என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175121"

    • இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து.
    • மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை அரசு வழங்கிய பொருட்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை ஆகிய விலையில்லா அரசு வழங்கிய பொருட்களை உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன், என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி வழங்கினார்.

    பொறுப்பாசிரியர் ஜே.கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி.மார்க்கண்டன், ச.ஹரிஹரன், ரராகேஷ் ஆகியோர் விலையில்லா பொருட்களை வழங்கும் ஏற்பாட்டினை செய்தனர்.

    • மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், நோட்டுபுத்தகங்கள் நற்பணி மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஒன்றியம், வெண்ணப்புத்தூர் மற்றும் பள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வெண்ணப்புத்தூர் சிகரம்தொடு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக எழுதுபொருட்கள், நோட்டுபுத்தகங்கள் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    நிகழ்ச்சிக்கு மன்ற நிறுவனர் சரவணபிரபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றியகுழு உறுப்பினர் மதுமதி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் செயலாளர் விக்னேஷ், பொருளாளர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், நற்பணி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞர் மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும். தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
    • ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மன்னார்குடியில் நடத்தும் புத்தக திருவிழாவில் 9- நாள் அரங்க நிகழ்ச்சிக்கு சன்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார்.முன்னதாக கே.ஆர்.மதிவாணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புத்தகங்கள் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். நிறைவான வாழ்க்கை வாழ வழி கோலும்.

    ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும்.

    திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட தன்னுடைய அனைத்து குறள்களையும் மிகவும் மென்மையாக தான் எடுத்துரைத்துள்ளார்.

    எங்குமே கடிந்து சொன்னதில்லை ஆனால் அவரே கூட ஒரு குறளில் மிக கடுமையாக கட்டளையாக வலிமையாக கூறுகிறார்.

    கற்க கசடற பின் நிற்க அதற்கு தக என கடுமை காட்டி மனிதர்களை நல்வழி படுத்துபவை புத்தகங்களை என்பதால் இக்குறளை இவ்வாறு எழுதியிருக்கிறார்.

    நூல்கள் கற்க கற்க அறிவு வளரும் ஞானம் பெருகும்.

    முதன்முதலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடி சுதேசி இயக்க முன்னோடியாக கப்பல் விட்டு

    போராட்டம் செய்து செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகம் அளப்பரியதல்லவா அதை நாம் உணர வேண்டும்.

    புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும்.

    தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

    தொட்டுப்பார்த்தால் காகிதம்.

    தொடர்ந்து படித்தால் அதுவே ஆயுதம் என்கிற வகையில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்.

    இதுபோன்ற மன்னார்குடி போன்ற ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவது மிகவும் பாராட்டுக்கு ரியதாகும் என கூறினார்.

    முடிவில் எஸ்.டி.முருகேசன் நள்றி கூறினார்.

    • ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.
    • தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் தான் முதலிடத்தில் வரலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள திட்டுகிராமம் ஆகும். இந்த கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தற்போது வடிந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கி வந்த அரசு உயர்நிலை பள்ளிக்கு கடந்த 10 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று முதல் பள்ளி திறக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை எஸ்பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.

    தொடர்ந்து மாணவருக்கு எஸ் பி நிஷா வினாடி, வினா நடத்தி அதில் முதல் 2 இடத்தில் வெற்றி பெற்ற மாணவருக்கு செஸ்போர்டு பரிசாக வழங்கினார். அவர் மாணவர்களிடம் பேசுகையில் 50 வருடங்களுக்கு முன்பு பெண் அதிகாரிகள் கலெக்டராக எஸ் பி யாக இருக்க முடியுமா என்று நம்மால் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. இன்று எல்லா இடங்களிலும் பெண் அதிகாரிகள் வந்துள்ளார்கள். நம் மாவட்டத்தில் பெண் கலெக்டர், பெண்எஸ்பி, ஆர்.டி.ஓ.வும் பெண் பெண்ணாக இருக்கிறார்.

    மாணவர்கள் எல்லோரும் சொந்தமாக முயற்சி செய்ய வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது நான் வெற்றி பெறுவேன் என்ற முடிவெடுக்க வேண்டும். தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் முதல் இடத்தில் வரலாம்.

    அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்றார். சீர்காழி டி.எஸ்.பி பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவராகவன், விவசாய சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ் லோகநாதன் மற்றும் போலீசார் பெற்றோர் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.
    • மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

    திருச்சி

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி தூய்மை இந்தியா வண்ண மலர் பூங்கா மக்கள் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மக்கள் பணிக்குழு துணைத் தலைவர் திருப்பதி தேசியக்கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்துகிறார். மூத்த சமூக சிந்தனையாளர் புலவர் காசி. விஸ்வநாதன், தேச நலம் மக்கள் சேவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.

    நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் ராஜரத்தினம், ராமலெஷ்மி, ராஜா, செபி முஹமது, வெங்கடேசன், அமீன், வாசுதேவன், புவனேஷன், பூஞ்சோலை, நடிகர் பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், குணசீலன், முஹமது இப்ராஹிம், தியாகராஜன், பிரதிவி, இளங்கோவன், சந்திரசேகர், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

    • மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
    • மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 2-வது மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும். இது தொடர்பாக மன்னார்குடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் புத்தக திருவிழா தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 2-வது முறையாக புத்தக திருவிழா நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவு ஆற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதற்காக தான் புத்தக திருவிழா நடத்துகிறோம். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி பயன் பெற வேண்டும்.

    மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை தானமாக அளிக்கலாம். இதற்காக புத்தக தானம் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    ெமாத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ரூ.40 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. இம்முறை ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, யேசுதாஸ், அன்பரசு, சேதுராமன், பி.ரமேஷ், கோபால், கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மற்றும் பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கை விட ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக திகழ்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை தரக்கூடிய சிலவகை பொருட்களை விற்பனை செய்து வருவதாக வரும் தகவல்களின் அடிப்படையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் முதலமைச்சர் வருகிற 10-ந் தேதி அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலனை பாதுகாக்கின்ற வகையிலும், போதையில்லா தமிழகத்தை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில், கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.

    மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனதை சோர்வடையாமலும் மற்றும் மன தைரியத்துடன் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்த வேண்டும். குறிப்பாக, முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட ''நான் முதல்வன்'' திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதன்மூலம் எதிர்காலத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும், வாழ்க்கையின் உயர்ந்த நிலையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல்களையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தககங்களை, இந்த கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், உதவி ஆணையர் (ஆயம்) கண்ணகி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசி–ரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதை புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
    • மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வசந்தாஇல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும்த ன்னார்வலர்கள் மைய ங்களுக்கு, வரும் மாணவர்களுக்கு கதை சொல்லிக் கொடுப்பதற்கான கதைப் புத்தகங்களை தனது சொந்த செலவில் வாங்கி பரிசளித்திருக்கிறார் .

    நாகப்பட்டினத்தில் ஜூன் 24-ம்தேதி முதலாவது புத்தக கண்காட்சி தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியைச் சிறப்பித்தனர். முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை இந்த பகுதி மக்கள் வெகுவாக ரசித்து பெருமளவில் புத்தகங்களை வாங்கி சென்றனர். அந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் புத்தகக் கண்காட்சியில் புத்தகமும் வாங்க வேண்டும், அது மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று சிந்தித்த அண்டர்காடு பள்ளி ஆசிரியை வசந்தா, தன்னுடைய சொந்த செலவில் ரூ 30,000த்துக்கு 2500 கதை புத்தகங்கள் வாங்கினார். ஆசிரியை வசந்தா மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த சுமார் 5 லட்சம்மாஸ்க்உள்ளிட்ட பல்வேறு தேவைகளைத் தொடர்ந்து தனது சொந்த செலவில் செய்து வருகிறார். இந்த புத்தகத் திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

    நேற்று முன்தினம்இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 2365 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் தலா ஒரு கதை புத்தகம் வீதம் வழங்கிடுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்விடம் வழங்கினர்

    அவற்றை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வழங்கினார்.

    இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் பால இரணியன், வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கதைப் புத்தகங்களை வழங்கிய ஆசிரியர் வசந்தாவுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

    • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
    • முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்துறையினர் இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டாயி ரத்தை தாண்டி விட்ட தால் அனைத்து மாவட்ட ங்களிலும் தகுந்த முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முககவசம் அணிய உத்தர விட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் சில தினங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று தஞ்சை மாநகரில் மட்டும் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முககவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா , தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் கபிலன் ஆகியோரது அறிவுரையின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சை ஜோதி அறக்க ட்டளை சார்பில் அரசு உத்தரவை பின்பற்றி முககவசம் அணிந்து வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு இனிப்பு மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதனமுறையில் விழிப்புணர்வை ஏற்படு த்தும் நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

