search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174124"

    • மதுரை மாடக்குளம் பகுதியில் 4-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பசுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற உள்ளதால் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள்நகர், அவர்லேடிபள்ளி, காயத்திரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர், சவுபாக்கியா நகர், துர்கா நகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி. நகர், அமைதிசோலை, சுந்தர்நகர், ஜே.ஜே.நகர், ஹார்விபட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை ரெயில் நிலையம் சார்பில் சுதந்திரதின சாதனை படக்காட்சி வாகனத்தை மேலாளர் தொடங்கி வைத்தார்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டெல்லி சென்று சேர இருக்கிறது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டம் சார்பாக 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி, சாதனை படக்காட்சி வாகன பேரணியை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில், 6 மோட்டார் சைக்கிள்களில் ௧௨ ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விருதுநகர், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், ராமேஸ்வரம், காரைக்குடி, திண்டுக்கல் வழியாக சென்னை செல்கின்றனர். மேலும், சென்னையில் இருந்து அனைத்து கோட்ட பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பேரணியாக புதுடெல்லி செல்ல இருக்கிறார்கள்.

    இந்த மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஒரு பட காட்சி வாகனமும் செல்ல இருக்கிறது. ஆஸாதி கா அம்ரித் மஹோற்சவ நிகழ்ச்சி, இந்திய ரெயில்வே மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகள் ஆகியவை இந்த படக்காட்சி வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

    மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டெல்லி சென்று சேர இருக்கிறது.

    • மதுரையில் 1.250 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது கணவன்-மனைவி தப்பி ஓடி விட்டனர்.
    • பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. போலீசார் அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை ஆனையூர், இந்திரா நகரில் கணவன்- மனைவி உள்பட 4 பேர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் வசந்தா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார்கள்.

    அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. போலீசார் அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஆணையூர், கருப்பசாமி நகரை சேர்ந்த முருகன் (59), உசிலம்பட்டியை அடுத்த கீழப்பட்டி ராஜா (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்லூர் கீழத்தோப்பு தங்கபாண்டி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோருக்கு கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கஞ்சா விற்ற முருகன், ராஜாவை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய தங்கபாண்டி- மகாலட்சுமி தம்பதியை தேடி வருகின்றனர்.

    வைகை தென்கரை, சோனை முத்தையா கோவில் எதிரே, வாலிபர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி கஞ்சா விற்ற மேலூரையடுத்த செம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த மலைவீரன் மகன் நவீன் குமார் (20) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

    • பழங்காநத்தம் பகுதியில் 3 வீடுகளில் புகுந்து பணம் திருடப்பட்டது.
    • இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம், மாடக்குளம் மெயின் ரோடு, மருதுபாண்டியர் நகர், 3-து தெருவை சேர்ந்தவர் ராஜ பிரபு (31).

    அதிகாலை இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ராஜ பிரபு எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (34). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.8,700-ஐ திருடிச்சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேற்கண்ட 2 வீடுகளிலும் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி ராமலட்சுமி (39). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மதுரை செல்லூரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
    • 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை செல்லூர், அம்பேத்கர் நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூதாட்டி உள்பட 3 பெண்கள் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது வெங்கடா சலபதி மனைவி சந்திரேஸ்வரி என்ற சந்திரா என்ற ஐஸ் சந்திரா (வயது 61) என்பவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் திருச்சி மாவட்டம், தீரன் நகரைச் சேர்ந்த 35 வயது பெண் மற்றும் தூத்துக்குடி, சிவன் கோவில் சத்திரத்தை சேர்ந்த 29 வயது பெண் ஆகிய 2 பேரை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடு த்தியது தெரிய வந்தது.

    இது தொடர்பாக செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தெப்பக்குளம் துணை மின்நிலையம் காமராஜர் சாலை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    ஆரப்பாளையம் துணை மின்நிலையம் தமிழ்ச்சங்கம் பீடர் மற்றும் தெப்பக்குளம் துணை மின்நிலையம் காமராஜர் சாலை பீடரில் நாளை (28-ந் தேதி) மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக வடக்கு வெளி வீதி, வடக்கு மாசி  வீதி, (பிள்ளையார் கோவில் முதல் ராமாயணசாவடி வரை), மேல மாசி வீதி, (பிள்ளையார் கோவில் முதல் மீனாட்சி பேன் ஹவுஸ் வரை), சேணையர் காலனி, கீழஅண்ணா தோப்பு, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் 4-வது தெரு, வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி.

    காமராஜர் சாலை மெயின்ரோடு, பங்கஜம் காலனி 3-வது தெரு, சந்தைபேட்டை, நவரத்தினபுரம், ஏ.வி.டி.பந்தல் தெரு, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி சுற்றியுள்ள பகுதிகள், காதர்கான் பட்லர் சந்து, மாயாண்டி தெரு, வெங்கடபதி தெருக்கள் முழுவதும், பிஷர் ரோடு, சீனிவாசா பெருமாள் கோவில் தெருக்கள் முழுவதும், சுடலைமுத்து சந்து, பழைய இங்கிலீஷ் கிளப் சந்து, தொழில் வர்த்தக சங்க அலுவலக பகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • மதுரையில் பெண்களிடம் நகை திருட்டு போனது.
    • மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முருகேசன் மனைவி பானுமீனா (வயது 42). இவருக்கு நேற்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே பானு மீனா மகளுடன் மோட்டார் சைக்கிளில் மருந்து கடைக்கு வந்தார். அங்கு மருந்து வாங்கிக் கொண்டு தாயும், மகளும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    அவர்கள் சவுராஷ்டிரா டீச்சர்ஸ் காலனி மெயின் ரோட்டில் சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்த 2 மர்ம நபர்கள் பானுமீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக பானு மீனா குற்றபிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கலை நகரை சேர்ந்த ஆத்தப்பன் மனைவி தேனம்மை (43). இவர் செக்கடி தெருவில் உள்ள யோகா மையத்துக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், தேனம்மை அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக நெல்லை-ஈரோடு இடையே ரெயில்கள் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    நெல்லை-ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்து வருகிற 11-ம் தேதி முதல் மதியம் 1.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.45 மணிக்கு நெல்லை செல்லும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து வருகிற 13-ம் தேதி முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செல்லும்.

