search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது.
    • இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 2022-ம் ஆண்டு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வசிக்கும் ஆசியர் பட்டயபடிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு படித்தவர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து தாள்-1- க்கு 230878 பேரும், தாள்-2-க்கு 401886 பேரும் என மொத்தமாக 632764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினர். எனவே இந்த கோரிக்கையினை ஏற்று தாள்-1, தாள்-2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் வழங்கி உள்ளது.

    அதன்படி 24.07.2022 முதல் 27.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி

    விண்ணப்பதாரர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பபடிவத்தில் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களை செய்யக்கூடாது.

    மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    • போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க முதல் நாளான இன்று பலர் திரண்டனர்.
    • தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 2 -ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறைத்துறையில் உள்ள 2-ம் நிலை சிறை காவலர், தீயணைப்புத்துறையில் உள்ள தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பப்பதிவு தொடங்கியது

    இதில் 2-ம் நிலை ஆயுதப்படை போலீசார் 2,180 , சிறப்பு காவல் படை போலீசார் 1091 , 2-ம் நிலை சிறை காவலர் 161, தீயணைப்பாளர்கள் 120 என மொத்தம் 3552 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்வுக்கு இன்று முதல் இணையதள வழியாக விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுநிலை பட்டம் படித்தவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

    உதவி மையம் ஏற்பாடு

    இதில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உதவ இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் உதவி மையம் செயல்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    அதன்படி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் பலர் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வந்தனர். இணையதளம் வழியாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து போலீசார் செயல் விளக்கம் அளித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் அறிவித்துள்ள 3552 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பிக்க உதவி வேண்டுவோர் இந்த மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக அணுகலாம். மேலும் விபரம் பெற 9445978599 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறினர்.

    சம்பளம் ரூ. 67 ஆயிரம்

    எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகளில் தேர்வாகி பணியில் சேரும் நபர்களுக்கு ஊதியம் ரூ. 67 ஆயிரத்து 100 வழங்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    • விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது.
    • இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது. நேற்று 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது.

    விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட 15 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிந்ததும் அந்தந்த கோவில்களுக்கு பெருமாள்கள் சென்றடைந்தன.

    விழாவில் நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

    முல்லைப்பெரியாறு அணைய சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MullaiPeriyarDam
    புதுடெல்லி:

    கடந்த மாதம் கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும், அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வழக்கில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139.99 அடியாக பராமரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் எனவும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இன்று மீண்டும் மனு விசாரிக்கப்பட்ட நிலையில், மனுவில் சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
    தமிழக பாஜக சார்பில் நாளை நடக்க உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவேந்தல் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கனிமொழி எம்.பி, திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். #Vajpayee #BJP
    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. தமிழக பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் கோ.க மணி, விசிக தலைவர் தொல்.திருமாவளனன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முஸ்லிம் லிக் கட்சி எம்.எல்.ஏ அபு பக்கர், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சன்முகம், இந்திய கம்யூ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மா. கம்யூ. மத்திய குழு உறுப்பினர் சம்பத், லோக் ஜனசக்தி தலைவர் வித்யாதரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேச உள்ளனர். 
    தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்குள் அதிக அகதிகள் வருவதாக மக்களவையில் மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியது அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் அகதிகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். தனது பேச்சில், “வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள்” என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று ரிஜிஜு கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, தவறுதலாக மந்திரி அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #TNGovt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்க அனுமதி அளிக்க கோரிக்கை விடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜூன் மாதத்தில் கர்நாடகா கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதால், அதுபோக ஜூலை மாதத்துக்கான மீதியை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறியுள்ளார். #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசைன் கூறியதாவது:-

    நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும்.

    அதுபோக, ஜூலை மாத பங்கீட்டை கர்நாடகா திறந்து விட வேண்டும்.  காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்.

    என அவர் கூறினார். தமிழக உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் செயல்படுத்தவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் பார்க்கப்படும். கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் எந்த கருத்தையும் கூட்டத்தில் முன் வைக்கவில்லை” என தெரிவித்தார்.
    டெல்லியில் இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாத பங்காக 31 டிஎம்சி தண்னீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

     

    கூட்டம் முடிந்த பின்னர், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவை வரவேற்றார். மேலும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும் என கூறினார்.

    ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்துக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பர் மாதத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
    ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால்தான் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சேலம் பசுமை வழி சாலை போடுவதற்கு மக்களிடம் கருத்துகளை கேளுங்கள் என்று அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதை அரசு கண்டு கொள்ளவில்லை. மக்களை துண்புறுத்துகிறார்கள். மக்களிடம் கருத்துகளை கேட்டால் தான் உண்மை தெரிய வரும்.

    பசுமை வழி சாலையை எதிர் பதில் எங்கள் வீரியம் குறையவில்லை. வருகின்ற 6-ந்தேதி திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தோம். போலீஸ் அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம். நிச்சயமாக போராட்டம் நடக்கும்.



    கர்நாடகாவில் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

    நீதிமன்றம் சரியாக முடிவு எடுத்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது. தமிழ்நாடு அரசு இதுவரை மக்களுக்கு என்ன தான் செய்தது. தமிழகத்தில் அரசு ஒன்று இருப்பதாக மக்கள் யாரும் கருதவில்லை. அரசாங்கம் மக்களை துன்புறுத்துவதாக மக்கள் நினைகிறார்கள். விரைவில் இந்த அரசுக்கு நல்ல முடிவு வரும்.

    90 சதவீத ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அ.தி.மு.க. ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்சி இறங்கினால் எல்லாரும் எங்களிடம் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDinakaran
    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என முட்டுக்கட்டை போட்டஅம்மாநில முதல்வர் குமாரசாமி, இன்று ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து அறிவித்தார்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு மாநிலங்களுக்கும் இதற்கான அழைப்பிதல் அனுப்பப்படும் என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ள நிலையில், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Ramadan #Eid
    சென்னை:

    தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

    இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×