search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    • கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி முதல் உடுமலை வழியாக வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில்உடுமலையும் ஒன்றாகும். பொள்ளாச்சி திண்டுக்கல்லுக்கு இடையே இருந்த மீட்டர்கேஜ் ரெயில் பாதை கடந்த 2009ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்தது. தற்போது இந்த பணிகளால் அப்போது ஐந்து ஆண்டுகளாக உடுமலை வழியாக ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது . அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி முதல் உடுமலை வழியாக இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை ரெயில் நிலையத்தில் நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிகளுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலைய வளாகத்தின் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. ரெயிலில் வரும் பயணிகள் அங்கு சென்று தண்ணீர் குடித்து வர முடியாது .அதனால் ரெயில் நிலைய அலுவலக வெளிப்புறம் உள்ள குடிநீர் குழாயை அலுவலகத்தின் உட்புறம் உள்ள ெரயில்வே வளாகம் வரை குடிநீர் குழாய் அமைத்து நீட்டித்து அங்கு தொட்டி வைத்தால் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

    இந்த ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான் பயணிகளுக்கு குடிநீராக பயன்படு கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 2018 -19 ம் நிதியாண்டில் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது.அதில் நாலு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் இந்த எந்திரம் பழுதாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இது பராமரிப்பில்லாமல் பயனின்றி காட்சி பொருளாகவே உள்ளது.

    இந்த ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிளாட்பாரத்தில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களுக்கு ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படுகிறது. இந்த கிணற்றில் உள்ள பகுதியில் குடிமகன்கள் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். காலி பாட்டில்களை அந்த கிணற்றில் போட்டு விடுகின்றனர்.

    இரவு நேரத்தில் குடித்து குடிநீர் குழாய்களை பிடித்து அசைக்கின்றனர். இதில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து உள்ளதால் அவை பயன்படுத்த முடியாதபடி உள்ளது .அதனால் தண்ணீர் வருவதை தவிர்க்க இரண்டு குழாய்களையும் கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் இரண்டு இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது .அந்த இரண்டு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது .அதனால் ரெயில் பயணிகள் உடுமலை ரெயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    உடுமலை ரெயில் நிலையத்தில் நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ரெயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது பார்த்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

    சிங்கம்புணரி

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பொன்னமராவதிக்கு 45 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு வந்தது.

    இந்த பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மதியாணி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கருப்பையா (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல்நிலையம் அருகே வரும்போது டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    உடனே அவர் பஸ்சை மெதுவாக இயக்கி வந்து சிங்கம்புணரி பஸ் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தினார். பின்னர் கண்டக்டரிடம் நெஞ்சு வலிக்கிறது. அரசு மருத்துவ மனைக்கு போகலாம் என கூறிய டிரைவர் சிறிது நேரத்தில் ஓட்டுநர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்த பயணிகள் ஆட்டோவை வரவழைத்து அருகில் உள்ள சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் டிைரவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் சாமர்த்தியமாக பஸ்சை மெதுவாக இயக்கி பயனிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் கருப்பையாவிற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூரோடு ரெயில் நிறுத்தப்பட்டது.
    • காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த நிலைமை நீடித்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூ ரோடு ரயில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து அதில் இருந்து இறங்கிய பயணிகளில் 25-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே போலீசாரிடம் முறையி ட்டனர்.

    எங்களுக்கு காரைக்கால் வரை செல்வதற்கு டிக்கெட் கட்டணம் வசூலி க்கப்பட்டுள்ளது.

    ஆனால் தஞ்சாவூரோடு ரயில் நிறுத்தப்பட்டது என்றனர்.

    அதற்கு போலீசார், பராமரிப்பு பணியால் இரண்டு வாரங்களாக திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் காரைக்கால் செல்லாமல் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது.

    பணிகள் சில நாட்களில் முடிவடைந்து விடும். பின்னர் வழக்கம்போல் காரைக்கால் வரை செல்லும். உங்களுக்கு தஞ்சாவூரில் இருந்து வேறு நேரங்களில் செல்லும் காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.

