search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • நேரு பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பள்ளியில் புத்தகமில்லா தினம் கொண்டாடப்பட்டது
    • நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளால் குழந்தைகள் மகிழ்ச்சி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புத்தகமில்லா தினமாக கொண்டாடப்பட்டது.

    குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

    பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடையணிந்து பள்ளி வளாகம் முழுதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர்.

    புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்சிகள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கொளரி, அபிராமசுந்தரி, வரவெலட்சுமி, கோபமதிப்பிள்ளை மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியை சிவதர்சினி செய்திருந்தார்.

    புத்தகமில்லா தினம் கொண்டாடிய போது எடுத்தப்படம்.

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதியினர் புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் அவர்களது தாத்தா, பாட்டிகள் பட்டாசுகள் வெடித்தனர். வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டது. இரவை பகலாக்கும் வகையில் பட்டாசு வெளிச்சங்கள் இருந்தது. பட்டாசு சத்தங்கள் காதை பிளக்கும் வகையில் இருந்தன.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, குலசேகரம், குளச்சல், களியக்காவிளை, மார்த்தாண் டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் தீபாவளி பண்டிகையை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையடுத்து சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தோடு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    சொத்தவிளை கடற்கரை, வட்டக்கோட்டை கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மாலை பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பத்நாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் .

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது .

    ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் லட்சுமி பூஜை வழிபாடு செய்து கார்த்திகை தீபங்களை ஏற்றி ஒளிபரவச் செய்தும் வண்ணமலர்களால் பள்ளியை அலங்கரித்தும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    மேலும் மாணவர்கள் தீபத்திருநாளை கொண்டாடும் முறைகளை விளக்கும் நாடகங்களையும் நடனங்களையும் நிகழ்த்தி மகிழ்வித்தனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் . பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் நித்யா ஒருங்கிணைத்தார்.

    • திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர்
    • பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர். இதில் மழலை மலர்கள் வண்ண உடை உடுத்தி, மலர்களாக வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். இதில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

    • எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
    • கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா நடந்தது. அப்போது கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன்,மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கோத்தகிரி.ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், குன்னூர் ஒன்றிய செயலளர்கள் ஹேம்சந்த், பேரட்டி ராஜி,மீனவர் அணி.மாவட்ட செயலாளர் விசாந்த், பேரவை மாவட்ட துணை செயலாளர் வடிவேல், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளரும், எப்பநாடு ஊராட்சி தலைவருமான சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்திற்கு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் மலர் மாலை அணிவித்தார்.
    • தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூரில் அ.தி.மு.க.வின் 52 -வது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை தாங்கி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், அங்கு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளான தீபொறி அப்பாதுரை,காளிமுத்து, விவேகானந்தர் கவுன்சிலர் பாவனி மற்றும் வார்டு செயலாளர்கள் மகளிர்அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டை, சுற்று வட்டார கோவில்களில் நவராத்திரி விழா நடைபெறுகிறது.
    • தினமும் அம்பாளுக்கு மங்கள ஆரத்தி, தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.

    செங்கோட்டை:

    நவராத்திரி திருவிழா நாடுமுழுவதும் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் துர்க்கா பூஜையாகவும், தென் மாநிலங்களில் விஜயதசமி, ஆயுத பூஜை என்றும், புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் இந்த பூஜை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    செங்கோட்டை கோவில்கள்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நவராத்திரி விழாவையொட்டி செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி கோவில், முப்புடாதி அம்மன் கோவில், வண்டிமலச்சி அம்மன் கோவில், நித்திய கல்யாணி அம்பாள் கோவில், பிரானூர் பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், ஸ்ரீவிநாயகர், அரசநங்கை, முப்பிடாதி அம்மன் உட்பட செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம், சிறப்பு தீபாராதனை, விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் தினமும் மங்கள ஆரத்தி தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனை போன்று வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    கொலு பொம்மைகள்

    இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர். கொலு பொம்மைகளாக தெய்வ அவதாரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மை செட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சரித்திர நிகழ்வுகளை பறைசாற்றும் விதமாக கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் திருவுருவ காட்சிகள், முளைப்பாரி செட், கல்யாண கார் ஊர்வலம், கிராம செட், பொங்கல் செட், ஐஸ்வரேஸ்வரர் செட், கல்யாண செட், அழகர் செட் உள்ளிட்டவைகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், குபேரன் பொம்மைகள், காவலர்கள், கிரிக்கெட் செட், விளையாட்டு, உயிரினங்கள் சாதன செட்களுடன் 5, 7, 9, 11 என அவரவர் விருப்பத்திற்கிணங்க படிகள் அமைக்கப்பட்டு அவற்றில் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

    • மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
    • அக்டோபர் 11-ந்தேதி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டம்

    கோவை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட வாரம் கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்ட மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 விழிப்புணர்வு வாரம் அக்ேடாபர் 5 முதல் 12 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    அதன் தொடக்கமாக, கோவை தலைமை அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல, ஈரோடு, திருப்பூர் மற்றும் ஊட்டி மண்டலங்களிலும் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, அக்டோபர் 8-ந் தேதி நாளை விழிப்புணர்வு மாரத்தான், நடைப்பயணம் நடைபெற உள்ளது.

