search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான்

    ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை வரவேற்று சோழவந்தானில் பேரூர் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார். பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜா, பேரூர் துணைச்செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன், இளைஞரணி காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.
    • வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கவுள்ளது.

    வால்பாறை,

    வால்பாறையில் வருகிற 26-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    மலைச்சரிவுகளில் பச்சைப் பசேல் என கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள், இதமான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால், தினசரி ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழா நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி மேற்பார்வை யாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், வால்பாறையில் வருகிற 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடத்துவது என்றும், கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், காவல்துறை சார்பில் நாய் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் தனித்தனி கண்காட்சிகள் நடத்துவது என்றும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் கோடை விழா நடத்தப்படுவதால் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.
    • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு க்கள் வழங்கப்பட்டன.

    பின்னர் தஞ்சாவூர் வடக்கு வீதி மற்றும் மாநகராட்சியில் உள்ள தேசத்தந்தை காந்தி சிலை, கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை, மிஷின் தெருவில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து அனைவ ருக்கும் இனிப்புக்கள் வழங்கி காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநகர, மாவட்ட துணைத் தலைவர் செந்தில் நா.பழனிவேல், மாவட்ட ஊடகப்பிரிவுத் தலைவர் பிரபு மண்கொண்டார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன், மேல உளூர் சிவானந்த வாண்டையார், மாநில பேச்சாளர் பால குலோத்துங்கன், மகளிர் பிரிவைச் சேர்ந்த சசிகலா, சாந்தாராமதாஸ், கலைச்செல்வி, சுவிதா ஞானப்பிரகாசம், மாவட்ட கலை இலக்கியப் பிரிவுத் தலைவர் கலைச்செல்வன், அருண்சுபாஷ், சிவக்குமார், பாரத், மணிகண்டன், துரைராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சண்முகம், கோபாலய்யர், கல்விராயன்பேட்டை கருணாநிதி, ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்

    ஜெயங்கொண்டம்:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில், மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க., பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் செய்தும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டின் பெயரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவிலில்ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு டேபிள் மற்றும் சேர் வழங்குதல் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி,பெரி யாயிபாளையம், சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் கண்ணப்பன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீத சந்திரசேகர், பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், குமார், தொழிற்சங்க செயலாளர் கண்ண பிரான், வக்கீல் அணி செய லாளர் முருகேசன், நிர்வாகிகள் உஷா ரவிக்குமார், ஆண்டவர் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கொடியினை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் ஏற்றினார்.
    • சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40-வது அமைப்பு தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக சிவகிரி தாலுகா அலுவலகம், வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளருமான மாடசாமி தலைமையில் நடைபெற்றது. சிவகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கொடியினை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் ஏற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் மற்றும் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவரான கணேசன் சங்கக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நில அளவர், மண்டல துணை தாசில்தார், தேர்தல் துணை தாசில்தார், சிவகிரி வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளரும் சிவகிரி வட்ட செயலாளருமான அழகுராஜா, வேல்முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சங்கக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் மாடசாமி வட்டக்கிளை தலைவர் கணேசன், வட்டக்கிளை செயலாளர் முனியசாமி, மகளிர் அணி பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், சங்கத்தை உருவாக்கி கட்டமைக்கப் பாடுபட்ட நிர்வாகிகளின் தியாகங்களைப் போற்றி, அவர்கள் வழியில் சங்கத்தினை திறம்பட வழிநடத்தி, அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

    • காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம் நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

    காளையார்கோவில்

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழா மண்டல, ஒன்றிய அளவில் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.

    ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 350 இடங்களில் இது நடைபெற உள்ளது.

    அதன் தொடக்கமாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சேவல் புஞ்சை நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ தலைமையில் ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் முன்னிலையில் நடந்தது.

    அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆரோக்கியசாமி. ஆயிரம் ஆயிரம் அறிவியல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். இதில் அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

    • 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் உரை டிஜிட்டல் புத்தகமாக வெளியீடு
    • ஏவிசிசி கணேசன் முன்னிலையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார்

    புதுக்கோட்டை,

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மனதின் குரல் உரையானது, புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி பள்ளி வளாகத்தில் நேரடியாக தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், சமூக சேவகர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். பிரதமரின் நூறாவது உரையாடலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், 14 மொழிகளில் தொகுக்கப்பட்ட பிரதமரின் மன் கி பாத் டிஜிட்டல் புத்தகத்தை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில், டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டார். முதல் பிரதியை பாஜக மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், நகர தலைவர்கள் லெட்சுமணன், சக்திவேல், அணிப்பிரிவு மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், மணிராஜன் மற்றும் நகர நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

    • சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.
    • புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழழ நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை வகித்தார்.

    தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன் பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர் எழில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர் ஐஸ்வர்யா, மாவட்ட பிரதிநிதி பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

    புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் சிறுத்தலை காட்டில் இருந்து காலை 8 மணி, 10:30 மணி, மாலை 3 மணி என மூன்று முறை கருப்பம்புலம், நெய்விளக்கு நால்ரோடு, வேதாரண்யம் வழியாக நாகைக்கு தினசரி மூன்று முறை இயக்கப்படும் என கிளை மேலாளர் தெரிவித்தார்.

    • பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்
    • அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது
    பெரம்பலூர்:


    அ.தி.மு.க. பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு பெரம்பலூரில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன், நகர துணை செயலாளர் சின்னசாமி. இளைஞரணி ஒன்றிய செயலாளர் காடூர் ஸ்டாலின் , கோவில் பாளையம் வக்கீல் ராமசாமி, வக்கீல் கதிர்கனகராஜ், கீழப்புலியூர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    • ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
    • பசும்பொன் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பிருந்து அறநெறியுடன் பிறருக்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் போதித்த நன்நெறிகளை கடைபிடித்து ரம்ஜான் பெருநாளை திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அனை வருக்கும் எனது சார்பிலும், அ.தி.ம.மு.க. சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திராவிட மண்ணில் மத நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கம் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகிற சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து சமய நல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.தமிழ் மண்ணில் திராவிட மாடல் அரசை திறம்பட நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து வருவதோடு குறிப்பாக சிறுபான்மை மக்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, பழங்குடி, பட்டியல் இன மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு அரணாக, கேடயமாக, பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகிறது,

    சாதி, சமய மோதல்களை தவிர்த்து ஒன்றுபட்ட திராவிட சமூகமாக சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மனிதநேயம் மலர்ந்திட சபதமேற்று ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது.
    • வக்கீல் முத்துராஜா, பழனிச்சாமி, உச்சப்பட்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க.பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்து மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருமங்கலம் தேவர் சிலை முன்பு மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வம் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இதில் யூனியன் சேர்மன் லதா ஜெகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், தகவல் சார்பு அணி நிர்வாகிகள் சிங்கராஜ் பாண்டியன், சதீஷ் சண்முகம், கவிகாசி மாயன், வாகைக்குளம் சிவசக்தி, வக்கீல் முத்துராஜா, பழனிச்சாமி, உச்சப்பட்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×