    வேண்டுமென்றால் நீங்கள் கவுண்டரில் சென்று மீதமுள்ள பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.

    இதைத் தொடர்ந்து அந்த பயணிகள் கவுண்டரில் சென்று மீதம் பணத்தை வாங்கிக் கொண்டு காரைக்கால் சென்றனர்.

    • கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதால், இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். ஏற்காட்டின் ரம்மியமான சூழலையும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும், சிலு சிலு காற்றையும் அவர்கள் அனுபவித்து மகிழந்தனர். மேலும் இங்குள்ள பூங்காக்களை கண்டுகளித்தும், ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதூகலித்தனர்.

    வெயிலின் தாக்கமில்லாமல் நிலவும் அருமையான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள வண்ண மலர்களையும், அண்ணா பூங்காவில் உள்ள வண்ணமயமான மலர்களையும், லேடிசீட், பக்கோடா பாயின்ட் போன்ற காட்சி முனைகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்தனர். சேர்வராயன் கோவில், ஐந்திணை பூங்கா, பீக்கு பார்க் போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    அதிகமான சுற்றுலா பயணிகளிள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. சிலர் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், இரவு முழுவதும் காரில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    • திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    • குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடி, பொற்றையடி, சாமிதோப்பு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 48.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், இரணியல், முள்ளங்கினாவிளை, ஆரல்வாய்மொழி, கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் மிதமான அளவு தண்ணீர் பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருவதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அருவியல் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.53 அடியாக இருந்தது. அணைக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு- 1 அணை நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளில் தீவிரம் காட்ட தொடங் கியுள்ளனர்.

    தக்கலை, இரணியல், குலசேகரம், தேரூர், அருமநல்லூர், பூதப் பாண்டி பகுதிகளில் கன்னிபூ சாகுபடிக்கான பணியை தொடங்கி யுள்ளனர்.

    வயல் உழவு பணி மற்றும் நாற்றுப்பாவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • உ.ளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.
    • இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார்.

     கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணி களுடன் சென்னைக்குச் புறப்பட்டு வந்தது. இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலைநடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது.  இதில் பஸ்சில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினர். போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்கிசை கிரேன் மூலம் அப்புற ப்படு த்தும் பணியில்ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் எதிரே ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படு த்தியது. 

    • தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார்.
    • இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி, ஏப்.15-பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள புறகாவல் நிலை யத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி பஸ் பயணிகளுக்கு நீர், மோர், பழசாறு ஆகியவை டி.எஸ்.பி. சபியுல்லா வழங்கி னார். இதில்இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், புஷ்பராஜ், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை பிஸ்மில்லா ஷீ மார்ட் மற்றும் விகேசி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

    • சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.
    • ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாளாக அமைந்துள்ளது.

    இதனால் சேலத்தை அடுத்த ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. ஒரே நேரத்தில், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்ததால், மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து செல்வது போல நின்றன.

    உற்சாகம்

    ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் மலர் செடிகளையும் இயற்கையையும் ரசித்து உற்சாகம் அடைந்தனர்.

    பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், மஞ்ச குட்டை காட்சி முனை, சேர்வராயன் கோவில் உள்பட பல இடங்களுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர்.

    மேலும் கிளியூர் நீர்வீழ்ச்சி, மஞ்சக்குட்டை அடுத்த நல்லூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களிலும் ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனைவாரி முட்டல் ஏரி

    இதேபோல், ஆத்தூர் அடுத்த ஆனைவாரி, முட்டல் சுற்றுலா தலத்திலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்திருந்தனர். முட்டல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் ஆனைவாரி முட்டல் அருவியில் கொட்டும் குளிர்ச்சியான நீரில் பலரும் நீராடி மகிழ்ந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால், அருவியில் குளிக்க பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிலும் நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பூங்காவுக்கு வந்து பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.