    இந்தப் பேரணியானது, கோவை அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி, கவுண்டம்பா ளையம், சேரன் மாநகர் வழியாக மீண்டும் அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நிறைவு பெறவுள்ளது. அதே நாள் பொள்ளாச்சியிலும் விழிப்புணர்வு நடைப்ப யணம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில், பொதுமேலாளர்கள், துணை மேலாளர்கள், பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாரத்தான், நடைப்பயணத்தை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கோவை தலைமையகத்தில் அக்டோபர் 11-ந் தேதி பணியாளர்களுக்கு தகவல் உரிமைச் சட்டப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், தி.மு.க. பொதுக்குழு உறுப் பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மணிமே கலை பாக்கியராஜ், மனித நேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி,

    தி.மு.க. மாவட்ட பிரதிநி திகள் முருகன், நரிப்பையூர் லாரன்ஸ், சாயல்குடி நீர்ப் பாசன சங்க தலைவர் ராஜா ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில பிரதிநிதி வழக்கறிஞர் சம்சுதீன் சேட் வரவேற்றார். பெரியாரின் திரு உருவப்ப டத்திற்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச் சாமி, காங்கிரஸ் கட்சி சேவா தள தலைவர் கணேசன், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் தங்கச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஒன்றிய கவுன்சிலர் பெரோஸ் பானு ஜலில், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, காங்கிரஸ் பிரதிநிதிகள் சகாயராஜ், மைக்கேல்ராஜ், சாயல்குடி வார்டு உறுப்பி னர் அமுதா, தி.மு.க. கிளைச் செயலாளர் பாண்டி, மாரி யர் தி.மு.க. கிளைச் செய லாளர் ஆறுமுகம், வாலி நோக்கம் கிளை செயலாளர் அன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது
    • கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு ஏறிச் செல்வதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி :

    இந்தியாவில் 182-க்கும் மேற்பட்ட கலங்கரை விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் முதல் கலங்கரை விளக்கம் 1796-ம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மகாபலிபுரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மணப்பாடு, முட்டம், கன்னியாகுமரி உள்பட பல பகுதிகளில் கலங்கரை விளக்கம் ஏற்படுத்தப்பட்டன.

    கன்னியாகுமரியில் புதிய பஸ்நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக் கம் அமைந்து உள்ளது. இந்த கலங்கரை விளக்கம் தரைமட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்திலும் அமைந்து உள்ளது. கடற்கரைப் பகுதியில் இருந்து 29 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதிக்கு ஏறிச் செல்வதற்கு வசதியாக 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் 6.30 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் பயணிகளுக்கு ரூ.10-ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.25-ம், சிறுவர்களுக்கு ரூ.5-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதற்கிடையில் மும்பை யில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கப்பல்கள் மற்றும் தீவிர வாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 2012-ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கத்தில் ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் நவீன"ரேடார்"கருவி பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகள் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி நின்று பார்ப்பதற்கு வசதி யாக "லிப்ட்" வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    1927-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட கலங்கரை விளக்கம் பாதுகாப்பு சட்டத்தின் படி ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி இந்திய கலங்கரை விளக்க தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி யில் உள்ள கலங்கரை விளக்கத்தில் 96-வது இந்திய கலங்கரை விளக்க தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சுதந்திரக் கொடி மற்றும் கலங்கரை விளக்கதுறையின் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி பிரகாஷ் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து பேசினார். கலங்கரை விளக்க தொழில் நுட்ப உதவியாளர்கள் சுரேஷ், வினோத்குமார் ஆகியோர் கலங்கரை விளக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலங்கரை விளக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கலங்கரை விளக்கத்தில் "லிப்ட்" வசதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 24 ஆயிரத்து 127 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். இதில் 120 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவார்கள். கலங்கரை விளக்கு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் இன்று இலவச மாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

    • மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மிலாடிநபி பண்டிகை கொண்டாடப்பட்டது. மாணவி ஹரிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார். மாணவி ஆப்ரின் ஹாஜராள் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாணவி ரபியாஸனா நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி உரையாற்றினார். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் முகம்மது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி நாடகமாக நடித்து காட்டினர். மாணவி மும்தாஜ் குர் ஆன் வாசித்தார். மாணவி சஞ்சுஸ்ரீ நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன
    • பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    பாரத பிரதமர் மோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை-பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர பா.ஜ.க தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் பக்தர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊட்டி நகர அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கட்சிக்கொடி ஏற்றிவைத்து பேசுகையில், ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழிலாளர்களிடம் மத்திய அரசின் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, பா.ஜ.க சார்பில் ஒருநாள் உணவு வழங்கப்பட்டது. அப்போது அங்கு உள்ள குழந்தைகள், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டசெயலாளர்கள் அருண்குமார், வெங்கடேஷ், நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், ருத்கார்த்திக், துணைத் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், சுதாகர், தேவி, செயலாளர்கள் அபிராமி, பிரவீன்குமார், பிலோமினா, சுற்றுச்சூழல் பிரிவு விசாலி, வெங்கடேஷ், கண்ணன், நாகராஜ், விளையாட்டுபிரிவு ரகு மற்றும் உதயா, ஐ.டி.விங் மல்லிகா, பிரசாந்த், மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×