    இதில் தஞ்சை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் , தஞ்சை மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா , தஞ்சை கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் , ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அரசு உத்தரவை பின்பற்றி முககவசம் அணிந்து வந்த பொதுமக்கள் , வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு நோய் பெருந்தொற்று பற்றியும் நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுரை கூறியும் இலவசமாய் முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முககவசம் அணியாமல் அல்லது தனிநபர் இடைவெளியை கடைபிடி க்காமல் வருபவர்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்து முககவசம் வழங்கி வருவதாகவும் அடுத்த கட்டமாக கடும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்து றையினர் இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பார்த்த பொதுமக்கள் இந்த நூதன முயற்சியை பாராட்டினர்.

    ஏற்பாடுகளைஜோதி அறக்கட்டளை மேலா ளர் ஞானசுந்தரி மேற்பா ர்வையில் அறக்கட்டளை களப்பணி யாளர்கள் சிவரஞ்சனி, அபர்ணா மற்றும் தன்னா ர்வலரான தஞ்சை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர் . 

    • கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க.குழந்தைவேலு தலைமை வகித்தார்.
    • இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவியர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க .குழந்தைவேலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுரு.பாண்டியன் , பள்ளிக் குழுத் தலைவர் தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராமன்,பள்ளியின் முகவர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருமன்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, தலைமையாசியர் (பொ) உஷா, ஆசிரியர்கள் சத்தியசிவம், தருமலிங்கம், பூமிநாதன், கார்த்திகேயன், கவிஞர் கெளதம் - சுகிதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
    • நோட்டு புத்தகங்கள் இன்றே வழங்கப்பட்டது

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் தங்களது இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர்.

    இதனால் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகள் முன் பெற்றோர் திரண்டி ருந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வர வேற்றனர். ஒரு சில அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று ஏராளமான மாணவ-மாணவிகள் சீருடைக்கு பதிலாக புத்தாடை அணிந்து வந்திருந்தனர். அவர்களை விரைவில் சீருடை அணிந்து வரும்படி ஆசிரியர்கள் கூறினர். ஒரு சில பள்ளிகளில் வழக்கம் போல சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அதே சமயம் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் தங்களது பெற்றோரை விட்டு பிரிய முடியாமல் அழுதனர். பள்ளிக்குப் போக மாட்டேன் என்று கூறி அழுததையும் பார்க்க முடிந்தது. அந்த மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் சிறிது நேரம் ஆறுதல் கூறி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளிகள் திறக்கப்பட்ட தை தொடர்ந்து வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பஸ்களிலும் மாணவ-மாணவிகள் கூட்டமே அதிகமாக இருந்தது. இரணியல், மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்த கங்கள் மற்றும் நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த சில தினங்க ளுக்கு முன்பே அந்தந்த பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்த கங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் இன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    அதுவே தனியார் பள்ளி மாணவ-மாணவி களுக்கு பள்ளி திறப்ப தற்கு முன்பாகவே பாட புத்தகங்கள் வழங்க ப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் வந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேப் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை, ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் போக்கு வரத்தை சீரமை க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தோவாளை அருகே உள்ள விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று மாணவ-மாணவிகள் வருகையினை முன்னிட்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமாரி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் விஜேஷ் வரவேற்று பேசினார்.தொடக்கப்பள்ளி கல்வி துறை அலுவலர் லதா, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன், சகாய நகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி பின்னர் பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதுடன் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

    மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய ‘மீஷா’ புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #Meesha
    புதுடெல்லி:

    மலையாள எழுத்தாளரான ஹரீஸ், மாத்ரூபூமி இதழில் ‘மீஷா’ என்ற தொடரை எழுதி வந்தார். சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டது. பின்னர், இந்த தொடர் புத்தகமாக வெளிவந்தது. இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    புத்தகத்தில் கோயில் பூசாரிகள் மற்றும் இந்துப் பெண்களின் நிலை குறித்து மோசமாக சித்தகரித்து இருப்பதால் இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த காலத்தில் இது போன்ற விசயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எழுத்தாளர்களின் கற்பனைத் திறனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது அதே போல் இலக்கியப் படைப்புகளை தடை செய்யவும் இயலாது என்று கூறி உத்தரவிட்டனர்.

    இதுவரை ராசவித்யாயுடே சரித்ரம், ஆதாம், அப்பன் என்ற மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள ஹரீஸ், ஆதாம் புத்தகத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×