    இந்த ரெயில்கள் கொடுமுடி, புகலூர், கரூர், வெள்ளியணை, எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கப்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி யில் நின்று செல்லும்.

    அதேபோல மயிலாடு துறை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு திண்டுக்கல் செல்லும். மறுமார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வருகிற 12-ம் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்லும்.

    இந்த ரெயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பிளஸ்-1 தேர்வில் மதுரை மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது.
    • மாநில அளவில் பெரம்பலூர் 95.56 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் இன்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது. மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் பிளஸ்-1 தேர்வு தேர்ச்சி விவரங்கள் வருமாறு:-

    மதுரை கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 233 மாணவர்கள், 6 ஆயிரத்து 19 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.13 சதவீதம் ஆகும்.

    மேலூர் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 422 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 083 மாணவர்கள், 5 ஆயிரத்து 727 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 810 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.64 சதவீதம் ஆகும்.

    திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 126 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3ஆயிரத்து 933 மாணவர்கள், 3 ஆயிரத்து 923 மாணவிகள் என மொத்தம் 78 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.68 சதவீதம் ஆகும்.

    உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 405 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 070 மாணவர்கள், 2 ஆயிரத்து 213 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 283 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.25 சதவீதம் ஆகும்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் 35 ஆயிரத்து 907 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 462 மாணவர்கள், 17 ஆயிரத்து 739 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்து ள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 95.25 ஆகும்.

    பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் 95.56 சதவீதம் பெற்று முதலிடத்தையும், விருதுநகர் 95.44 சதவீதம் பெற்று 2-ம் இடத்தையும், மதுரை 95.25 சதவீதம் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.

    • இசையமைப்பாளர் இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் சமீபத்தில் நிறைவடைந்தது.
    • சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற இவரது இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை அடுத்து அவரது இசை நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து நாளை மதுரை ஒத்தக்கடை பள்ளிக்கூட வளாகத்தில், 'இசை என்றால் இளையராஜா' கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இளையராஜா மதுரைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.


    இளையராஜா

    தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் சென்ற இளையராஜா பக்தர்களோடு பக்தராக நின்று சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக 45 நிமிடங்கள் கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் தமிழ் வருட பிறப்பு, ஆங்கில வருடப்பிறப்பு, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் இளையராஜா மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.

    • 4 மாத பயிற்சி திட்டத்துடன் ரூ.13 ஆயிரம் ஊக்கத்தொகை பெட்கிராட் தொண்டுநிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
    • வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

    மதுரை

    மதுரை எஸ். எஸ்.காலனி வடக்கு வாசல், அருணாச்சலம் தெருவில் பெட்கிராட் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளர் எம்.சுப்புராம் கூறியதாவது-

    இந்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் கிராமப்புற மாணவர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் பெட்கிராட் தொண்டு நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 4 மாத கால இலவச பயிற்சி திட்டத்தில் சேரும் ஆண்கள், பெண்களுக்கு டிடிபி கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

    மேலும் பெண்களுக்கு தையல் பயிற்சியும் வழங்கப்படுகிறது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் இதில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 3 மாத பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்துடன் பாடப் புத்தகம், சீருடை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சித் திட்டத்தில் இணையும் கிராமப்புற மாணவர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம்

    2022-23-ம் ஆண்டுக்கான பயிற்சி தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி எடுக்க வேண்டுகிறோம்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் ஆண்கள்-பெண்களுக்கு வீட்டு உபயோக மின்சார பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சி காலம் 70 நாட்கள் ஆகும். இந்த பயிற்சியில் சேரும் தாழ்த்தப்பட்ட கிராமப்புற பெண்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகின்றன.

    மேலும் விவரங்களுக்கு ஆரப்பாளையம் சிவபாக்கியம் திருமண மண்டபத்தில் உள்ள பெட்கிராட் மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 4 பேர் கும்பல் குருநாதனை கத்தி முனையில் மிரட்டி ரூ.4 ஆயிரத்து 650ஐ பறித்துச் சென்றது.

     மதுரை

    மதுரை தத்தனேரி புது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). கூலித் தொழிலாளி. வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் கண்மாய்க்கரை பகுதிக்கு சென்றார். அவரை 2 பேர் வழிமறித்து, ரூ.500-ஐ பறித்துச்சென்றது. இதுகுறித்து கார்த்திக் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி கார்த்திக்கிடம் பணம் பறித்த களத்துப் பொட்டல், எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (28), பெரியபூலாம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சிறுவன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    விளாங்குடி, சொக்கநாதபுரம் தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (27). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் விளாங்குடி பாலமுருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்குமாரிடம் வழிப்பறி செய்த பிரசாத் (27) என்பவரை கைது செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (48). நேற்று இவர் அவனியாபுரத்தில் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு சென்றார். அங்கு வந்த 4 பேர் கும்பல் குருநாதனை கத்தி முனையில் மிரட்டி ரூ.4 ஆயிரத்து 650-ஐ பறித்துச் சென்றது.

    இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார்

    வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×