search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174124"

    • “அக்னிபத்” திட்டத்திற்று எதிர்ப்பு மதுரை ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எம்.பி. உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பாதுகாப்பு ேபாலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் பலர் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மதுரை

    இந்திய ராணுவத்தில் அக்னிபத் வீரர்கள் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்கலை கண்டித்தும் மதுரை ெரயில் நிலையம் முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று காலை முதல் பெரியார் பஸ் நிலையம் மருதுபாண்டியர் சிலை அருகில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் எம்.பி. தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின் அங்கு திரண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சியினர் வெங்கடேசன் எம்.பி. தலைமையில் பேரணியாக மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத கம்யூனிஸ் கட்சியினர் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு ேபாலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் பலர் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நிலைமை மோசமாகவே ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற வெங்கடேசன் எம்.பி. உள்பட 350-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர்கள் கூறி உள்ளனர்.
    • மேற்கண்ட தகவல்களை செயற்பொறியாளர்கள் மோகன், பழனி தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரில் நாளை (24-ந்தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    அனுப்பானடி, சுப்பிர மணியபுரம், தெப்பம் துணை மின் நிலையங்களில் அவசர கால பணிக்காக பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    தாய் நகர், மாருதி நகர், கங்கா நகர், சரவணா நகர், மாணிக்கம் நகர், ெஜ.ஜெ.நகர், அம்மன் தெரு, ராஜீவ்காந்தி தெரு கடைசி பகுதிகள், மாறன் ஆயில் மில் பகுதிகள். சுப்பிரமணியபுரம் துணை மின் நிலையத்தில் பவர் ஹவுஸ் ரோடு பகுதி மட்டும்.

    பாலரங்காபுரம், புதுராம்ரோடு, பழைய குயவர் பாளையம் ரோடு, இந்திரா நகர், சி.எம்.ஆர். ரோடு ஒரு பகுதி மற்றும் நரசிம்மபுரம்.

    மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    யாகப்பா நகர், சிவா ரைஸ்மில், மருதுபாண்டியர் தெரு, நெல்லை வீதி, தாசில்தார் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    கூடல்நகர், செக்டார் 6 ஏரியா, ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன், சிலேயனேரி, கணபதி நகர், மல்லிகை நகர், இந்திரா நகர், பிரசன்னா நகர், மலர் நகர், செல்வா கார்டன், தோபாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    எஸ்.என்.ஏ. அப்பார்ட்மெண்ட், சர்வேஸ்வரன் கோவில், மவுலானா சாகிப் தெரு, பாண்டியன் அப்பார்ட்மெண்ட், பூந்தமல்லி நகர், குலமங்கலம் மெயின் ரோடு, ஜீவா ரோடு, போஸ் வீதி, சக்தி மாரியம்மன் கோவில் தெரு, மீனாட்சிபுரம்-சத்திய மூர்த்தி 1 முதல் 7 தெருக்கள், ஓடக்கரை, குருவிகாரன் சாலை, கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, சட்டக்கல்லூரி, மடீசியா மகால், ராஜாமுத்தையா மன்றம், உலக தமிழ் சங்கம மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகள்.

    ஆத்திகுளம், கங்கை தெரு, குறிஞ்சி நகர், கற்பகவிநாயகர் கோவில் தெரு, வீரபுலவர் காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

    கோமதிபுரம், மேலமடை, ஹவுசிங் போர்டு, செண்பக தோட்டம், வளர் நகர், ஸ்ரீநகர், டி.ம்.நகர், பிரீத்தி மருத்துவமனை, பூம்புகார், உத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    வேல்நகர், அன்புநகர், படையப்பா நகர், ஷீபா நகர, அதிபராசக்தி நகர், முனீஸ்வராநகர், அண்ணாமேடு, இ.பி.காலனி, தாமிரபரணி தெரு, மீனாட்சி நகர், மயில் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சிக்னல் அருகில், டி.டி.சி.நகர், லே ஏரியா பகுதிகள், அண்ணா நகர் 80 அடி ரோடு, சுகுணா ஸ்டோர், வைகை காலனி, எச்.ஐ.ஜி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், பிள்ளையார்கோவில் தெரு, ெபான்மேனி நாராயணன் தெரு, ஜானகிநாராயணன் ெதரு, அருணாச்சலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது ெதரு, ராமையா ஆசாரி தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு.