    • திருப்பூரில் தற்போது 3 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • தென் மாவட்டங்களுக்கு கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பூர் :

    தென் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் திருப்பூருக்கு பனியன் கம்பெனி உள்ளிட்ட தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வேலை தேடி வருகிறார்கள். இங்கு வேலை பார்ப்பவர்கள் மாதம் முதல் வாரத்தில் மட்டுமல்ல தினந்தோறும் சொந்த ஊர்களுக்கு போவதும் வருவதுமாக உள்ளனர். திருப்பூரில் தற்போது 3 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களுக்கு கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பூரில் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டத் தொடங்கிய உடன் பஸ்கள் நிறுத்த போதிய வசதி இல்லாத காரணத்தால் திருப்பூர் பி. என்., ரோட்டில் புதிய பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கே கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து உருவாக்கப்பட்டது. அதே போன்று தான் கோவில்வழி பஸ் நிலையம் அமைக்க ப்பட்டு தென் மாவட்டங்க ளுக்கு பஸ் வசதி செய்யப்ப ட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், பண்டிகை நாட்களில் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவுமே மாவட்ட நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவில்வழி பஸ் நிலையம் கூரை சீட் போடப்பட்டு தற்காலிக ஏற்பாடாகவே அமைக்கப்ப ட்டுள்ளது. இரவில் பயணிகள் அச்சமின்றி அமர போதிய மின் விளக்குகள் இல்லை. போதிய இருக்கைகளும் கிடையாது. மழை பெய்தால் ஒதுங்கி நிற்க வேறு இடமும் கிடையாது. வெயில் காலத்திலும் அமர முடியாது. தாராபுரம், பழனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் தான் அதிகளவில் வருகிறார்கள். போதிய குடிநீர் வசதியோ, மின் விளக்கு வசதியோ இல்லை. பேருக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளது . பஸ் நிலையத்திற்குள் இருட்டாக இருப்பதால் அதனை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் குடிப்பதும், தகாத செயல்களிலும் ஈடுபடுகிறா ர்கள். இதனால் பெண் பயணிகள் மட்டுமல்ல ஆண் பயணிகளும் எப்போது பஸ் வரும் என்று அவஸ்தையுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    மேலும் இது குறித்து தென் மாவட்ட பயணி ஒருவர் கூறுகையில்;- நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்கிறேன். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்சுகள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. இங்கு இரவில் போதிய மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் நிழற்குடையில் அமர முடிவதில்லை. கிடக்கும் ஓரிரு இருக்கைகளை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து கொள்கிறார்கள். பஸ் வரும் வரை நிற்க வேண்டிய நிலை உள்ளது. பெரிதாக இங்கு கடைகளும் இல்லை. ஆகவே உணவு உள்ளிட்டவை பெரிதாக பயணிகளுக்கு கிடைப்பதில்லை. அரசு அறிவித்துள்ளது போல நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையத்தை விரைந்து அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் போன்றவையும் உள்ளன.
    • அணை பூங்கா போதிய பராமரிப்பின்றி கிடந்தது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகள், பஞ்சலிங்க அருவி, அமணலிங்கே ஸ்வரர் கோவில், அமராவதி முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணி கள் பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்தில் உள்ள தடாகத்தில் குளித்து மகிழ்வார்கள். நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் போன்றவையும் உள்ளன. அங்கு பெரிய அளவில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமராவதி அணை பகுதியில் முதலை பண்ணை உள்ளது. இதனை தவிர சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவை சுற்றுலா பயணிகள் கண்டு ஏமாற்றமடையும் நிலை இருந்தது. அணை பூங்கா போதிய பராமரிப்பின்றி கிடந்தது. மேலும் அனை வரும் விரும்பி பார்க்கும் முதலைப்ப ண்ணை போதிய வசதிகள் இன்றி இருந்தது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமராவதி நகர் முதலை பண்ணையில் வனத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு ள்ளன. அமராவதி முதலைப் பண்ணை 1975-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அமராவதி அணையில் இருந்து வெளியேறும் முதலைகள் பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கும் பணி தொடங்கியது.

