search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • அனைத்து வகையான பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    • காமரா ஜரின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் காமரா ஜரின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்ரீத் பண்டிகையை சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
    • இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரெத்தின முஹம்மது, உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்லவாப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கீழக்கரையில் ஆண்டுதோறும் வடக்கு தெருவில் உள்ள மணல்மேட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த அனைத்து சமுதாய மாணவிகளும், சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கல்லூரி தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மணல்மேடு பண்டிகை கால கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக நடத்த ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மாலை 4மணி முதல் 10.30 வரை பக்ரீத் பண்டிகை விழா நடைபெறும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் முறையான அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர கூடுதலாக மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்படும். திடல் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இதன் மூலம் கொரோணா கால கட்டத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
    • பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மருத்துவர்களுக்கு மலர்கொத்து மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

    மருத்துவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் மருத்துவர்கள் சேவை குறித்து மாணவரிடம் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் உரையாற்றினர்.

    பின்னர் மாணவர்கள் இன்ஷியா, பொன் ராஜ்குமார், பெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செம்பா மற்றும் மருத்துவர் இப்ராஹிம் நேர்காணல் நடத்தினர்.

    இதன் மூலம் கொரோணா கால கட்டத்தில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

    முன்னதாக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் மருத்துவர்களுக்கு மலர்கொத்து மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
    சேலம்:

    சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் கடந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கலெக்டர் ரோகிணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



    தற்போது நாங்கள் மேடையில் இருப்பதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான். அதே போன்று மாணவிகளாகிய நீங்கள் வரும் காலத்தில் மேடைக்கு வர காரணமாக இருப்பவர்களும் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை நிறைவேற்ற மாணவ-மாணவிகள் முழு முயற்சி செய்ய வேண்டும்.

    மாணவர் பருவம் மிக முக்கியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசிரியர் அம்மாவாக இருந்தாலும், கல்வி கற்று கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதிக மதிப்பெண்கள் பெறவும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பவரும் ஆசிரியர் தான். எனவே ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    ஆசிரியர் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பை மாணவ-மாணவிகள் நிறைவேற்ற வேண்டும். நான் (கலெக்டர்) ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு பள்ளியில் தான் படித்தேன். அதே போன்று என்ஜினீயரிங் படிப்பும் அரசு கல்லூரியில் தான் படித்தேன்.

    தற்போது அரசு பணியில் உள்ளேன். மாணவ-மாணவிகள் அதிகம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்க வேண்டும். அரசு பள்ளி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகளிடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார். முன்னதாக நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியைகளுக்கு, மாணவிகள் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 
    ×