாக்கிகளே இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 65 கோடி பொதுமக்களிடம் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜி.எஸ்.டி. பாதிப்பையும் மீறி இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. #GST #DollarMillionaries
    மும்பை:

    இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘கேப்கெமினி’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்களின் சொத்து மதிப்பும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 லட்சம் கோடியாகும். இதே காலகட்டத்தில் உலக அளவில் உயர்ந்த கோடீசுவரர்கள் எண்ணிக்கையின் சராசரி 11.2 சதவீதம் மட்டுமே.



    ஜி.எஸ்.டி. தாக்கத்தை மீறி, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஜி.எஸ்.டி. தாக்கம் தற்காலிகமானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘இந்தியா, உலகஅளவில் வேகமாக வளரும் சந்தை’ என்றும் அது கூறுகிறது. கடந்த ஆண்டு சந்தை மூலதனத்தில் 50 சதவீதத்துக்கு மேல் உயர்வு ஏற்பட்டதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். நிலங்களின் மதிப்பு உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை இதர காரணங்கள் ஆகும். 
    ×