    இவை நன்னீர் இனத்தை சேர்ந்த முதலைகள் ஆகும். இங்கு மொத்தம் 90 முதலைகள் உள்ளன. 13 வயது முதல் 48 வயது வரை உள்ள முதலைகள் வயது க்கேற்றவாறு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனி தண்ணீர் தொட்டிகளில் விடப்ப ட்டுள்ளன. முதலைகள் ஒன்றுக்கொன்று சண்டையி டுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு பிரித்து விடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த காலங்க ளில் ஒரே வயது டைய முதலைகள் சண்டை யிட்டு ரத்தக்களரியான சம்பவ ங்களும் நடைபெற்று ள்ளது.

    இந்நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்ட முதலை பூங்காவில், கழி வறை வசதி, அமர்ந்து இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில் இருக்கை கள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பசும்புல் தரைகள் அமைக்க ப்பட்டுள்ளன. சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் முதலைகளை பார்வையிட வசதியாக பாதுகாப்பான முறையில் உயரமான கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணையில் ஆங்காங்கே யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகள், அரிய வகை பறவைகளின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. மேலும் கேரளாவைச் சேர்ந்த ஓவியர் மூலம் முதலை பண்ணையின் சுவர்களில் விலங்கு, பறவையினங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு, அவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில் அமராவதி வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் முதலை பண்ணைக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.

    இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறுகையில்:- பண்ணையில் பெரிய மற்றும் சிறிய முதலைகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளுடன் பொழுது போக்குவதற்கு ஏராளமான வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. குடும்பத்துடன் இங்கு வந்து செல்ல ஏற்ற இடமாக உள்ளது. மிக குறைந்த கட்டணமே வசூலி க்கப்படுகிறது. அமராவதி அணை பூங்காவில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முதலை பண்ணை பயனு ள்ளதாக உள்ளது. கோடை விடுமுறையில் குழந்தை களுடன வந்து கண்டு களிக்கலாம் என்றனர்.

    • கோயில்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர்.
    • சிறப்பு பேருந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் பயணிகள் மிக குறைந்த அளவே இருப்பதால் பஸ் இயக்குவது நிறுத்தப்படு கிறது. வார நாட்களில் கூட்டம் இல்லாத நிலையில் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் முயல்வதால் அனைத்து பஸ்களும் நிரம்பியே செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமா னோர் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் குவிந்தனர். போக்குவரத்து அதிகாரிகள் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கிவந்தனர். இந்தநிலையில் நேற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்கோவில், மேட்டுப்பாளையம் வனப த்ரகாளியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோயி ல்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை கோவிலுக்கு சிறப்பு பேரு ந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பஸ் பற்றாக்குறை ஏற்பட்டு கோவில்வழி பஸ் நிலையத்தில் தென் மா வட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பஸ் இல்லாமல் காத்திரு க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பஸ் வசதி செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். இதனை யடுத்து 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தென் மாவட்டங்களுக்கு முக்கியமான நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என ெதன் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.
    • புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்தி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பி னர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    ஜெகதீஷ் (துணை தலைவர்):

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் மாணவர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மண்பானையில் குடிநீர் வைக்க வேண்டும்.

    ஞானசேகரன் (சிபிஎம்):

    நத்தப்பள்ளம் முதல் செம்பியவேளூர் வரை உள்ள பழுதடைந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ரம்யா, முத்துலட்சுமி, தீபா ஆகிய 4 உறுப்பினர்களும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    மாசிலாமணி (தி.மு.க.):

    கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள பிலாற்றங்கரையின் இருபுறமும் மண்சாலையாக உள்ளது.

    இதை தார்சா லையாக மாற்றி தர வேண்டும்.

    உதயகுமார் (தி.மு.க.):

    தமிழக அரசு குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு முன்பு ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பிறகு வழங்க வேண்டும்.

    கஸ்தூரி குஞ்சையன் (தி.மு.க.):

    வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் புதிதாக பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

    தமிழரசி (தலைவர்):

    உறுப்பினர்களின் கோரிக்கை களை முன்னுரிமைகளின் அடிப்படையில் படிப்படி யாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×