search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • மரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் பாபநாசத்தை கொட்டியது.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் பாபநாசம் இறந்துவிட்டார்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபநாசம்(வயது 69). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள புளியந்தோப்புக்கு சென்று புளி பறித்துக்கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் பாபநாசத்தை கொட்டியது. இதனால் வலியால் துடித்த அவரை, உறவினர்கள் அங்குள்ள ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால் அதற்குள் பாபநாசம் இறந்துவிட்டார். இதுதொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள புளியமரங்களில் உள்ள கடந்தை கூடுகளை ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் தேடி கண்டுபிடித்து அகற்றி வருகின்றனர். 

    • திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும்.
    • ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும்.

    திருப்பூர் :

    விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் கணிசமான வருமானம் ஈட்டி வருகின்றனர். மழை குறைவாக பெய்யும் காலங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழையே அதிக மழைப்பொழிவை தரும். ஆடி மாதத்தில் வறண்ட வானிலை காணப்படும். இதனால், புல்வெளிகள் காய்ந்து பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் ஆடி மாதத்தில் நல்ல மழை பெய்தது. இது புல்வெளிகளை செழிப்படையச் செய்துள்ளது. கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ந்துள்ளது. தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்.

    உடுமலை :

    தமிழக அரசு வழிகாட்டுதல்படி தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தோட்டக்கலைத்துறை வாயிலாக இந்தாண்டு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள் பயன்பெறலாம். உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.

    வார வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்.வருகை பதிவேடு பராமரிக்கப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு 30 நாட்களுக்கான போக்குவரத்து செலவாக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பெண்கள் ,ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சியானது முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் நாளை 26ந் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மல்பெரி செடிகளில் இருந்து ஆண்டுக்கு, 6 முறை தண்டு மற்றும் இலைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.
    • ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ பறிக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நிலைப்பயிராக பயிரிடப்படும் மல்பெரி செடிகளில் இருந்து ஆண்டுக்கு, 6 முறை தண்டு மற்றும் இலைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.சராசரியாக ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ பறிக்கப்படுகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்படுவதால் செடிகளுக்கு அதிக அளவு நுண்Èட்டம் உள்ளிட்ட சத்துகள் தேவைப்படுகிறது.செடிகளுக்கு தேவையான உரங்களை அளிக்காவிட்டால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு இலைகளின் தரம் குறையும். தரமற்ற இலைகள் பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளிப்பதால், புழுக்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், தரமற்ற கூடுகளும் உற்பத்தியாகிறது.

    எனவே மல்பெரி தோட்ட பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் தொழு உரம் இடும் பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

    மல்பெரி தோட்டங்களை பராமரிக்கும் விவசாயிகள், மண் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனையில் மண்ணின் கார அமிலத்தன்மை, மின் கடத்து திறன், கரிம கார்பன் அளவு, பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகிய தன்மைகளின் அளவுகள் கண்டறியலாம்.இதன் அடிப்படையில் நுண்Èட்டசத்து மற்றும் பேரூட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப உரமிடலாம். மண்ணில் குறைபாடுள்ள சத்துகளை மேம்படுத்தினால் தரமான இலைகளை உற்பத்தி செய்ய முடியும் என கோவை வேளாண் பல்கலைக்கழகமும் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

    • பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    • மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது.

    உடுமலை :

    பருத்தி,நூல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்ததால் ஒட்டு மொத்த ஜவுளி துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதை சமாளிக்க அரசு வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது அங்கும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.உள்நாட்டில் பருத்தி சாகுபடி அதிகரிக்காவிட்டால் ஒட்டுமொத்த ஜவுளி துறையும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

    உலக அளவில் நம் ஏற்றுமதி வாய்ப்பு பறிபோய் விடும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அரசு பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர்கள் முன்பு 10 மணி நேரம் வேலை பார்த்தனர். தற்போது 6மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். கடின வேலை என்பதால் ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது. தற்போது ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு வெளியில் தான் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பால் பருத்தி சாகுபடியை தவிர்த்து வருகிறோம். எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளை அரசு பாதிக்கும் மேல் இறக்குமதி செய்கிறது.

    இதனுடன் பருத்தியும் இணைந்துள்ளது. விலை உயராமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. தொடர் நஷ்டம் வருவதால் நாங்களும் உற்பத்தியை குறைக்கிறோம்.இதனால் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கியுள்ளது. அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தாலே பருத்தி சாகுபடி உயர்ந்து விடும் என்றனர்.

    • பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
    • கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    உடுமலை :

    கத்தரி,மிளகாய் நாற்று தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாயிகளுக்கு தேவையான கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247-27052, சித்தேஸ்வரன் 88836-10449, காயத்ரி 63790-62232, ராஜ்மோகன் 95854-24502 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • பி.ஏ.பி., பாசனத்தில் 8 டி.எம்சி. அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

    திருப்பூர் :

    பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம், பேரணி என விவசாயிகள் நடத்தி வரும் நிலையில், வரும் 25-ந் தேதி திருப்பூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் மூலம் 8 தொகுப்பணைகள் மூலம் நீர் சேமிக்கப்பட்டு பாசனத்துக்கு திருமூர்த்தி அணை மற்றும் ஆழியாறு அணை மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பி.ஏ.பி., பாசனத்தில் 8 டி.எம்சி. அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன் சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல பி.ஏ.பி. பாசன பகுதியில் இருந்து அத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு டெண்டரும் கோரப்பட்டுள்ளது. இது திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரு மாவட்ட பி.ஏ.பி. பாசன விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்த கூடாது .தண்ணீர் கொண்டு செல்வதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தில் முன்பு 9 சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 4 சுற்றுகளுக்கு வந்துள்ளது. முன்பு 120 நாட்கள் பாசனம் பெற்ற பகுதிகள் இன்று 20 நாட்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது.

    பி.ஏ.பி. பாசனம் 3 நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும்.10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 12 லட்சம் விவசாயிகள் பி.ஏ.பி. யை நம்பி உள்ளனர்.மேலும் பி.ஏ.பி. மூலம் நீர் பெற உரிமை உள்ள உப்பாறு அணைக்கு வருடந்தோறும் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது‌.

    இதேபோல் வெள்ளகோவில் அருகே உள்ள வட்ட மலைக்கரை ஓடை தடுப்பணைக்கு தர வேண்டிய உரிமை நீரும் மறுக்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த 22ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டுதான் தண்ணீர் பி.ஏ.பி. யில் இருந்து வழங்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆறுகள் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ள நிலையில், 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்க அவசியமேயில்லை. ஆனால் அங்கு அமைய உள்ள தொழிற்பேட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்லவே இத்திட்டம் செயல் படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிகிறது.

    • திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ஏராளமான போலீசார் எல்லைகளில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி :

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் (மகா பஞ்சாயத்து) நடத்த முடிவு செய்துள்ளனர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் இதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.

    இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அத்துடன் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசாரை எல்லைகளில் காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.

    மேலும் ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத் கிசான் மோர்சசா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் நேற்று ஜந்தர் மந்தர் சென்று கொண்டிருந்தார்.

    அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார், பின்னர் கைது செய்து மது விகார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

    போலீசாரின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் போராட்டக்களம் செல்லாமல் திரும்பி சென்றார். எனினும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

    திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அய்ய னார் (வயது 66), விவசாயி. இவரது தம்பி பச்சையப்பன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அருகருகே உள்ளது.

    இந்த நிலையில் அய்ய னார் வயலில் இருந்த வேலியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பச்சையப்பனின் மகன் அய்யனார் (25) பெரியப்பா அய்யனாரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து இரவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை அய்யனார் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது தம்பி மகன் அய்யனார் அங்கு வந்து தனது பெரியப்பா வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அய்யனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு ) சின்னசாமி கூறியதாவது:- பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் விதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வேளாண்மை இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இதுவரை பதிவு செய்த தேதியின் அடிப்படையில், 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 12வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 524 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 55 ஆயிரத்து 251 விவசாயிகள் ஜூலை 31 ந் தேதிக்குள் 'இ-கே.ஒய்.சி.,' முறையில் ஆன்லைன் மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.பெரும்பாலான விவசாயிகள் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய அரசு, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது.ஆதார் விவரங்களை இ-சேவை மையத்தில், கிராம தபால் நிலையத்தில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.எனவே தவறாமல் 31ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து, புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இதுகுறித்து, கூடுதல் தகவல் பெற அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சி.
    • விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னகுமாரபாளையம் பகுதியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சியாக விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் அரசப்பன், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, விதைச்சான்றுத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த பயிற்சியின் போது குறுகிய வயதுடைய தானியம் மற்றும் தீவனம் என இரட்டைப் பயன்பாடு கொண்டதும் அதிக மகசூல் தரக்கூடியதுமான கோ (எஸ்) 32 ரக சோளத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், விதை நேர்த்தி செய்தல், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரித்து அடியுரம் இடுதல் மற்றும் பூச்சி நோய் நிர்வாகம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் , வியாபாரிகள் எடைக்கல் தராசு பயன்படுத்தி வருவதால் மின்னணு தராசு வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையினை ஏற்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் இன்று காலை உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று மின்னணு தராசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள், வியாபாரிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×