search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175048"

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி, பிப்.26-

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர். கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவர த்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி அடைந்தனர்
    • பல பயணிகள் நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர்

    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. கொப்பனாபட்டி தேனிமலை, கருகப்பூலாம்பட்டி, காரையூர், கீழத்தானியம். மேலத்தானியம் , இலுப்பூர், விராலிமலை வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டிய அந்த பேருந்தானது, தேனிமலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பெரும் சத்தத்துடன் குலுங்கி உள்ளது. சத்தம் கேட்டு பயணிகள் திகிலடைந்த நிலையில் பேருந்தை எப்படியோ டிரைவர் நிறுத்தி உள்ளார்.

    பேருந்தில் உள்ள பயணிகள் அவசர அவசரமாக இறங்கி சாலைக்கு ஓடி உள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவரும், கண்டக்டரும் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்து ஓடுவதற்கு இன்ஜினும், சக்கரத்தையும் இணைக்கும் சென்ட்ரல் ஜாயிண்ட் உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. இந்த நீண்ட இரும்பு ஜாயிண்ட் ஆனது சாலையில் குத்தி இருந்தால் பேருந்தை கவிழ்த்து இருக்கும். நல்லவேளையாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து டிரைவரும், கண்டக்டரும் நிம்மதி பெரு மூச்சு விட்டு உள்ளனர்.

    இதுவரை நடந்த சம்பவங்கள் பேருந்து பயணிகளுக்கு நிம்மதி பெருமூச்சு விட செய்தாலும், அதற்கு அடுத்து நடந்ததுதான், தொடர்ந்து பெருமூச்சு விடச்செய்துள்ளது.தேனிமலை ரோட்டில் நின்று கொண்டிருந்த பேருந்து பயணிகளுக்கு வேறு பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் டிரைவரும், கண்டக்டரும் சென்று விட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற பயணிகள் அந்த வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்த முயன்றுள்ளனர்.

    ஆனால்கைக்காட்டிய பயணிகள் இடையே டிரைவரும், கண்டக்டரும் இல்லாததை கண்டு வந்த பேருந்து டிரைவர்களும் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் பல பயணிகள் நடராஜா சர்வீஸ்தான் நமக்கு துணை என்ற படி மூட்டை முடிச்சுகளை துாக்கிக்கொண்டு நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பொன்னமராவதியில் ஓடும் பல அரசு பேருந்துகள் இப்படி பிரேக் டவுன் ஆகி வழியில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் போக்குவரத்து அலுவலகம் விழித்துக்கொள்ளும் என்றால் அதற்கும் பொதுமக்கள் தயார் என்று கூறினர்.


    • கூடுதல் இருக்கை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரில் அன்னூர் காமராஜர் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த பஸ் நிலையம் கடந்த 2000-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையமானது கோவை, திருப்பூர், நீலகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி, கர்நாடகா–விற்கு செல்லும் தேசிய நெடுஞ்சா–லையின் ஜங்ஷனாக அமைந்துள்ளது.

    இந்த அன்னூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, சத்தி உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கும், அன்னூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் என நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்சில் பயணிக்க கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான கோவை, மேட்டுப்பாளையம் போன்ற முக்கியமான நகரங்களுக்கு செல்வதற்கு என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் கூட்டமாகவும், பரபரப்பாகவும் இயங்கி கொண்டிருக்கும்.

    கூட்டம் அதிகமாக இருந்தாலும், பயணிகள் வருகைக்கு ஏற்ப பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லை. குறைந்த அளவிலேயே இருக்கை வசதி உள்ளது. இதனால் பயணிகள் பஸ் வரும் வரை நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகமான பயணிகள் கூடுவதால், அவர்கள் இருப்பதற்கு இருக்கை இல்லாததால் தரையில் அமரும் நிலையும் காணப்படுகிறது.எனவே இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சேவை மூலம் 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயனடைந்துள்ளனர் என இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்
    • புதிய விமான நிலைய முனைய கட்டுமான பணி–யானது நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலை–யத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலைய இயக்குனர் சுப்பி–ரமணி தேசியக் கொடி–யினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிய–தாவது:- திருச்சி விமான நிலை–யத்தில் உள்நாட்டு விமான சேவைகளில் கடந்த டிசம்பர் மாதம் வரை 3 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர்.

    மொத்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணி–கள் உட்பட 12 லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயன்பெற்றுள்ளனர். திருச்சி விமான நிலை–யத்தில் இருந்து இயக்கப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை 10,000 எனவும் இவை தவிர திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கமான டாக்ஸி ட்ராக் பணி நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் கார்கோ பிரி–வில் கடந்த டிசம்பர் மாதம் வரை 4,947 மெட்ரிக் டன் பொருட்கள் கையா–ளப்பட்டுள்ளது. மேலும் புதிய விமான நிலைய முனைய கட்டுமான பணி–யானது நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

    இந்த புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2900 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலை–யத்தின் பாதுகாப்பில் முழு அக்கறையுடன் பணி–யாற்றி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை–யினர், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் அனை–வருக்கும் நன்றி தெரி–வித்தார். விழாவில் மத்திய பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.

    இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள்,அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால்,பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக பஸ் நிலையத்தில் பொது மக்கள் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும்போதும், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் மொபைல் போன்களை திருடி செல்கின்றனர்.

    கடந்த இரு வாரங்களில் தினமும் ஒரு மொபைல் போன் திருட்டு போகிறது. அவசர,அவசரமாக பஸ்சில் ஏறுபவர்களிடம் மொபைல் போன்கள் திருடப்படுகிறது. சிலர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கின்றனர். நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர். 

    • விவேகானந்தர்மண்டபத்துக்கு படகில் செல்ல நீண்ட வரிசையில் நின்றனர்
    • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இaந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வந்து குவிந்த னர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி யில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணி களும் அய்யப்ப பக்தர்களும் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

    காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டு வந்தனர்.சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்தி ருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காம ராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.

    சேலம்:

    தமிழகத்திலேயே மிகப் பெரிய அணை மேட்டூர் அைண ஆகும். அணையில் தண்ணீர் 120 அடி எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அணையை சுற்றிலும் மலைகள் உள்ளது. இந்த மலைகளை ததும்பியபடி தண்ணீர் காணப்படுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    இந்த அணையை பார்க்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதுபோல் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடு–மு–றை– விடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக மேட்டூர், ஏற்காடு, கொல்லிமலைக்கு படையெடுக்கின்றனர்.

    மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டி காணப்படுகிறது.

    ஏற்–காட்–டில் உள்ள படகு இல்–லம், ரோஜா தோட்–டம், லேடீஸ் சீட், தாவரவியல் பூங்கா, ஜென்ஸ் சீட், சேர்–வ–ரா–யன் மலைக்–கோ–வில், அண்ணா பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, மேட்டூர் அணை, மேட்டூர் பூங்கா, கொல்லிமலை தோட்டக்கலை தோட்டம், மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், அன்னாசி பழத்தோட்டங்கள், வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். பூக்கள் முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள ஊஞ்சல்கள், சறுக்கு விளையாட்டுகளில் விளையாடி மகிழ்ந்தனர்.

    சுற்றுலா தலங்களில் தற்போது அவ்–வப்–போது மழை பெய்–து வருவ–தால் குளிர் நில–வி– பசுமை போர்த்தியதுபோல் மேக கூட்டம் மலைகளை சூழ்ந்து காணப்படுகிறது. இத–னால் சுற்–றுலா பய–ணி–கள் சுவர்ட்–டர் அணிந்து சென்–றதை பார்க்க முடிந்–தது.

    சுற்–றுலா பய–ணி–கள் வரத்து அதி–க–ரிப்–பால் கடை–கள், ஓட்–டல்–களில் விற்–பனை படு–ஜோ–ராக நடைபெறுகிறது.

    • நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருத்துறைப்பூண்டி:

    திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரு பஸ்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்வது வழக்கம்.

    திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு செல்ல இந்த இரு பஸ்களை தான் நம்பி உள்ளனர்.

    அப்படி இருக்கும் வகையில், இந்த பஸ்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.

    இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

    தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இனி இந்த இரு பஸ்களும் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்துக்குள் வரும் என உறுதி அளித்தததன் பேரில் பொதுமக்கள் பஸ்வை விடுவித்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
    • ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் மிகப் பழமையான ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தஞ்சை ரெயில் நிலையம் கடந்த 2-12-1861-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரெயில் சேவை வழங்கி வருகிறது.

    இன்றுடன் தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதனை கொண்டாடும் வகையில் இன்று தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பார்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே சீப் கமர்சியல் இன்ஸ்பெக்டர் மோகன், ரயில்வே நிலைய அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் கண்ணன், வழக்கறிஞர்கள் உமர் முக்தர், முகமது பைசல், பேராசிரியர்கள் திருமேனி, செல்ல கணேசன், பாபநாசம் ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சரவணன், நிர்வாகிகள் சோமநாதராவ், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை- திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் முன்ப திவு இல்லாத ரெயில்களில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல் குறைந்த கட்டணம் வசூலிக்க ப்பட வேண்டும் என்று ரயில் பயணிகளி டமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

    தஞ்சை - திருச்சி வழித்தடத்தில் ஆலக்குடி, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இவை அனைத்தும் கிராமப்புறங்களாகும். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

    இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் விரைவு ரெயில்கள் என்று பெயர் மாற்றப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கொரானா காலத்திற்கு முன்பு விரைவு ரயில் பூதலூர் இருந்து தஞ்சைக்கு ரூ.30 ஆக இருந்தது.

    சாதாரண பாசஞ்சர் ரயில்களில் பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பயணிகள் அவதியநடைந்து உள்ளனர்.

    எனவே கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போல் பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் ரயில்வே ஆணையத்திற்கு குரல் எழுப்ப வேண்டும் என்று திருக்காட்டுப்பள்ளி சமூக ஆர்வலர் கண்ணதாசன் கோரியுள்ளார்.

    • ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
    • கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்யவில்லை.

    விடுமுறை தினமான இன்று ஏற்கட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா ,லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

    ×