search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

      மடத்துக்குளம் :

      உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்றுப்பாசனத்துக்கும் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, 60 ஆயிரம் ஏக்கர் வரையிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதன் சாகுபடிக்கு தேவையான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

      மண்டல பாசனத்துக்கு பிரதானமாக மேற்கொள்ளப்படும் மக்காச்சோள சாகுபடியில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து படைப்புழு தாக்குதலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வளர்ச்சி தருணத்தில் உள்ள இப்பயிரின் நடுப்பகுதியில் தங்கும் படைப்புழுக்கள், வேகமாக செடியின் ஒட்டுமொத்த பாகங்களையும் சேதப்படுத்துகிறது. குறுகிய நாட்களில் தண்டுப்பகுதி பாதித்து செடிகள் சாய்கிறது.இலைகளையும் துளையிட்டு வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கிறது.புழுக்களை கட்டுப்படுத்த 3 முறை மருந்து தெளித்தும் பலன் இருப்பதில்லை. கதிரிலும் இப்புழுக்கள் சேதம் ஏற்படுத்துகின்றன.ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டை வரை சராசரியாக விளைச்சல் முன்பு இருந்தது. படைப்புழு தாக்குதலுக்குப்பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு 10 மூட்டை வரை விளைச்சல் குறைந்து பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இத்தாக்குதல் குறையாமல் தொடர்கிறது.

      நடப்பு சீசனில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி பொருளாதார சேதத்தை தவிர்க்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளைநிலங்களில், நடவுப்பணிகள் துவங்கும் முன்பே இதற்கான விழிப்புணர்வை துவங்கினால் மட்டுமே திட்டம் பலனை தரும். எனவே வட்டார வாரியாக படைப்புழு தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகளை வேளாண்துறையினர் துவக்க வேண்டும்.உழவு முறை, விதைத்தேர்வு, நடவு முறை, வரப்பு பயிர் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த சீசனிலும் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு பாதிப்பு அளிப்பதாகவே இருக்கும்.

      • விவசாய சாகுபடியில், பார்த்தீனிய செடிகள் அதிக செலவு மற்றும் விரயத்தை ஏற்படுத்துகின்றன.
      • பார்த்தீனிய செடிகளால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

      குடிமங்கலம் :

      உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் பல ஆயிரம் ெஹக்டேரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விவசாய சாகுபடியில், பார்த்தீனிய செடிகள் அதிக செலவு மற்றும் விரயத்தை ஏற்படுத்துகின்றன.விளைநிலங்கள், ரோட்டோரங்கள், குளங்கள், ஓடைகள், தரிசு நிலங்கள் என அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனிய செடிகளால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

      விஷ செடியான பார்த்தீனியம் மனிதர்களுக்கு, அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்கு காய்ச்சல், அரிப்பு மற்றும் நச்சுத்தன்மையால் மறு உற்பத்தி திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.விளைநிலங்களில், சாகுபடிக்கு முன் இச்செடிகளை அகற்றவே, பல ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

      செடிகளை கட்டுப்படுத்த வீரியம் மிகுந்த களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் வளமும் பாதிப்பிற்குள்ளாகிறது.செடிகளை அகற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக அரசு நடவடிக்கை எடுத்தது. ரோட்டோரங்களில், இருந்த பார்த்தீனிய செடிகளை ஆட்களை கொண்டு அகற்றி, அங்கு களைக்கொல்லி தெளிக்கப்பட்டது.பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது.

      உடுமலை பகுதியில் தொடர் மழைக்குப்பிறகு, செடிகளின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உள்ளது.பார்த்தீனிய செடியில், ஒவ்வொரு பூங்கொத்திலும், நான்கு விதைகள் காணப்படும். இவ்விதைகள் நான்கே வாரத்தில், நிலத்தில் விழுந்து, மீண்டும் முளைத்து, மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் உடையவை.அதிக மழை, வறட்சி என அனைத்தையும் தாங்கி வளரும் தன்மை இச்செடிகளுக்கு உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினைக்கு அரசு சிறப்புத்திட்டத்தை செயல்படுத்தி பார்த்தீனியம் பிரச்சினையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என 3 வட்டார விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

      • 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.
      • 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

      பல்லடம் :

      ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்த்தை ரத்து செய்ய கோரி திருப்பூரில் விவசாயிகள் பேரணி நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி கூறியதாவது:-பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் மூலம் பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,பல்லடம்,உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கும்,பொதுமக்களுக்கு குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம்.