    ஏ.பி.கே. மெயின் ரோட்டில் உள்ள வெற்றி தியேட்டர் முதல் ரினால்ட் கம்பெனி வரை, வில்லாபுரம் தமிழ்நாடு ஹவுசிங்போர்டு காலனி கிழக்கு பகுதிகள், மீனாட்நி நகர், துளசிராம் தெரு, கணபதிநகர், செந்தமிழ் நகர், காவேரி நகர், முத்துராமலிங்கபுரம் 1 முதல் 4-வது தெரு வரை, குரு மகால் பகுதிகள், ஓம் சக்தி நகர், பரமேஸ்வரர் அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1-2, வாசுகி தெரு மற்றும் நேதாஜி தெரு.

    சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, மேக்ஸ் அபார்ட்மெண்ட், கணபதி நகர், பொற்றாமரை நகர்.

    எம்.எம்.காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ைள நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள், பிரியங்கா அவென்யு, அர்ஜூனா நகர், க்ளாட்வே கிரீன் சிட்டி, வ.உ.சி. தெரு, பராசக்தி நகர், காவேரி நகர் 1 முதல் 7 வரை, ஆறுமுக நகர் 1,2-வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம் நகர், எம்.எம்.சிட்டி.

    மேற்கண்ட தகவல்களை செயற்பொறியாளர்கள் மோகன், பழனி தெரிவித்துள்ளனர்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
    • கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை சுப்ரமணியபுரம் துணைமின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணைமின் நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், காஜிமார்தெரு, தெற்குமாடவீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்பரங்குன்றம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடல்மலைத் தெரு, என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதிதெரு, பாம்பன்நகர், கிரீன்நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    மதுரை

    நடிகர் விஜய் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில், புனித அன்னை தேவாலயம், கோரிப்பாளையம் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    தொடர்ந்து திருநகரில் உள்ள கருணை இல்லத்தில் தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ராம்பாலாஜி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு வாசல் முதியோர் இல்லத்தில் மாநகர இளைஞரணி நிர்வாகி நட்ராஜ் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட நிர்வாகி முத்துக்குமார் ஏற்பாட்டில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாகனாகுளத்தில் ஹரி, பாண்டி பிரேம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. அரும்பனூரில் மூர்த்தி ஏற்பாட்டில் நோட்டுப்புத்தகம், அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆண்டார்கொட்டாரத்தில் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்கள் 100 பேருக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் வடக்கு மாவட்டத்தலைவர் விஜய் அன்பன் கல்லாணை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாலையில் மத்திய 3-ம் பகுதி ஏற்பாட்டில் கேக் வெட்டி நோட்டுப்புத்தகம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் ஏற்பாட்டில் பொன்மேனி முதியோர் இல்லத்தில் மதிய உணவு, நாகமலை புதுக்கோட்டை நித்திஷ், கண்ணன், செந்தில் ஏற்பாட்டில் அன்னை ஆசிரம முதியோர்களுக்கு இரவு உணவு, மதிச்சியம் ரகு ஏற்பாட்டில் செனாய் நகர் குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு, நோட்டுப்புத்தகம் வழங்கப்படுகிறது.

    • அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
    • அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, வசந்தம் அவென்யூவை சேர்ந்தவர் முருகவேல் (65). இவரது மனைவி தமிழ்செல்வி (60).

    இவர் 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வி மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகே உள்ள உபயோகமில்லாத கிணற்றில் பார்த்தபோது தமிழ்செல்வி பிணமாக மிதந்தார். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    அலங்காநல்லூர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். மோதலால் இரட்டை இலை முடங்கும் என பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
    • அதிகாரம் மோதலால் அ.தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் தற்போது அதிகார மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள இந்த அதிகாரம் மோதலால் அ.தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமுமில்லை தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக் குழு கூடுவதற்கு சட்ட ரீதியாக எந்த வாய்ப்புகளும் இல்லை. எனவே அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் பூட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமும் முடங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிர்வாகிகள் அதிகம்பேர் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் 14 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. எனவே இந்த மோதலால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் அபிடவிட் தாக்கல் செய்தவன் என்ற முறையில் தெளிவாகக் கூறுகிறேன். அ.தி.மு.க. சட்ட விதி 43-வது பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

    பொதுசெயலாளர் பதவியை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக யாரும் தேர்வு பெற முடியாது. அ.தி.மு.க.வில் தற்போது நிலவி வரும் போக்கு கட்சியை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு சென்றுவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.
    • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி நிர்வாகி விஜயசரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், முத்துமாரி என்பவரிடம் சையது ஆரிப், மனைவி சஹானா பானு ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக குழந்தையைப் பெற்று உள்ளனர்.