      இங்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இந்தநிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுப்பதால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

      எனவே அந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை 21-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      • தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
      • ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

      உடுமலை :

      உடுமலை பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் அனைத்து சீசனிலும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இதில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதியில் விளைநிலங்களில் பந்தல் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்து காய்கறி சாகுபடி செய்யத்துவங்கினர். பந்தல் காய்கறி சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தென்மேற்கு பருவமழைக்குப்பிறகு தற்போது பரவலாக பந்தலில், பீர்க்கன், புடலை, பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

      ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. பின்னர் சொட்டு நீர் பாசனம் அமைத்து மேட்டுப்பாத்தியில் விதைகளை நடவு செய்கிறோம்.சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒட்டுப்பொறி மற்றும் விளக்குப்பொறி அமைத்து பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கும் முறையை பின்பற்றத்துவங்கியுள்ளோம்.கடந்த சீசனில் தொடர் மழையால் பந்தலில் காய்களை பறிக்க முடியாமல், அழுகி நஷ்டம் ஏற்பட்டது.

      நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது, புடலங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆவணி மாத முகூர்த்த சீசன் துவங்குவதால் பந்தல் காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.நிலையான விலை கிடைக்க பந்தல் காய்கறி விவசாயிகளை ஒருங்கிணைத்து விலை நிர்ணயம் செய்ய, தோட்டக்கலைத்துறையினர் உதவ வேண்டும் என்றனர். 

      • அலங்காநல்லூர் அருகே மனைவி-குழந்தைகளை கொன்ற விவசாயி கவலைக்கிடமாக உள்ளது.
      • இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

      மதுரை

      மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருேக பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் உத்தராஜ். இவரது மகன் முருகன் (வயது 38). இவர் அலங்காநல்லூர் குலமங்கலம் ரோட்டின் அருகில் உள்ள பொம்மாத்தேவர் என்பவருக்கு சொந்தமான கொய்யா தோப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

      அவர் நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதில் அவருக்கு சரியான லாபம் கிடைக்கவில்லை. இதனால் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

      இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகனின் மனைவி சுரேகா, மகள் யோகிதா, மகன் மோகனன் ஆகியோர் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தனர். முருகன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

      இதுபற்றி தகவல் கிடைத்ததும் அலங்கா நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் முருகன், தனது மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்ததாகவும், அதே போல் மகன், மகளையும் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

      இதைத்தொடர்ந்து முருகன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      இந்த சம்பவத்தில் முருகன் கழுத்ைத அறுத்துக்கொண்டதால் அவரது கழுத்து நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவு இழந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

      முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் ஜோதிடர் ஒருவ ருக்கு போன் செய்து அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவ தாகவும், அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் ரூ. 4 ஆயிரம் மட்டும் உள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.

      முருகன் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகி றது.

      • ராகல்பாவி மற்றும் ஆர்.வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது.
      • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

      உடுமலை :

      உடுமலை அடுத்துள்ள போடி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டக்கம்பாளையத்தில் இருந்து ராகல் பாவி மற்றும் ஆர். வேலூர் இணைப்பு சாலை வரை செல்வதற்கு நிலவியல் பாதை உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பாதையை அந்தப் பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அருகில் உள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது.

      இதையடுத்து சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தலின் பேரில் அந்த இடத்தை அளப்பதற்கு வருவாய் துறையினர் போலீசாருடன் அங்கு சென்றபோது, அந்த பகுதியில் பட்டா இடத்தில் இருக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அந்த இடத்தை அளக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அந்த இடத்தை நிலவியல் பாதையாக பயன்படுத்தி வந்த சுமார் 20 விவசாயிகள் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு ஆடு மாடுகள் உடன் வந்தனர். அவர்கள் அந்தப் பாதையை பயன்பாட்டிற்கு மீட்டு தரக்கோரி தாலுகா அலுவலக வளாகத்தில் தரர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். ஆடு மாடுகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் குறிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

      இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் கண்ணாமணி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ,ராஜ் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கனகராஜ், ஜெகதீசன், பாலதண்டபாணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று ஆர். டி. ஓ. ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆடு மாடுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      • தக்காளி பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
      • தக்காளிகளில் நோய், மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், இது போன்ற அடையாளங்கள் காணப்படும்.

      பல்லடம் :

      பல்லடம் கரைப்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தக்காளி பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தக்காளி ஒன்றில் மயில் போன்ற உருவம் இருந்தது.

      இது விவசாயியை வியப்பில் ஆழ்த்தியது.இது குறித்து சேகர் கூறுகையில், வழக்கமாக, தக்காளிகளில் நோய், மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், இது போன்ற அடையாளங்கள் காணப்படும். ஆனால் எனது விளை நிலத்தில் அது போன்ற பாதிப்புகள் இல்லாததால், தக்காளிகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன.இருப்பினும் பழங்கள் பறிக்கும் போது ஒரு தக்காளி மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதில் மயில் போன்ற உருவம் தென்பட்டது. தக்காளி பழத்தில் இது போன்று இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது என்றார்.

      • நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.
      • 5.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கப்பட்டது.

      மடத்துக்குளம் :

      உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை வழங்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

      இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகைக்காக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு, 15.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கியதற்காக கரும்பு பயிடுவோர் சங்கம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் விவசாயிகள் சார்பிலும், ஆலை நிர்வாக குழு, தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார். 

      • பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு செய்து பயனடையலாம்.
      • உயிர்மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

      திருப்பூர் :

      பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு செய்து பயனடையலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 250 ச.மீ. முதல் 1000 ச.மீ. வரையிலான பண்ணைக்குட்டையில் மீன்குஞ்சு இருப்பு செய்து மீன் தீவனம் உள்ளீட்டு செலவினம் மேற்கொள்ள ஒரு அலகிற்கு ரூ.36 ஆயிரம் மற்றும் செலவினத்திற்கு 50 சதவீத மானியத்தொகை ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

      ரூ.3 லட்சத்தில் புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.8 லட்சத்தில் நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும் வழங்கப்படும்.

      மேலும் ரூ.20 லட்சத்தில் உயிர்மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வழங்கவும், ரூ.20லட்சத்தில் குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வழங்கிட பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.8 லட்சமும், ரூ.10 லட்சத்தில் அலங்கார மீன்களின் மீன்விற்பனையக கட்டுமானத்திற்கு அதிகபட்சமாக பொது பிரிவிற்கு ரூ.4 லட்சமும்,1 ஹெக்டேர் பரப்பளவில் புதியமீன்குஞ்சு, வளர்ப்பு அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4லட்சத்து 20ஆயிரமும் வழங்கப்படும்.

      இதேபோல்1 ஹெக்டேரில்புதிய மீன்வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து40 ஆயிரமும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.6லட்சத்து 60 ஆயிரமும், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் 1 அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.3 லட்சமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4½ லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன்வளர்ப்பு செய்து பயன்பெறலாம்.

      எனவே விருப்பமுள்ளவர்கள் தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் (தொலைபேசி எண்.89037 46476) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
      • கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

      தாராபுரம் :

      காங்கயம் அருகே வடசின்னாரிபாளையம் காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50). திருமணமான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் செல்லமுத்து கடந்த பல வருடங்களாக அதிகளவில் மது குடித்து வந்ததாகவும், அதிலிருந்து மீள முடியாமல் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது தோட்டத்தில் இருந்த பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

      இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு கொடுவாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் பாப்பையின் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராஜேஷ் (வயது 35). காய்கறி வியாபாரியான இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த சர்மி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷத் (13) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

      ராஜேஷ் தனது பெற்றோருடன் பாப்பையின் புதூர் பகுதியில் வசித்தபடி வியாபாரத்தை கவனித்து வந்தார். அடிக்கடி மனைவி மற்றும் மகனை நினைத்து சில நேரத்தில் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு தாய் ராணி ஊருக்கு சென்றபோது ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

      • ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
      • 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்

      காங்கயம் :

      பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 161 கி.மீ., கடந்து காங்கயம் பகுதியை அடைந்துள்ளது. இதனால் கீழ் பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

      பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி .கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே அணை நிரம்பியதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த, 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 120 நாட்கள் இந்த தண்ணீர், 2,300 கன அடி வீதம் திறக்கப்படும்.தண்ணீர் திறக்கப்பட்ட நான்கு நாளில் நேற்று மாலை காங்கயம், நத்தக்காடையூர், பொடாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் கடந்து சென்றது. வழக்கமாக 6 நாட்களுக்குப் பின்பே அணையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது நான்கு நாளில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

      • 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது.
      • சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

      ஆத்தூர்:

      சேலம் மாவட்டம் கெங்கவல்லி 4 ரோட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. காந்தி. இவரது மகன் சதீஷ் (வயது 42), விவசாயி . இவரது மனைவி வனிதா (28), தனியார் பள்ளி ஆசிரியர், இவர்களுக்கு சர்வேஷ் (8) என்ற மகன் உள்ளார்.

      ரூ.20 லட்சம் கடன்

      இந்த நிலையில் சதீசுக்கு 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கழுத்து மற்றும் கை அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ் இறந்து கிடந்தார். இதனை பாத்த மனைவி வனிதா கதறி துடித்தார். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

      போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

      தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆத்தூர், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர். மேலும் மோப்ப நாய் லில்லி சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த மோப்ப நாய் கடம்பூர் பிரிவு ரோடு வரை சென்று திரும்பியது. தடயவியல் நிபுணர்கள் கைேரகை பதிவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

      பின்னர் கெங்கவல்லி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வீரகனூர் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

      இதற்கிடையே சதீஷ் சாவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு-

      பரபரப்பு தகவல்கள்

      கடன் தொல்லையில் தவித்த சதீஷ் கெங்கவல்லியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விஷம் கேட்டதும், அந்த கடையில் விஷம் இல்லை என்று கடையில் இருந்தவர் கூறிய நிலையில் அருகில் உள்ள கடைக்கு சென்று புதிதாக கத்தி வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது.

      மேலும் நாற்காலியில் அமர்ந்த படியே கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்ததற்கான ஆதாரங்களும் இருப்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

      ×