    இதற்கு ஷமீம்பானு என்பவர் புரோக்கராக இருந்து செயல்பட்டு உள்ளார். மேற்கண்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட முத்துமாரி, ஷமீம்பானு, சையது ஆரிப், அவரது மனைவி சகானா பானு ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே விதி மீறும் மதுபானம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
    • குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட் வக்கீல்கள் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, காயத்திரி , சமூக ஆர்வலர்கள் அருண், வினோதா, ஷாலினி ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அனீஷ் சேகரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எல்லீஸ் நகர் பிரதான சாலையில் செயல்படும் மதுபான கூடம், விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. இங்கு எம்.ஆர்.பி.யை விட 4 சதவீதம் குறைந்த விலைக்கு மதுபானங்களை கொள்முதல் செய்து, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

    வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கிளப் செயல்படும் கட்டிடத்துக்கு அருகில் பள்ளிகூடம், கோவில்கள் உள்ளன. பார்க்கிங் இடத்தில் டேபிள்களை போட்டு மதுபானம் அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடக்கிறது. பார் ஊழியர்களுக்கு முறையான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. வழங்கப்படவில்லை. எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இதுகுறித்து மத்திய கலால் வரி துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மதுரை

    சர்வதேச யோகா தினத்தையொட்டி மதுரை அவனியாபுரம் மண்டல் பா.ஜ.க. சார்பில் மண்டல் தலைவர் கருப்பையா ஏற்பாட்டில் யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், மனோகரன், குமார், வினோத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், பழனிவேல், துரை பாலமுருகன், எம்.எஸ்.ஷா, மாவட்டச் செயலாளர்கள் சகாதேவன், சண்முகப்பாண்டியன், மெகர்நிஷா, மாநில இளைஞரணி துணைத்தலைவர் மாரி சக்கரவர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இளைஞரணி தலைவர் கோகுல் அஜித், அரசு தொடர்பு பிரிவு தலைவர் செல்வராஜ், வர்த்தக பிரிவு தலைவர் வடமலையான் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ் -2 , எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
    • மதுரை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மதுரை

    இன்று வெளியான பிளஸ் -2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 34, 828 பேர் தேர்வு எழுதியதில் 33 ஆயிரத்து 745 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 17,412 பேரும் மாணவர்கள் 16,333 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய மாணவர்களில் 95.15 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 96.89 சதவீதமாகும்.இதன் மூலம் தமிழகத்தில் மதுரை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

    10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 559 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 36 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 18 ஆயிரத்து 86 பேரும், மாணவிகள் 18,579 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்களில் 92.72 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.51 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்த சராசரியாக 95.09 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் தேர்ச்சி பட்டியலில் மதுரை மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது.

    • பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை விழுந்தது.
    • ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.

    மதுரை

    மதுரை சம்மட்டிபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரிடம் ஒத்தக்கடை, அரசரடி ஜெயச்சந்திரன் (35) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினார். இதனை அவர் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே செல்வம் அவரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அவரிடம் செல்வம் பணத்தை திருப்பி கேட்டார். ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன், அருண் மற்றும் ரஞ்சித் ஆகிேயார் செல்வத்தை அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தாக்கிய ஜெயச்சந்திரன், அருண், ரஞ்சித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவனியாபுரத்தில் கஞ்சா, ரூ. 1 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்.
    • விசாரணையில் அவர் மாநகராட்சி காலனி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் காவல் துறையினருக்கு மாநகராட்சி காலனி பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவனியாபுரம் மாநகராட்சி காலனி டாஸ்மார்க் கடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வெள்ளைநிற சாக்குப் பையுடன் ஒருவர் இருந்தார். அவரை அழைத்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சாக்குப்பையில் கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தனர்.

    அவரிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 780 ரொக்கம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் மாநகராட்சி காலனி பகுதியை சேர்ந்த வழிவிட்டாள் என்பவரின் மகன் மாரீஸ்வரன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×